அக்டோபர் 21 2004
தராசு
கார்ட்டூன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
மேட்ச் பிக்சிங்
முத்தொள்ளாயிரம்
கவிதை
கட்டுரை
திரைவிமர்சனம்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
வானவில்
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  நாங்க ரெடி நீங்க ரெடியா ? : விளையாட்டு துறை மந்திரி
  -
  | Printable version |

  இனி வரும் வாரங்களில், ஒவ்வொரு வாரமும் நமக்கு கடிதம் எழுதும் வாசகர்களில் சிலரை தேர்ந்தெடுத்து ஒரு கேள்வி கேட்போம். அதற்கு வாசகர்கள் தங்கள் பதிலை (தமிழில்) சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதி அனுப்பலாம். கேள்வியை அனுப்பினால் கண்டிப்பாக பதில் அனுப்பியாக வேண்டுமென்பதில்லை. (முடியவில்லை என்று ஒரு வரி பதில் போட்டால் போதும். அதுவும் முடியவில்லையென்றால் பரவாயில்லை)

  இது வரை கடிதம் எதுவும் எழுதவில்லை ஆனால் இதில் கலந்து கொள்ள விருப்பமா? உங்கள் ஆர்வத்திற்கு எங்கள் நன்றி. உடனே feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்து ஒரு வரி போடுங்கள். வரும் வாரங்களில் உங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறோம்.

  பதிலை அனுப்பும் போது உங்கள் (சமீபத்திய) புகைப்படத்துடன் அனுப்பினால் ரொம்ப சந்தோஷம்!

  இதோ இந்த வார கேள்வி.

  நீங்கள் இந்திய விளையாட்டு துறை மந்திரியாக இருந்தால், விளையாட்டு துறையை எப்படி மேம்படுத்துவீர்கள் ?


  - நிர்மலா

  ரொம்ப கஷ்டமான வேலை...ஆனா மந்திரி பதவிங்கறீங்க...சரி செஞ்சுட்டாப் போச்சு.

  முதல்ல இந்த விளையாட்டுக்குத் தயார் பண்ணறதெல்லாம் பள்ளிக் கூடத்தில் முதல் வகுப்பிலயே ஆரம்பித்து விட வேண்டும். பரிட்சை கூட வைக்க வேண்டும். பாடம் படிக்கிற அதே சீரியஸ்னஸோட. பத்து வயசுக்குள்ள ஆர்வம் இருக்கிற குழந்தைகளை தனியா பிரிச்சு, அதுக்காக அமைக்கப்படப் போற பள்ளிக் கூடத்தில் தயார் பண்ண வேண்டும். அங்கேயும் தயாராகின்ற அளவுக்கேற்ற மாதிரி அந்தந்த லெவல் போட்டிகளில் பங்கு பெற அனுப்ப வேண்டும்.

  இந்தப் பள்ளிகளில் கிரிக்கெட்டைக் கொஞ்சம் கண்டுக்காம விட்டுவிட வேண்டும். பள்ளிப் படிப்பு முடிந்ததும் விளையாட்டுக் கல்லூரிகளில் பயிற்சியை தொடரலாம். பெரிய அளவில் போட்டிகளில் பங்கு பெற இந்த கல்லூரி மாணவர்களாக இருக்க வேண்டியது கட்டாயம். இதில் படித்தாலும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று பெற்றோர்களுக்கு நம்பிக்கை வர வைக்க வேண்டும். இல்லைன்னா குழந்தைகளை அந்த பள்ளிக்கு அனுப்பவே மாட்டாங்களே!

  இதெல்லாம் நீண்ட காலத்திட்டங்கள். அவசர அவசரமா செய்ய வேண்டியது...விளையாட்டுத்துறையில் முன்னாள் விளையாட்டு வீரர்களை அதிக அளவில் பதவியில் அமர்த்த வேண்டியது. அதிலும் முக்கிய பதவிகளில். அப்போ தான் விளையாட்டு வீரர்களை வெட்ட வெளியில் படுக்கச் சொல்லி விட்டு அதிகாரிகள் ஏ.ஸி அறையில் தங்குகிற கொடுமையெல்லாம் குறையும். இத்தனையும் சொல்லிட்டு அப்புறம் நான் மந்திரி பதவியில் உட்கார்ந்திருந்தால் சரியாகுமா? ஆகவே வருங்காலத்தில் இந்தியா பதக்கங்கள் வாங்கிக் குவிக்க, நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்!


  - எஸ். கே

  முதலில் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெளிவு படுத்த விரும்புகிறேன் - இந்தத்துறைக்கு அமைச்சராவதற்கான தகுதி எனக்கு என்ன இருக்கிறது என்பது பற்றி! அரசுப்பணியில் அடிநிலை வேலைக்குக் கூட தகுதி அடிப்படை உண்டு, ஆனால் மந்திரி ஆவதற்கு அதுபோல் எதுவும் கிடையாது. ஒருவர் நான்காம் நிலை (Group 'D') ஊழியராவதற்கான தகுதியில்லாமலிருக்கலாம், ஆனால் அவரே அந்தத்துறை அமைச்சராகி கொள்கை அளவில் பெரிய முடிவுகளை எடுக்கலாம்!

  ஆனால் அதுபோல என்னைக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். எனக்கு நிறையத் தகுதி இருக்கிறது. சிறு வயதில் கோலி குண்டு, கிட்டிப்புள், பம்பரம் (இழுப்பு, சாட்டை, குத்து, 'அபீட்' இதிலெல்லாம் நான் "கிங்"! - அப்ப, மேட்டுத்தெரு மாலாவோட ஆடிய "அப்பா-அம்மா" விளையாட்டு? - சீய்ய்ய், இதெயெல்லாம் நம்பாதீர்கள். இவை எதிக்கட்சிகளின் பொய்ப்பிரசாரம்!). இது தவிர கிரிக்கெட், டென்னிஸ், WWF போன்ற விளையாட்டுக்களை டி.வியின் முன்னால் கையில் சுடச்சுட பஜ்ஜியுடன் எவ்வளவு முறை பார்த்திருக்கிறேன்! மேலும் டென்னிஸ் பந்தை வைத்துக்கொண்டு சந்து முனையில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். டென்னிஸ் பற்றி என் அறிவு எவ்வளவு தெரியுமா? முதன் முதலில் நான் பார்த்தது ஸ்லோபடான் ஸிவொஜினோவிச் Vs இவான் லெண்டில் மேட்ச்தான். ஆஹா, அந்த யூகோஸ்லாவியர் எவ்வளவு ஜோராக விளையாடி ஒவ்வொரு பந்தையும் நெட் மேலே என்னமா "டமால், டமால்"னு அடிச்சார். கடைசீல இவான் லெண்டில்தான் கெலிச்சாருன்னுட்டாங்க! இப்ப சொல்லுங்க, நான் ஏன் விளையாட்டு மந்திரி ஆகக்கூடாது? ஆனால் ஒரு கிரிமினல் வழக்கு கூட கிடையாதேன்னு நீங்க முணுமுணுக்கிறது கேட்குது - ஏன் அவசரப்படரீங்க. அததுக்கு நேரம் இருக்கு (Everything in its own good time!).

  ஆச்சு, அமைச்சராயாச்சு. பதவிப்ரமாணம், ர.கா.பி எல்லாம் எடுத்து, சுற்றமும் சூழலும் டி.வி-யில் பார்த்தாச்சு. இனி ஏதாவது விளையாட்டுத் துறைக்கு சேவை செய்வோமா!

  முதலில் நம் நாட்டின் இன்றைய நிலை என்ன?

  100 கோடி ஜனங்கள் கொண்ட இந்தியா சுமார் 70 பேரை ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸுக்கு அனுப்பி, அவர்கள் ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தைத் தூக்க முடியாம தூக்கிகிட்டு வந்து, நாமெல்லாம் நொந்து கிடக்கிறது தெரிஞ்ச கதை. அந்த வெள்ளிகூட ராதோர் (இது பாதி "ர்", பாதி "ட்" உச்சரிப்பு - தமிழில் இதற்கு எழுத்து இருக்கான்னு தெரியல்ல, எதுக்கு வம்பு!) என்ற தனி நபர் முயற்சியால் அமைந்த சாதனை என்கிறார்கள். நம்மைவிட 30% மட்டுமே கூட மக்கள்தொகை கொண்ட சீனா 63 பதக்கங்களை அறுவடை செய்திருக்கிறது. அங்கு பயிற்சி முறைகள் மிகக் கடுமையானவை என்கிறார்கள். நாமும் அவ்வாறு செயல்படலாமே.

  ஆட்டாம்புழுக்கை சைஸிலெ இருக்கிற நாடுகள்கூட பதக்கத்தை அள்ளும்போது இந்தியா எங்கே இருக்குன்னு மெடல் பட்டியல்ல கடைசிலேர்ந்து தேடவேண்டியதாயிருக்கு!

  "உலக அழகி", "அண்டவெளி அழகி" (Miss Universe) போன்ற பட்டங்களையெல்லாம் "அஸால்ட்டா"க வெல்லும் இந்தியர்கள் ஏன் மெடல் விஷயத்தில் மட்டும் கோட்டை விடுகிறார்கள்?

  இந்த நிலையின் அடிப்படைக் காரணங்களை நானே ஆராய்வேன். துணை, இணைச் செயலர்கள் எழுதி வைத்ததை மட்டும் வாசித்துவிட்டு சொந்த மாநிலத்துக்குச் சென்று கோஷ்டி அரசியல் செய்யமாட்டேன்.

  முதலில் ஒலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டுக்கள் போன்ற பெரிய போட்டிகளில் (மற்றும் எல்லா நிலைகளிலும்) பங்கெடுப்போர்களை சரியான முறையில் தேர்வு செய்வேன். வேண்டியவர்கள், உறவினர்கள் என்ற அடிப்படையெல்லாம் தவிர்த்து (will eliminate favouritism and nepotism). இவ்வகைத் தேர்வுகளில் ஊழல் நடக்காமலிருக்க நெறி முறைகளை ஏற்படுத்தி அவற்றை வெளிப்படையாக மக்கள் நம்பும் வகையில் அமைப்பேன் (transparent). இதில் நடப்பதாகக் கூறப்படும் அரசியல் மற்றும் ஊழலை ஒழித்தாலே பிரச்னை பெருமளவில் தீர்ந்துவிடும்!

  "சுண்ணாம்பு காப்பணம், சுமைக்கூலி முக்காப்பணம்" என்பதுபோல் போட்டிகளில் பங்கெடுப்போரைவிட அலுவலர்கள், மேலாண்மையினர், வேப்பிலை கோஷ்டியினர், கைத்தடிகள் போன்றவர்கள்தான் அதிகம். அவர்கள் கோட்டைப் போட்டுக்கொண்டு தொப்பையைத் தூக்கிகொண்டு வீரர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்காமல் இவர்களே நன்கு அனுபவிக்கும் நிலை ஏற்படாமல் பார்த்துகொள்வேன். வீரர்கள்-ஏனையோர் விகிதம் (signal to noice ratio - போல!) என்ற விதியை செயல்படுத்தி கொசுறுகளைக் குறைப்பேன்.

  பெற்றோர்களிடம் பிரசாரம் செய்து விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டும், மற்றும் திறமை வெளிப்படும் சிறார்களை முறைப்படி வல்லுனர்களைக்கொண்டு பயிற்சி கொடுக்கும் முறையை செயல்படுத்துவேன். உலகத்தரம் கொண்ட பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தி அவை சிறந்த முறையில் செயல்படும் வகையில் நிர்வாக முறைகளை அமைப்பேன்.

  மக்களுக்கு கிரிக்கெட்டின்மேல் உள்ள மோகத்தைப் பயன்படுத்தி cross-subsidy என்ற முறையில் அதில் கிடைக்கும் மிகையான செல்வத்தை மற்ற விளையாட்டுக்கள் மற்றும் தடகள வீரர்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்துவேன்.

  இந்திய ஒலிம்பிக் குழு, கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய ஹாக்கி கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம் போன்ற அமைப்புக்களை சரியாகப் பணியாற்றும் வகையில் மாற்றியமைப்பேன். அந்த அமைப்புக்கள் அதிகாரிகளின் சுய முன்னேற்றம் மட்டுமே குறிக்கோள் என்று செயல் படாமல் உண்மையிலேயே விளையாட்டுக்களை மேம்படுத்த முயலும் சூழ்நிலையை ஏற்படுத்துவேன். அதற்கு அந்தக்குழுக்கள் ஒத்துழைக்கவில்லையென்றால் விளையாட்டு வீரர்களையே கொண்ட அமைப்புக்களுக்கு (Association of players and athletes) அங்கீகாரம் கொடுத்து அவைகள் நேரடியாக போட்டிகளில் பங்கெடுக்கும் நிலையை அமைப்பேன்.

  விளையாட்டு நிர்வாகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புக்களின் தலையீடு அதிகமில்லாமல் அந்தத் துறையைச் சார்ந்தவர்களே செம்மைப் படுத்தி உரிய முறையில் செயல்பட ஆவன செய்வேன். அரசின் செயல்பாடு ஒரு இணைக்கரமாக (playing the role of an enabler and a facilitator) இருக்குமேயன்றி மேலாதிக்க உணர்வுடன் அமையாது என்னாட்சியில்!

  பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உடற்பயிர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்க வைப்பேன். விளையாட்டு மைதானங்கள் கட்டாயம் இருக்கும்படி சட்ட அமைப்பு ஏற்படுத்துவேன்.

  நானே மீண்டும் மீண்டும் அத்துறை அமைச்சராக அலங்கரித்து என் லட்சியமான, இன்றைக்கு மென்பொருள் துறையில் இருப்பதுபோல் விளையாட்டுத்துறையிலும் நம் நாடு முன்னிலை அடையவேண்டும் என்பதைப் பூர்த்தி செய்வேன் என உறுதி கூறுகிறேன்!

  கென்னடி சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். என்னால் விளையாட்டுக்கு என்ன மேம்பாடு ஏற்பட்டது எனபதைக் கேளுங்கள். நான் என்னென்ன விளையாட்டுக்கள் விளையாடுகிறேன் என்பதைக் கேட்க முற்படாதீர்கள்!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |