அட்டோபர் 27 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
ஜன்னல் பார்வைகள்
துணுக்கு
அறிவிப்பு
திரைவிமர்சனம்
கவிதை
கட்டுரை
திரையோவியம்
கேள்விக்கென்ன பதில் ?
தொடர்கள்
அடடே !!
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
துணுக்கு : ஒருவனே பாடுவேன்
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

Bharathiபாரதியார் ஒருநாள், குவளைக்கண்ணன் பாராயணம் செய்யும்போது "கண்ணா, நீ பாராயணம் செய்யும் இந்த நாலாயிரம் பாடல்களை எத்தனைபேர் சேர்ந்து பாடியிருக்கிறார்கள் தெரியுமா ?" என்று கேட்டார்.

"பதிரோடு ஆழ்வார்களும், திருவரங்கத்து அமுதனாரும், ஆண்டாளும் சேர்ந்து பாடியதுதான் இந்த நாலாயிர திவ்வியப்பிரவந்தம்" என்று பதில் சொன்னார் குவளைக்கண்ணன்.

"பதிமூன்று பேர் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களா ? கண்ணா, நீ வேண்டுமானால் பாரேன், நான் ஒருவனே ஆறாயிரம் பாடல்கள் பாடப் போகிறேன்" என்றார் பாரதியார்.

குவளைக் கண்ணன், "சுவாமி, காலம் கலிகாலம். நாமெல்லாம் ஆயுசு குறைந்தவர்களே. மேலும் ஒரு தனிமனிதன், ஆறாயிரம் பாடல்கள் பாடுவது எளிதல்ல. நான் உங்களால் பாட முடியாது என்றோ, புத்திசாலித்தனம் கிடையாது என்றோ சொல்லவில்லை. ஏதோ எனக்குத் தோன்றியதைக் கூறினேன்" என்றார் வினயமாக.

"நீ வேண்டுமானால் பார்" என்று சூளுரைத்த பாரதி, "பாரதி ஆறாயிரம்" என்று ஒரு நூல் எழுத ஆரம்பித்தார். அந்த நூலில் அவர் அறுபத்தி ஆறு பாடல்களே எழுதி முடித்தார். காலன் வந்துவிட்டான். "பாரதி ஆறாயிரம்" என இருந்திருக்கக்கூடிய நூல், "பாரதி அறுபத்தி ஆறு" எனப் பெயர் பெற்றது. ஆனால், இந்த அறுபத்தி ஆறு பாடல்களும் மணிமணியானவையாக உள்ளன. பாரதியை அறிய இவை மிகவும் பயன்படுகின்றன.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |