அக்டோபர் 19 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
இது ஆம்பளைங்க சமாச்சாரம் : குளிர்
- மா சிவகுமார்
Save as PDF | | Printable version | URL |

தமிழ் நாட்டிலிருந்து வடஇந்தியாவுக்கு அல்லது அதை விடக் குளிர் அதிகமாக உள்ள நாடுகளுக்கு போகும் போது நாம் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை குளிர். நம் ஊரில், குளிரை எதிர் கொள்ள கம்பளியால் நெய்யப்பட்ட மேலாடைகள்தான் வயதானவர்களும் நோயாளிகளூம் போட்டுக் கொள்வார்கள். என்ன டிசம்பர் குளிரிலும் அரைக்கை பனியனோடு சுற்றும் வீரப் பரம்பரை நமக்கு உண்மையான குளிரை எதிர் கொள்ளும் தயாரிப்புகள் இருக்காது.

Cold Layer Clothesபூச்சியத்துக்குக் கீழே வெப்பநிலை இறங்கி விடும் பகுதிகளுக்குப் போய் முதல் முதலில் வாழ ஆரம்பிக்கும் போது குளிரைத் தாங்கிக் கொள்ள சரியான அறிவுரைகள் கிடைப்பதில்லை. யாராவது நண்பர்களோ மிக நெருங்கியவர்களோ பரிதாபப்பட்டு எடுத்துச் சொன்னால் ஒழிய சரியான உடையணியும் முறை தெரியாமலேயே குளிரில் பல்லை இடுக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்போம். உள்ளூர் ஆட்கள், பல அடுக்குகளாகத் துணிகள் அணிந்து கொள்வது முதலில் நமக்குப் புரியாது. வெளியிலிருந்து பார்க்கும் போது சட்டை, பேன்டு போட்டு மேலே ஒரு ஸ்வெட்டர், அதற்கு மேல் ஒரு மேல் கோட்டு போட்டு வருவதுதான் தென்படும்.

'எங்கள் ஊர் மார்கழிக் குளிரையே பார்த்தவன். அதிகாலையில் எழுந்து பச்சைத் தண்ணீரில் குளித்து விடுபவன் நான்' என்ற வறட்டுப் பெருமைகளை ஒதுக்கி வைத்து விட்டு நல்ல தரமான, வீசும் குளிர் காற்றை ஊடுருவ விடாது தடுக்க வல்ல மேலங்கி ஒன்று வாங்கி, குளிரில் வெளியில் போகும் போது தவறாது அணிந்து கொள்ள வேண்டும். காசு செலவளித்து மேல் ஆடைகளை வாங்கிக் கொண்டாலும், உள்ளூர்க்காரர்கள் போல வெதுவெதுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க முடிவதில்லை. சூடுபடுத்தப்பட்ட அலுவலகம், வெப்பநிலைக் கட்டுப்பாடு உள்ள வாகனம் என்று வெளிஉலகை எதிர்கொள்ளாமலேயே சமாளித்து விடுவது வரை இந்த அளவிலான ஆயத்தம் போதுமானது.

பொதுப் போக்குவரத்தில் போக சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாலோ, சூடுபடுத்தப்படாத கட்டிடங்களில், தொழிற்சாலைகளில் பணி புரிய வேண்டியிருந்தாலோ, இன்னும் பல அடுக்கு ஆடைகளை அணிந்து கொள்வது மிக அவசியமாகும். நம் ஊரில் உள்ளாடைகள் விற்பது போல கழுத்தை மூடி முழுக் கையையும் பொதிந்து கொள்ளும் பனியனும், பேன்டு போல கால் முழுவதையும் பொதியும் உள்ளாடையும் கிடைக்கின்றன. வழக்கமாக அணியும் உள்ளாடைகளின் மேல் warmer எனப்படும் இந்த உள்ளாடைகளையும் அணிந்து கொள்ள வேண்டும். இவற்றுக்கு மேல் கடும் நிறத்திலான சட்டை, பேன்டு அணிந்து கொண்டு, அப்புறம் கம்பளி மேலாடை அணிந்து கொள்ள வேண்டும்.

Jacketஒரு சதை செருப்பு வாங்கினால் அது பிய்ந்து போவது வரை ஆண்டு முழுவதும் போட்டு அடிக்கும் நம்ம ஊர் பொருளாதாரம் இந்தக் குளிருக்கு உதவாது. குளிர்காலத்துக்கு என்று கெட்டியான தோலில் தைக்கப்பட்ட காலணிகளை வாங்கிக் கொள்ள வேண்டும். காலுறைகளும் கம்பளியால் பின்னப்பட்டவைகளாக அணிய வேண்டும். பனிப் பொழிவில் நடக்க நேரிட்டால் அதற்கான முழங்கால் வரையிலான காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும். கைகளுக்கு உறை, முகத்தை மூட ஒரு கம்பளித் தொப்பி இவற்றையும் மாட்டிக் கொண்டு இன்னும் குளிர் அதிகமாக இருந்தால், சட்டைக் கழுத்துப் பட்டைக்கும் தலைக் குல்லாய்க்கும் நடுவில் இருக்கும் இடைவெளிக்கு ஒரு கம்பளி சால்வையை சுற்றி விட்டுக் கொள்ளலாம். தவறாமல் கழுத்தில் டை கட்டி பட்டன்களின் துவாரங்கள் வழியே குளிர் காற்று உள்ளே போகும் வழியையும் அடைத்து விடுவது அவசியம். இது எல்லாவற்றையும் போட்டுக் கொண்டு குளிரான தெருவிலிருந்து சூடுபடுத்தப்பட்ட அலுவலக அறைக்குள் போய் விட்டால், சூட்டில் வெந்து விடாமல் இருக்க ஒவ்வொரு அடுக்காகக் கழற்றி வைத்து விடும் வசதியும் நமது உடையணிதலில் இருக்க வேண்டும்.

http://www.indianchild.com/dresses/winter-clothing.htm என்ற சுட்டியில் ஆங்கிலத்தில் விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

| |
oooOooo
                         
 
மா சிவகுமார் அவர்களின் இதர படைப்புகள்.   இது ஆம்பளைங்க சமாச்சாரம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |