அக்டோபர் 28 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
திரைவிமர்சனம்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
திரையோவியம்
அறிவிப்பு
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  திரைவிமர்சனம் : எம்.குமரன் சன் ஆ·ப் மகாலட்சுமி
  - மீனா
  | Printable version |

  ஜெயம் படத்தில் ஜெயித்த பிறகு ரவி நடித்து, அவரது தந்தை தயாரிப்பில் அண்ணன் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது. கதை என்னவோ எப்போதும் கேட்டு அலுத்துப் போனதாக இருந்தாலும் அதைப் படமாக்கியிருக்கும் விதம் அருமை.

  அம்மா நதியாவுடன் சென்னைக்கு சிறுவனாக வரும் ரவி, அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்து பெரிய கிக்பாக்ஸராகிறார். நதியா ஒரு கல்லூரியில் பேராசிரியை. மகனுடன் தோழி போலப் பழகும் அன்பான அம்மா. சிறு வயதில் எதற்காக தந்தையைப் பிரிந்தோம் என்ற விவரம் மகனுக்குத் தெரியாததால் அப்பாவை தன் அடிமனதிலிருந்து வெறுக்கிறார். மகனின் மனநிலையை மாற்ற நதியா முயற்சி செய்து தோற்றுப் போகிறார். கிக்பாக்ஸிங்கில் உலக அளவில் நடக்கும் போட்டியில் தான் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அம்மாவை விட்டு பிரிய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தனக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்பை இழக்கிறார் ரவி.

  இதற்கிடையே பக்கத்து வீட்டிற்கு வரப்போகும் விருந்தாளியை அழைத்து வரப்போகும் ரவி, தெரியாமல் அஸினை அழைத்து வந்து விடுகிறார். முதலில் மோதலில் ஆரம்பித்து பிறகு காதலில் முடிகிறது இவர்களது நட்பு. மகன் காதலிப்பதை தெரிந்துகொள்ளும் நதியா அஸனிடம் பேசி கிட்டத்தட்ட கல்யாணாத்திற்கு சம்மதம் வாங்கிவிடுகிறார்.

  திடீரென்று மாரடைப்பால் இறந்துவிடும் நதியா சாகும் முன்பு மலேசியாவில் உள்ள பிரபல கிக்பாக்ஸின் சாம்பியன் பிரகாஷ்ராஜ் தான் ரவியின் அப்பா என்பதையும், தன்னுடைய மரணத்திற்குப் பிறகு ரவி மலேசியாவில் அப்பாவுடன் சேர்ந்து வாழவேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு மரணமடைகிறார். அம்மாவின் வார்த்தையை மீற முடியாமல், மலேசியா செல்கிறார் ரவி. ஏற்கனவே அப்பாவை வெறுக்கும் ரவி, அங்கே பிரகாஷ்ராஜ் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து கொண்டதையும் அவர்களுக்கு வாலிப வயதில் ஒரு பெண் இருப்பதையும் பார்த்து மேலும் வெறுப்படைகிறார். இவரது வரவு பிடிக்காமல் தினமும் பிரகாஷ்ராஜுடன் சண்டை போடுகிறார் ஐஸ்வர்யா. வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததைப் போல பிரகாஷ்ராஜின் நம்பிக்கைக்குரிய சிஷ்யன் பாக்ஸிங் போட்டியில் அவருக்கு துரோகம் செய்கிறான். இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கும் பிரகாஷ்ராஜ் எப்படி இவற்றை எல்லாம் சமாளிக்கிறார்? ரவியும் பிரகாஷ்ராஜ் குடும்பமும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

  ஜெயம் ரவி -  துறு துறு ஹீரோ. பார்க்க நன்றாக இருக்கிறார். நடிப்பு - டான்ஸ் - சண்டை எல்லாம் சூப்பர். அஸினுடன் காதல்

  செய்யும் காட்சிகளிலும் அம்மாவுடன் ஜாலியாக இருக்கும் காட்சிகளிலும் தூள் கிளப்புகிறார். படத்தின் முதல் பாதியில் ஒரு விதமான நடிப்பு என்றால் பிரகாஷ் ராஜைப் பார்த்ததிலிருந்து மற்றொரு பாதியை ஆரம்பிக்கிறார். அப்பா - மகனுக்கிடையே நடக்கும் பேச்சுக்கள் அருமை. ஆனால் படத்தின் கடைசியில் வில்லனிடம் உதைவாங்கும் செண்டிமெண்ட் தான் அபத்தம்.

  அருமையான அம்மாவாக நதியா. இப்படி ஒரு அம்மா இருந்தால் பிள்ளைகளுக்கு எவ்வளவு ஜாலியாக இருக்கும் என்று ஒவ்வொரு சீனிலும் நினைக்க வைக்கிறார். அஸினிடம் தான் ரவியின் அம்மா என்பதைச் சொல்லாமல் சதாய்க்கும் சீன்களில் கலக்கி இருக்கிறார். ஆனால் பாவம் பாதிப் படத்திலேயே அவரை அநியாயமாய் சாகடித்துவிடுகிறார்கள்.

  வெறுக்கப்படும் அப்பாவாக பிரகாஷ்ராஜ். பிள்ளை மற்றும் இரண்டாவது மனைவியிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். அவ்வளவே!! பிரகாஷ்ராஜிடமிருந்து இன்னும் நிறைய வேலை வாங்கியிருக்கலாம் இயக்குனர். இந்தப் படத்தில் மலையாளப் பெண்ணாக வரும் அஸின் முயற்சி செய்தால் நிச்சயம் கோடம்பாக்கத்தில் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ஒரு ரவுண்ட் வரலாம். மலபார் பீடி பிடித்து ரவியிடம் மாட்டிக்கொள்ளும் போது அவர் முகம் போகும் போக்கை பார்த்து ரசிக்கலாம்.

  விவேக் காமெடி ரொம்பவும் போர்!! தற்போதெல்லாம் காமெடி வசனங்கள் சொல்வதைக் குறைத்துக் கொண்டு காமநெடி வீசும் வசனங்களைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் போலும். படத்தில் சென்சார் ஆகாத பல இரட்டை அர்த்த வசனங்கள் சர்வசாதாரணமாய் வருகின்றன.

  கதையில் கொஞ்சம் ஓட்டைகளும் உள்ளன. வில்லனிடம் கிளைமாக்ஸின் ரவி கெஞ்சுவதும், கடைசியில் வில்லன் ஒரு நொடிப்பொழுதில் மனம் மாறுவதும் அபத்தம்.

  இசை சுமார் ரகம் தான். மலேசிய அழகை அற்புதமாக படமாக்கிய ஒளிப்பதிவாளருக்கு சபாஷ். இயக்குனர் ராஜாவிற்கும் தயாரிப்ப¡ளார் மோகனுக்கும் ஒரு கேள்வி - இன்னும் எத்தனைப் படங்களைத் தான் ரீமேக் படங்களாகவே தயாரிப்பீர்கள்? புது தமிழ் படம் ஒன்றை உங்களிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |