நவம்பர் 03 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
திரைவிமர்சனம்
ஜன்னல் பார்வைகள்
கட்டுரை
சிறுகதை
கவிதை
கேள்விக்கென்ன பதில் ?
தொடர்கள்
கடிதம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : நீரிழிவு நோய்
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

      நீரிழிவு நோய் என்பது இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதால் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதால் வரும் நோய். இதை மருந்துகளின் மூலமும்,  உடற்பயிற்சிகள் மூலமும் கட்டு பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும் பலவித நோய்கள் மற்றும் சிக்கல்களை உருவாக்குவதால் குறைந்த வயதில் அகால மரணம் ஏற்பட வழிவகுக்கிறது.


நீரிழிவு நோயில் இரண்டு வகை உண்டு. முதலாம் வகை இன்சுலின் நம்பியுள்ள நீரிழிவு நோய் என   அழைக்க படுகிறது. இது குழந்தையாக இருக்கும் போதே ஏற்படக்கூடியது ஆகும்.

இரண்டாம் வகை வயதான பின் வரும் நோய். இதில் இன்சுலினை நம்பி சர்க்கரை அளவு அதிகமாதல் நடப்பதில்லை. இது பெரும்பாலும் மருந்துகள், மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும் வகை.

Diabetesமுதலாம் வகை சில உடல் எதிர்ப்பு சக்தியால் பாங்கிரியாஸின் β செல்கள் அழிக்க படுவதால் இன்சுலின் அளவு குறைந்தும் இன்னும் சிலருக்கு இன்சுலினை மிகவும் வீரியம் உள்ளதாக்க வைக்கும் சக்தி குறைவதாலும் உண்டாகுகிறது. இதற்கு சர்க்கரை அளவை அவ்வப்போது சரி பார்த்து இன்சுலின் ஊசி போட்டு கொள்ள வேண்டும். இது குழந்தைகளையும் இளவயதினரையும் தாக்கும். மரபணு குறைபாடு, சுற்று புரம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் இவ்வகை நீரிழிவு நோய்க்கு எந்த வித தடுப்பும் உபயோகப்படாது. 5ல் இருந்து 10% நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த வகை நோயை கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாம் வகை நீரிழிவு நோய் :  நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90% இவ்வகை நீரிழிவு நோய் கொண்டிருக்கிறார்கள். இன்சுலினுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாவதால் இந்நோய் வருகிறது. இன்சுலினுக்கு தேவை அதிகரிக்க அதிகரிக்க பான்க்கிரியாஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை செரிமான குறைவு, குடும்பத்தில் ஏற்கெனவே சர்க்கரை நோய் இருந்தால், அதிக உடல் இயக்கம் (physical activity) இல்லாதது போன்றவை இதற்கு காரணம். இப்போது அமெரிக்காவில் குழந்தைகள் அதிக உடற்பயிற்சி செய்யாமல் எடை அதிகரிப்பதால் இந்நோயால் பீடிக்க படுகிறார்கள். ஒருவகையில் ஆசிய அமெரிக்கன், ஹிச்பானியர், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இந்நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவது வகை நீரிழிவு நோய் கருத்தரிக்கும் போது வரும். சில பெண்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களின் குடும்ப வரலாறு பொறுத்து இந்த நீழிவு நோய் வர வாய்ப்புண்டு.குழந்தை பிறந்த பின் இதில் 5% பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரக்கூடும்.

நீரிழிவு நோய்க்கான மருந்து:

முதலாம் வகை நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் ஊசி அல்லது ஒரு பம்ப் கொண்டு மருந்து எடுத்து கொள்ளவேண்டும்.

இரண்டாம் வகை நோய் உல்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் எடை யை குறைப்பதோடு சில மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.  இதை தவிர்த்து கொலஸ்டிரால் குறைக்கவும் மாத்திரை எடுத்து கொள்ளவேண்டும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% மக்கள் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% மாத்திரைகளும் 17% இரண்டும் உபயோகிக்கிறார்கள்.

நீரிழிவு நோய்க்கு முதலாம் நிலை: இந்நிலையில் உள்ளவர்கள் சர்க்கரை அளவு இரத்தத்தில் சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும். ஆனால் அதே சமயம் இவர்களை நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றும் சொல்ல முடியாது.

இவர்களுக்கு உணவு உண்பதற்கு முன் சர்க்கரை அளவு பாதிக்கப்பட்டிருக்கும். அதேபோல இவர்களின் முன் இரவு முழுதும் சாப்பிடாமல் இருந்து மறுநாள் காலை அளவு பார்க்க படும் சர்க்கரை அளவு 100-120 மில்லிகிராம்/ டெசிலிட்டர் இருக்கும். இது சாதாரணமானவர்களின் அளவை விட அதிகம்.

அமெரிக்காவில் பலரின் சர்க்கரை அளவை சரிபார்த்ததில் 41 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய்க்கான முன்நிலையில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

2005 ஆம் ஆண்டு மட்டும் 20வயதுக்கும் மேலானவர்களில்  1.5 மில்லியன் (புதிதாக கண்டுபிடிக்க பட்டவர்கள்)பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

நீரிழிவு நோய் இருந்தால் இன்னும் பல நோய்கள் வர கூடும்.

இதய நோய், பக்கவாதம் (Heart disease, stroke):

நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட 4 மடங்கு அதிகமாக இ தய நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு பெறுகிறார்கள். இதில் இ தய நோய், பக்கவாதம் வந்தபின் 65% இறந்து போகிறார்கள்.

அதேபோல  ஸ்ட்ரோக் வரக்கூடிய வாய்ப்பும் 4 மடங்கு அதிகமாகிறது.

இரத்த அழுத்தம்: 75% நீரிழிவு நோய் உள்ளவர்கள் 130/90 க்கு மேல் இரத்த அழுத்தம் கொண்டு மருந்து உட்கொள்கிறார்கள்.

கண்பார்வை போதல்:  20 வயதிலிருந்து 74 வயதுக்குள்ளான நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் பார்வையை இழக்கிறார்கள். ஆண்டொன்றுக்கு 24000 பேர் புதிதாக கண் பார்வையை இழப்பதாக சொல்கிறார்கள்.

சிறுநீரக கோளாறு: நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறு வர முதல் காரணம் ஆகிறது. ஆண்டொன்றுக்கு 44% புதிய சிறுநீரக கோளாறு உள்ள நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.

2002 ஆம் ஆண்டு நீரிழிவு நோய் உள்ளவர்களில் 150000க்கும் அதிகமானோர் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு டையாலிஸ் செய்து கொள்ள மருத்துவமனையில் சேர்க்க பாட்டிருந்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.

நரம்பு சம்பந்தமான நோய்கள்:

60 முதல் 70% வரையான  நீரிழிவு நோய் உள்ளவர்கள் நரம்பு சம்பந்தமான நோய்க்கு உள்ளாகிறார்கள். கை கால் விரல்களில் உணர்ச்சி அற்று போதல், உணவு செரிமான சக்தி குறைவது போன்றவை ஏற்படுகின்றன.

மிக அதிக பட்சம் சிலருக்கு கால்கள் நீக்க படவேண்டிய நிலைகூட வருகிறது.

விபத்து இல்லாமல் கால்களை நீக்குதல் நீரிழிவு நோயால் மட்டுமே வருகிறது.

பற்களும் அதிக அளவு பாதிக்க படுகிறது. இதையும் தவிர அமில கார தன்மையை சீர்குலைக்க செய்து, கீட்டோன்களின் அளவை அதிகரித்து கோமா உண்டாக்கவும் வல்லது. பெரும்பாலோருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோயே அதிகம் ஏற்படுகிறது என்பதால் சீரான உடற்பயிற்சி, உணவு கட்டுபாடு மூலம் நீரிழிவு நோயை தடுக்க முயற்சி செய்யலாம். இந்த மாதம் நீரிழிவு நோய் தடுப்பு மாதம் என்பதால், குறைந்த பட்சம் உடற்பயிற்சி செய்யவோ அல்லது நடக்கவோ செய்ய ஆரம்பிப்பது நமக்கு நல்லது.

oooOooo
பத்மா அர்விந்த் அவர்களின் இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |