அக்டோபர் 28 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
திரைவிமர்சனம்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
திரையோவியம்
அறிவிப்பு
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : சுருங்கி வரும் உலகம்
  - ஜெயந்தி சங்கர்
  | Printable version |


  கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப்போனால் 41.5 கிலோமீட்டரும், வடக்கிலிருந்து தெற்கு வந்தால், 22.5 கிலோமீட்டரும் நீளமும் தான் இருக்கிறது சிங்கப்பூர். மக்கட்தொகை 4.1 மில்லியன். 75% சீனர்கள். 14% மலாய்க்காரர்கள். 8% இந்தியர்கள். இதில் தமிழர்களே பெரும்பான்மை. 3% மற்ற இனத்தவர்கள். இதில் தான் வெள்ளையர்களும் வருவார்கள். அதாவது மேற்கத்தியர்கள் ! வந்து போகும் சுற்றுப் பயணிகள் நிறையவே இருப்பார்கள்.

  Ritz Carlton Hotelஅக்டோபர் 10ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் நடந்த சம்பவம் நிறையவே வித்தியாசமானது என்றுதான் சொல்லவேண்டும். ஒருவர் தன் மூன்று நண்பர்களுடன் 'ரிட்ஸ் கார்ல்டன் மில்லெனியா ஹோட்டெல்' என்னும் அதி நவீன ஹோட்டெலுக்குச் சென்றார் பின்மாலைத் தேநீர் அருந்த. நண்பர்களில் ஒருவர் அதிநவீனத் தொழிநுட்பப் பாகங்கள் பலவற்றை வடிவமைத்துத் தயாரிக்கும் பெரிய கம்பெனியின் 'வைஸ் ப்ரெஸிடெண்ட்'. இந்த உயர் அதிகாரி சிங்கப்பூரைப்போன்ற சீதோஷண நிலை இருக்கும் எந்த நாட்டிலும் (ஷார்ட்ஸ்) அணிந்து பழக்கப்பட்டவர்.

  சம்பவத்தன்றும் வழக்கம்போல 'ஷார்ட்ஸ்' அணிந்திருந்தார். நால்வரும் அமர்ந்துகொண்ட சற்றுநேரத்திற்கெல்லாம் முழு கால்சட்டை அணிந்த அங்கு பணிபுரியும்/பரிமாறும் பெண் ஒருத்தி அருகில் வந்தாள். அவரது ஷார்ட்ஸைச் சுட்டிக்காட்டி விடுதியின் விதிகளில் விருந்தினர்கள் 'ஷார்ட்ஸ்' அணிந்து வருவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக்கூறினார். அதுமட்டுமில்லை. முழுக்கால் சட்டை ஒன்றைக் கொடுத்து அவரை மாற்றிக்கொள்ளவும் வலியுறுத்தினார். இது நண்பருக்குக் கொஞ்சம் வருத்தத்தைத்தான் கொடுத்திருக்கிறது. கொஞ்சம் யோசித்துவிட்டு வேறு வழியில்லாமல், அணிந்திருக்கிறார்.

  சில நிமிடங்களுக்குப்பிறகு நால்வருக்கும் அதிர்ச்சி ! சுற்றுமுற்றும் பார்த்ததில் சற்று தொலைவில் ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு ஒருவர் தேநீர் அருந்திக்கொண்டிருந்தார். 15-20 நிமிடங்கள் சென்றதும் அங்கு இருந்த கௌண்டரில் சென்று நால்வரில் ஒருவர் தன் நண்பருக்கு மட்டும் தனி 'கவனிப்பு' ஏன் என்று அங்கிருந்த பெண்ணிடம் கேட்டிருக்கிறார். அந்தப்பெண் உடனேயே விஷயத்தைத் தன் மேனேஜரிடம் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். சிறிது நேரத்திற்கெல்லாம் மேனேஜர் நண்பர்களின் மேசைக்கு வந்தார்.
  அந்தப்பெண்மணி மிகவும் பணிவாக விடுதியில் நான்கு முழுக்கால் சட்டைகள் தான் இருக்கின்றன என்றும் அதனால் தான் அந்த நபருக்குக் கொடுக்கமுடியவில்லை என்று சொல்லிவிட்டு போனார்.

  அந்த நபர் வெள்ளையர். நண்பர்கள் நால்வரும் ஆசியர்கள். நண்பர்கள் உயர் அதிகாரியிடமும் பேசினர். விதிமுறைகளை ஏன் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதிகாரி விதிகளை மறுபரிசீலனை செய்வதாகச் சொல்லியிருக்கிறார். நடந்ததற்கு வருந்தி நண்பர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்க முன்வந்திருக்கிறார். ஆனால், அவர்கள் 'ஒரு கண்ணை மூடிக்கொள்ள'த் தயாராயில்லை. மேற்கொண்டு ஏதும்பேச முடியாது கைகுலுக்கி விடைபெற்றாராம் அதிகாரி.

  சிங்கப்பூர் 47 வருடங்களாக ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து 39 வருடங்களாக சுதந்திர நாடாக இருக்கிறது. அரசாங்கமும் மக்களும் இன்றைய சிங்கப்பூரை உலகின் முன் நிறுத்த உழைத்திருக்கின்றனர். இங்கு பொதுவாக இனவேற்றுமையில்லை. இருந்தும் இன்னமும் வெள்ளைத்தோலைக் கண்டு தங்களைத் தாழ்த்திக்கொள்ளும் மனப்பான்மையும் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றது. இங்கிருக்கும் எல்லா இனத்தவருக்கும் ஐரோப்பியர்கள் அல்லது மேற்கத்தியர்களைக் கண்டால் கடவுளர்களைப் பார்க்கும் 'பக்தி' வந்துவிடுகிறது இயல்பாகவே. பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

  அக்டோபர் மாத ஆரம்பத்தில் நடந்த வேறு ஒரு சம்பவத்தை மெக்டோனல்ட் உணவகத்தில் ஒரு பெண்மணி பார்த்தார். இவர் வெஸ்ட் கோஸ்டில் இருக்கும் மெக்டோனல்ட் உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்தார். அங்கே ஓர் இளம் இந்தோனீசியப் பணிப்பெண் இடுப்பில் இடுக்கிக்கொண்ட குழந்தையோடு பேபி சேரை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு சென்றார். பெண்மணிக்கு இரக்கமேற்பட்டு சேரை எங்கே கொண்டுபோக நினைக்கிறார் என்று அவரிடம் கேட்டார். பணிப்பெண் கொஞ்சம் குழம்பி தூரத்தேயிருந்த மேசையைக்காட்டியிருக்கிறார். அங்கே கொண்டு நாற்காலியை வைக்க உதவியிருக்கிறார். அங்கே ஒரு ஆணும் அவரது மனைவியும் உல்லசமாக உணவைச்சுவைத்துக் கொண்டிருந்தனராம். இருவரும் அந்தப்பெண்மணியையே உற்று நோக்கினர். நாற்காலியை மேசையருகே வைத்துவிட்டுச் சென்றார் பெண்மணி. பணிப்பெண் குழந்தையை நாற்காலியில் உட்கார வைக்கத்
  திணரும்போது இருவரும் உண்பதை நிறுத்தாமல் உதவவும் முன்வராமல் உட்கார்ந்திருந்தனர். குழந்தை உட்கார்ந்ததும்,
  பணிப்பெண்ணை உண்ணச்சொல்லவில்லை. குழந்தைக்குப் பால் கொடுக்கச் சொன்னார். பணிப்பெண் என்பவள் இத்தகையோருக்கு இயந்திர மனுஷி போலும். அரசாங்கம் பணிப்பெண்களின் தகுதியை கூட்டவும், குடிமக்களின் நலன் கருதி மறுபுறம் பணிப்பெண்ணுக்கான வரி (levy) யைக்குறைக்கவும் செய்துகொண்டிருக்கும் அதே வேளையில், பணிப்பெண்ணையும் ஒரு சகமனுஷியாக நினைத்து நடத்த சிங்கப்பூரர்கள் பலவேளைகளில் தவறியேவிடுகிறார்கள்.  இதைப் பலநேரங்களில் ஆங்காங்கே கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.

  நியூஜெர்ஸியில் 'சிங்கப்பூர்' ஒன்று இருக்கிறதாம் நண்பகர்களே ! ஆமாம், ஒரு மோட்டெல் (motel) தான். பெயர் 'த சிங்கப்பூர் மோட்டெல்' ! சுத்தத்திற்குப் பெயர்போன சிங்கப்பூரின் பெயரை வைத்துக்கொண்டு ஒரே அசுத்தமாக நடக்கிறதாம் விடுதி ! இருப்பது நியூஜெர்ஸியிலிருக்கும் வைல்ட் வுட் க்ரெஸ்ட் வட்டாரத்தின் ஈஸ்ட் ஆர்கிட் ரோட்டில். ஆர்கிட் சிங்கப்பூரின் தேசிய மலர்! கீழை நாட்டுக்கலாசார வாசம் உடைய உள் அலங்காரத்தையும் பெயரையும் வைத்து இந்த விடுதிக்கும் சிங்கப்பூருக்கும் தொடர்பிருக்கிறது என்று நினைத்துவிடத்தேவையில்லை.

  ஜான் பட்டிடுசி என்பவருக்குச் சொந்தமான இந்த விடுதியில் தங்கிச்சென்ற விருந்தினர்களுக்கு ஏராளமான குறைகள் இருக்கின்றன. இதே நபர் வேறு ஒரு ஹோட்டெலை நடத்திக்கொண்டிருந்தபோதும் இதேபோல ஏராளமான புகார்கள் வந்தனவாம். உள்ளூர் பயனீட்டாளர் சேவை அலுவலகம் இந்த விடுதிக்கெதிராக கட்டுக்கட்டான புகார்களை வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறதாம். ஒருவருக்கு படுக்கைக்கடியில் கிடைத்தது என்ன தெரியுமா? ஜாடி நிறைய பழைய சால்ஸா (salsa). குளியலறையில் கால் வைக்கமுடியாத அளவிற்கு அசுத்தம் என்று இன்னொருவர் புகார் கொடுத்திருக்கிறார். மூன்றாமவரோ, "பேசாமல், காரிலேயே பொழுதைக்கழியுங்கள். இல்லை 'டெண்ட்' மடித்து இரவை ஓட்டுங்கள். ஆனால்,  'த சிங்கப்பூர் மோட்டெல்' க்கு மட்டும் போய் விடாதீர்கள்", என்று சொல்கிறார்.

  ஆனால், பெயர் காரணமாகவே இந்த விடுதி இப்போது சிங்கப்பூர் சுற்றுலாத் துறையின் தலைவலியாகிவிடக் கூடிய சாத்தியம் நிலவுகிறதாம். இருக்காதா பின்னே,..? சுற்றுலாத்துறை சிங்கப்பூரின் முதுகெலும்பில்லையா?! போன வருடம் சார்ஸினால் சிங்கப்பூர் சுற்றுலாத்துறை பட்ட அடி என்ன கொஞ்சநஞ்சமா?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |