அக்டோபர் 14 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
வேர்கள்
முன்னுரை
கட்டுரை
திரைவிமர்சனம்
முத்தொள்ளாயிரம்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  நாங்க ரெடி நீங்க ரெடியா ? : 24 மணி நேரம்
  -
  | Printable version |

  இனி வரும் வாரங்களில், ஒவ்வொரு வாரமும் நமக்கு கடிதம் எழுதும் வாசகர்களில் சிலரை தேர்ந்தெடுத்து ஒரு கேள்வி கேட்போம். அதற்கு வாசகர்கள் தங்கள் பதிலை (தமிழில்) சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதி அனுப்பலாம். கேள்வியை அனுப்பினால் கண்டிப்பாக பதில் அனுப்பியாக வேண்டுமென்பதில்லை. (முடியவில்லை என்று ஒரு வரி பதில் போட்டால் போதும். அதுவும் முடியவில்லையென்றால் பரவாயில்லை)

  இது வரை கடிதம் எதுவும் எழுதவில்லை ஆனால் இதில் கலந்து கொள்ள விருப்பமா? உங்கள் ஆர்வத்திற்கு எங்கள் நன்றி. உடனே feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்து ஒரு வரி போடுங்கள். வரும் வாரங்களில் உங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறோம்.

  பதிலை அனுப்பும் போது உங்கள் (சமீபத்திய) புகைப்படத்துடன் அனுப்பினால் ரொம்ப சந்தோஷம்!

  இதோ இந்த வார கேள்வி.

  உங்கள் ஆயுள் இன்னும் 24 மணி நேரத்தில் முடியப்போகிறது என்று கடவுள் உங்கள் கனவில் சொன்னால் என்ன செய்வீர்கள் ?


  ராமசந்திரன் உஷா

  RamachandraUshaகடவுளா என் முன்னாலா? ஆஹா! எத்தனை நாளாய் அந்த ஆளுக்காய் காத்திருக்கிறேன். மொதல்ல நல்லா நாலு கேள்விக் நாக்கை புடுங்கிக் கொள்ளுவதுப்போல கேட்டாதான் எம் மனசு ஆறும். ஆனா நல்லா தூங்கும்பொழுது. டொய்ன்னு ஒரு உருவம் முன்னால வந்து நின்னு எழுப்பினா எப்படி இருக்கும்? நாம தப்பிக்கிற வழிய வேற யோசிக்கணும்.

  "மகளே! நீ இன்னும் இருபத்திநாலு மணிநேரம்தான் உயிருடன் இருப்பாய்" என்ற சத்தம் கேட்டு விழித்தேன். எதிரில் மசமசவென்று ஒரு உருவம். அய்யோ திருடன்! பயத்தில் வாயில் இருந்து சத்தம் வரவில்லை. திரும்ப முதலில் சொன்ன அதே டயலாக். பக்கத்தில் பார்த்தால் குறட்டைவிட்டுக் கொண்டு ஆனந்த தூக்கத்தில் கணவர்.

  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, " நீ ... நீங்கள் யார்?" என்றேன்.

  "நான் தான் கடவுள்"

  கடவுள் என்றால் யார் கும்பிடுகிற கடவுள்.?"

  "ஆரம்பித்து விட்டாயா? அது மனிதர்களால் சொல்லப்படும் அஞ்ஞான வாதம். யாம் ஒருவனே! ஆதியும் அந்தமும் இல்லாதவன்"

  "நானோ நாஸ்திகவாதி! என்னைத் தேடி எப்படி வந்தீர்கள்?"

  மகளே! உன் கள்ளமில்லாத முகத்தைக் கண்டு பரிதாபப்பட்டு உண்மையை சொல்லலாம் என்று வந்தேன்"
  கடவுள் செய்த முகஸ்தூதியில் மயங்கி, " தாங்ஸ்! ஆனால் உம்மை எப்படி நம்புவது? நீங்கள்தான் கடவுள் என்று நிரூபியுங்கள்"

  "மகளே! அந்தமாதிரி ஜிமிக்ஸ்க்கு அப்பாற்பட்டவன் நான்"

  "சரி, ஒரு வரமாவது கொடுங்கள்"

  "நீண்ட ஆயுளைக் கொடு, என்ற வரம் மட்டும் கேட்கக்கூடாது"

  "சே! சே! அப்படி எல்லாம் ஏமாற்ற மாட்டேன். தொலைக்காட்சி தொடர் தெரியுமா?"

  "மகளே! நானோ சர்வேஸ்வரன். எல்லாம் அறிந்தவன். தொலைக்காட்சி தெரியும், அதில் தொடர்கள் வருகிறது என்ற செய்தி மட்டும் தெரியும். அதனால் தமிழக மக்களின் மூளை துருப்பிடித்துப் போகிறது என்ற கவலை தரும் விஷயமும் தெரியும்"

  "மெட்டி ஒலி என்ற தொடர் வருகிறதே நீங்களும் பார்க்கிறீர்களா?"

  "முட்டாள் பெண்ணே! இதையெல்லாம் உட்கார்ந்துப் பார்க்க எனக்கேது நேரம்?"

  " கோபிக்காதீர்கள். சன் டீவியில் மெட்டிஒலி என்று ஒரு தொடர் வருகிறது. அதை தினமும் பார்த்து, கண்ணீர்
  உகுத்துவிட்டுதான் தூங்குவேன். அது முடிந்ததும் என் ஆயுளை முடித்து விடு"

  "அவ்வளவுதானே? தந்தேன். பிடி வரத்தை! அந்த தொடர் முடிந்ததும் உன் உயிர் எடுக்கப்படும் " என்றுச் சொல்லி மறைந்தது கடவுள். நான் நிம்மதியாய் தூக்கத்தைத் தொடர்ந்தேன்.


  ஜெயந்தி சங்கர்

  Jayanthi Sankar24 மணிநேரம் ! முதலில் இந்தியாவிலிருக்கும் அம்மாவுக்குபோன் செய்து சின்ன வயதில் அடம் பிடித்துப் படுத்தியதற்கு இதுவரை கேட்காத மன்னிப்பைக்கேட்டுவிட்டு, பக்குவமாய் விஷயத்தையும் சொல்லி,. 'எல்லாரும் போகவேண்டியதுதாம்மா,.. முன்னாடியாரு, பின்னாடியாருன்னு வேணா மாறலாம்",என்றெல்லாம் சமாதானம் சொல்லிட்டு, கூடப்பிறந்த மூவருக்கும் ஒரு பொது மெயில்,.. உடனே போன் அலற ஆரம்பிக்கும்,.. அதில் பேசிக்கொண்டே ஒரு விரலால் எல்லா நெருங்கிய நட்புக்கும் ஒரு பொதுமடல், பிறகு மற்ற நண்பர்களுக்கும்.

  ஒரு மணி நேரமாயிருக்குமா? ! அதுக்கப்புறம், மெள்ளக் கழுத்துப்புருஷனுக்கு விஷயத்தச் சொல்லி, பரவால்லப்பா, ஒருநாள் எனக்காக முதலும் கடைசியுமா லீவு போடுன்னு சொன்னா, நிச்சயமா கேப்பார். ஏன்னா, அடுத்தநாள் கேக்க நான்தான் இருக்கமாட்டேனே,.. அதுனால,..ஆச்சா,.. உம்முன்னு மூஞ்சிய வச்சிண்டிருந்தா இவருக்கும் அம்மாக்கு சொன்ன அதே சமாதானம்,..

  அதுக்கப்புறம் வயத்துப்புருஷன்கள் ரெண்டு இருக்கே, அதுகளுக்குப் புரியவைக்கறதுக்குள்ள தான் நானே வேறு யாராவது சமாதானப் படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாமே. பெரிசு பேசாமயே புழுங்கும். சின்னது பேசிப்பேசியே (புலம்பியே !)படுத்தும். "இனிமே 'நாக்' பண்ண யாருமே இருக்கமாட்டாடா,.. எதுக்கு அழுகை?", என்று சிரிக்கவைக்க முயற்சித்து ஒரு வழியா ரெண்டையும் ஸ்கூலுக்கு மட்டம்னு சொல்லி தாஜாப்பண்ணி,..

  "எல்லாரும் இன்னிக்கு யீஷ¤ன் மஹாமாரியம்மன் கோவிலுக்குப்போயிட்டு அப்படியே ஸ்ரீ நாராயணகுரு முதியோர் இல்லத்துக்குப் போகணும்," ரெடியாகச்சொல்லி குளியலைறைக்குள் நுழைவேன். வெளியில் வந்து பாந்தமாய் (தலைகாணியுறை சல்வார் கமீசை மறந்து) கடைசி முறையாய் மிகவும் பிடித்த சாரியைக் கட்டிக்கொண்டு,.. கிளம்புவேன். மூவரையும் அவ்வப்போது தட்டிக்கொடுத்து தாஜா செய்துகொண்டே இரண்டு இடத்திற்கும் போவேன். கோவிலில் பொதுவாய் உலக சமாதானத்திற்கு வேண்டிக்கொள்வேன். முதியோர் இல்லத்தில் (துணைவர் மற்ற நேரங்களில் அலறக்கூடும் ! ) $5000 செக் வெட்டிக்கொடுப்பேன். ம்,.. மீதிப்பணம், பட்டுப்புடவை, நகை எல்லாவற்றையும் அப்படியே வசதிகுறைந்தோருக்குக் கொடுக்கச்சொல்வேன். தலையைத்தலையாட்டுவார். வேறு வழி கட்டைசி ஆசையாயிற்றே !

  நாலு மணிநேரமாச்சா,.. அதுக்கப்புறம், வீட்டுக்கு வந்து போனை எடுத்து வைத்துவிட்டு பிடித்த கர்நாடக சங்கீதம் (மற்ற நேரங்களில் ரெண்டு பிள்ளைகளும் லிங்கின் பார்க் போடணும், எமினெம் போடணும்னு போட்டிபோடும், இப்போ பேசாம விட்டுக்கொடுக்கும்,..) கேட்டுக்கொண்டே ஒவ்வொருவருக்கும் பிடித்த சமையலைச் சமைக்கவேண்டும். க்ளீனிங்க் அன்று கட். சாப்பிட்டு விட்டு வீணையை எடுத்துக்கொண்டு ஸ்ருதிசேர்த்து ஒரு மணிநேரம் வாசிப்பேன்.

  மீதி 17 மணிநேரமிருக்கோ? சரி,.. கடைசியாக பாக்கியிருக்கும் கட்டுரை/கதைகள் திருத்தம் பார்த்து கெடுவுக்கு முன்பே அனுப்பிவிட்டு ,.மறுபடியும் முடிந்தால், மூடும் இருந்தால் புதிதாய் எழுதுவதற்கு முயல்வேன்(இருக்காதோ ! ). இதுவரை தொந்தரவு செய்யாமல் இருந்த (! ?) மூவரும் மாலையில் வெளியில் போய் சாப்பிடக்கிளப்புவேன். கோமளாஸ் தான் ! சாதாரணமாய் முணுமுணுக்கும் இவர்கள் இப்போது வருவார்கள்.

  மீதி இருக்கும் 10 மணிநேரத்தில் ஆறு மணிநேரம் தூக்கத்திற்கு. துக்கத்திலேயே போய் விடலாமே (பேராசைதான் ! )மீதி நான்கு மணிநேரத்தில் கடைசியாக மீண்டும் படிக்க ஆசைப்படும் திஜா புத்தகங்களின் சில பக்கங்களேனும்,..,.அப்பறம்,.. 'நன்னாப்படிக்கணும், சமத்தா இருக்கணும்' போன்ற அட்வைஸ்கள் பிள்ளைகளுக்குக் கடைசியாக,.. அப்பறம்,.. ஒரு பேப்பரில் 'பாஸ்போர்ட்' போன்ற முக்கிய ஆவணங்கள் எங்கு இருக்கின்றன (தன்னுடையதே எங்கிருக்கு என்று இவருக்குத் தெரியாது)என்று எழுதி,. பேந்தப்பேந்த முழிக்கும் சங்கரின் கைகளில் திணித்துவிட்டு எல்லோருக்கும் 'கு நைட்' இல்லையில்லை 'குட் பை',..


  கிரி

  கடவுள்? கனவு ??

  முதலிலேயே இரண்டும் அடிபட்டுப் போகின்றன. அது என்ன கடவுள் எப்பவும் கனவிலேயே வருவது?? அல்லது கடவுள் என்பதே கனவுதானோ?

  சரி, அதை அப்படியே மருத்துவர் சொல்வதாக வைத்துக்கொண்டு பதில் சொல்லலாம்.

  முதலில், 24 மணிக்குள் முடிக்க முடியாத நிலுவை வேலைகளை யார் தலையிலாவது கட்டுவேன் (அதாவது எல்லா வேலைகளையும்னு நீங்கள் பொருள் கொண்டால் நான் பொறுப்பல்ல). மீதமிருக்கும் வேலைகளை முடிக்கப் பார்ப்பேன்.

  முக்கியமாக என் தவறுகளால் பாதிக்கப் பட்டவர்கள் உண்டா எனப் பார்த்து முடிந்தால் சரி செய்யப் பார்ப்பேன். முடியாது என்றால் ஒரு மன்னிப்போடு நிறுத்திக் கொள்வேன்.
  எப்படியும் போகப்போகிறேன் என்கிறபோது, சில காரியங்கள் செய்துவிடலாமே: என்னென்ன என்று பார்க்கலாம்:

  * பிடித்த திரைப்படப் பாடல்கள் தொகுப்பை எடுத்து கேட்டுக் கொண்டே மற்ற வேலைகளைத் தொடரலாம்

  * முதலில் ஒரு நல்ல தொகையை  உதவும் கரங்கள்(சென்னை) போன்ற அமைப்புகளுக்கு தரலாம் - (இறந்த நாள் பரிசு??)

  * நானறிந்த நல்லவை ஏதேனும் இருந்தால்(எனக்குத் தெரிந்து அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, பயப்படாதீர்கள்) முதல் வேலையாக மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம் (கேட்டுக் கொள்ள யாரும் முன்வராவிட்டால் அவசரமாக எழுதி வைத்துவிடுவேன்; விடமாட்டேன்)

  * தொ(ல்)லைக் காட்ச்சிக்கு ஒரு மணி நேரம் தேவை

  * வெகுகாலமாக தொடர்பில் இல்லாத நண்பர்கள், உறவினர்களிடம் தொலைபேச வேண்டும்

  * என்மேல் கோபமாக இருக்கும் சிலருக்கும் தொலைபேசவேண்டும் - நான் போகும் செய்தியைக் கூறி அவர்களை மகிழச் செய்யலாம்

  என்ன, அதிகபட்சம் நான்கு மணி நேரம் ஆகுமா இதற்கெல்லாம்?

  * எப்படியும் போகப் போகிறேன், மகிழ்ச்சியாகப் போகலாமே - முதலில் உற்சாக பானம்

  * கண்ணுக்குத்தெரிந்தே மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும், தொல்லைப் படுத்திக்கொண்டிருக்கும் சிலரை நையப் புடைக்க வேண்டும்; முடிந்தால் என் கூடவே கூட்டிக் கொண்டு போகலாம்

  இது போதும்; 24 மணி நேரம் நெருங்கிவிடும்

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |