நவம்பர் 4 2004
தராசு
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
அறிவிப்பு
சமையல்
சிறுவர் பகுதி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : வீட்டில் கிடைக்காததால்,...
  - ஜெயந்தி சங்கர்
  | Printable version |


  சிங்கப்பூரின் தற்போதைய தலையாய பிரச்சனைகளில் ஒன்று, என்ன தெரியுமா ? அதிகரித்துவரும் பதின்மவயது ரௌடிக் கும்பல்கள் (gangs) தான். நம்புவது கொஞ்சம் சிரமமென்றாலும், அதுதான் உண்மை.

  சமீபகாலங்களில் இந்தத் தெருக்கும்பல்களில் இருக்கும் இளையர்கள் அதிக அளவில் கைதாகிறார்கள் என்கிறார்கள் சமூகசேவகர்கள் . இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டுமே 382 இளையர்கள் கைதாகியிருக்கிறார்கள். போன வருடம் இந்த எண்ணிக்கை 368 ஆக இருந்தது.

  அடுக்குமாடிக் கட்டடங்களின் கீழ்த்தளங்கள், பேரங்காடிகள் போன்ற எல்லா இடங்களிலும் கூடி நின்று அவ்வழியே போவோரைச் சீண்டி வம்புக்கிழுத்துச் சண்டைசச்சரவுகளில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்கிறார்கள். தங்களின் செலவுகளுக்கு 'மாமூல்' வேறு கும்பல் உறுப்பினர்களிடமிருந்து மட்டுமில்லாமல் வேறு சிறுவர்களிடமிருந்து வசூலிக்கிறார்கள். இந்தச் சிறுவர்களுக்குப் 'பாதுகாப்பு' கொடுத்து நாளடைவில் தங்கள் கூட்டத்திற்குள் இழுத்துக்கொள்கிறார்கள்.

  1960களில் பிரபலமாயிருந்த ' சியோ ஜி ஹொ', 'சியோ லோஹ் குஆன்' போன்ற மிகப்பெரிய ரௌடிக்கும்பல்களின் பெயர்களைக்கூடப் பயன்படுத்துகின்றார்களாம். ஆனால், இந்த இளையர்களுக்கும் அந்தக்கும்பல்களுக்கும் சம்பந்தமேயில்லை. தனியார் துப்பறியும் நிறுவனர், 61 வயதாகும் லியோனெல் டி சௌசா 1960 மற்றும் 1970 களில் போலீஸில் இருந்தவர். இவரின் யூகம் என்ன தெரியுமா? அந்த ரௌடிக்கும்பல்கள் அதிகச் செயல்பாடுகளில்லாமல் இன்னமும் இருந்துதான் வருகின்றன என்கிறார் இவர் அழுத்தமாக.
  அத்தகைய கும்பல்களை முற்றிலும் அழிக்கவே முடியாது,வேண்டுமானால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதே இவரின் தீர்க்கமான கருத்து.

  பதின்மவயதுக் கும்பல்கள் வளரக்காரணம், அவ்வகை அமைப்புகள் இளையர்களுக்கு 'நட்பையும் அங்கீகாரத்தையும்' கொடுப்பதுபோன்ற மாயை ஏற்படுத்துவதே என்கிறார் இளையர்கள் வளர்ச்சிக்கழகத்தின் உயர் அதிகாரி திருவாட்டி. காரோல் பால்ஹெட்செட் என்பவர். "இந்தப் பதின்ம வயதினர் 'பாதுகாப்புணர்வு' என்றால் என்ன என்று சரிவர புரிந்து கொள்ளவேண்டும். இவர்களைத் தங்கள் குழுவின் சட்டவிரோதச் செயல்களுக்குத் தான் பயன்படுத்துவார்கள் என்பதையும் உணரவேண்டும். இத்தகைய 'நட்பு' நிலைக்காது என்பதையும் அறியவேண்டும்", என்கிறார் இவர். இவற்றையெல்லாம் அறியாமல்தானே போய் கும்பலில் மாயவலையில் மாட்டுகிறார்கள் !

  பதின்மவயதுப் பெண்களை விட ஆண்களே அதிகம் இவ்வகை ரௌடிக்குழுக்களில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆண்கள் உடல்பலம் அதிகமுள்ளவர்கள் என்ற நம்பிக்கை நிலவியபோதிலும் பெண்களும் கொஞ்சமும் குறைந்தவர்களில்லையாம். ஆண்களானாலும் பெண்களானாலும் இக்கும்பலிலுள்ளவர்கள் மிகவும் 'முரடர்கள்' என்கிறார் Teen Challenge என்னும் அமைப்பின் கௌன்செலர் திருவாட்டி ஜோய்ஸ் சான். இளம் குற்றவாளிகளுக்கும் கும்பலிலிருந்து விலக நினைப்பவர்களுக்கும் இவர் உதவி வருகிறார்.

  குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை மிக முக்கியமாம். எண்ணிக்கையில் அதிக உறுப்பினர்களைக்கொண்ட கும்பலுக்குத் தனிப்பலம் வந்துவிட்டதைப்போல 'தைரியம்' பிறக்கிறதாம். ஒரு பிரச்சனை என்றால், முழுக் கும்பலும் ஆஜராகிவிடும். பலவேளைகளில் புதிதாய்ச் சேர்ந்த இளையர்கள் கவசமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுப் பெரும்பிரச்சனைகளில் சிக்குகிறார்கள். உறுப்பினர்களை இந்தக்குழுக்கள் தேர்ந்தெடுப்பதே அலாதி. யாரையாவது குறிவைத்து, முதலில் வேறுசிலரைப் போய் அவனைச் சீண்டச்சொல்வார்கள். சீண்டப்பட்டதுமே, குழுத்தலைவன் அங்கு வந்து 'காப்பாற்று'வதைப்போல நாடகமிடுவான். பிறகு, மெல்ல தங்களில் கும்பலுக்குள் அவனை இழுத்துவிடுவார்கள். முடியாதபட்சத்தில் 'காப்பாற்றியதற்கு' மாமூல் கொடுக்கச் சொல்வார்கள்.
  தொடர்ந்தும் கொடுக்கக் கட்டாயப்படுத்துவார்கள். 'பாதுகாப்பு' தொடர்ந்து கிடைக்கக் குழுவில் சேரச்சொல்வார்கள். முதலில் $20 யும் பிறகு வாராவாரம் $10யும் வசூலிக்கிறார்களாம். இதைக் கொடுக்கமுடியாத உறுப்பினர்கள் திருட்டு வீஸீடிக்களை விற்கவும், கடைகளில் திருடவும் (shop- lift) மிரட்டி உருட்டி நிர்பந்திக்கப்படுகிறார்கள். சம்பவ இடத்தில் இல்லாததால் 'சூத்திரதாரி' பெரும்பாலும் போலீஸில் மாட்டாமல் தப்பிவிடுவான். எய்தவனை விட்டுவிட்டு அம்பையே இழுத்துச் செல்வர் போலீஸார்.

  இவ்வகைக் கும்பல்கள் பெரும்பாலும் பதின்மவயதினர்களைக் கொண்டவையே. 12 வயதுச் சிறுவர்களும் கூட இருக்கிறார்கள். ஒரு கும்பலில் 5 முதல் 50 வரை உறுப்பினர்கள் உள்ளனர். சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 10 கும்பல்கள் பலகிளைகளைக்கொண்டு தீவெங்கும் பரவியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  திரையரங்குகள் மற்றும் பப்புகளில் (Pub) மட்டுமில்லாமல் விளையாட்டுக்/வீடியோகேம்ஸ் கூடங்கள் போன்ற இடங்களிலும் இந்தப் பதின்மவயதினர் வம்பிற்கு அலைவதைக் காணலாம். ஆங்காகே வெட்டியாய்ப் பொழுதைக்கழித்துக் கொண்டு உப்புப்பெறாத விஷயங்களுக்கு வாய்ச்சண்டையில் ஆரம்பித்து கைச்சண்டை வரை போகிறார்கள். தொடர்ந்து பழிக்குப்பழி என்று சண்டை நாட்கணக்கில் போவதுமுண்டு. சாதாரணமாக 'முறைத்தல்' முதல் 'பாய் ·ப்ரெண்ட், கேர்ள் ·ப்ரெண்ட் பிரச்சனை' வரை பலவிதமான காரணங்கள் !

  கும்பலில் இருப்பதே சில இளையர்களுக்குப் பெரிய கௌரவமாம். ஓர் இளையன். இவன் 15 வயதில் நண்பன் ஒருவனால் 'சா லக் கௌ' என்னும் ரௌடிக் கும்பலில் சேர்த்துவிடப்பட்டான். போன ஆண்டு கிருஸ்துமஸ் தினத்துக்கு முன்தினம், இவனை மோட்டார் சைக்கிள் ஒன்றைத் திருடச்சொல்லிக்கட்டாயப்படுத்தினார்கள். முயற்சியில் கையும் களவுமாக இவன் பிடிபட்டான். இவனைக் கூட்டிக்கொண்டுபோய் சிறையில் கைதிகள் படும் சிரமங்களைக் காட்டினார்கள். அதுவுமில்லாமல், பிரம்படி/கசையடி கொடுக்கப்படும் கைதிகளின் திரைப்படங்களையும் காட்டினர். பார்த்தவுடன் இவ்விளையன் வெலவெலத்துவிட்டான். இவன் கும்பலிலிருந்து வெளியே வர Teen Challenge என்னும் அமைப்பு உதவியது.

  உண்மையில் நிறையபேர் கும்பலிலிருந்து வெளியே வர நினைக்கிறார்கள். இருப்பினும் அது எளிதல்ல. உதாரணமாக 'சா லக் கௌ' கும்பல் வெளியேற நினைப்பவர்களிடம் $ 369 வசூலிக்கிறது. கொடுக்கவில்லையென்றால் கும்பலின் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாவார்கள். வெளியேற நினைப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும்கூட அச்சுறுத்தல்/மிரட்டல் உண்டாம்.

  கும்பலிலிருந்து வெளியேற நினைக்கும் இளையர்களுக்கு," மொபைல் நம்பரை மாற்றிவிடுங்கள். கும்பல் வழக்கமாய் இருக்கும் இடங்களைத் தவிர்த்துவிடுங்கள். வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்தால், போலீஸைக் கூப்பிடுங்கள்", என்று அறிவுரை சொல்கிறார் திரு. டிசௌசா. இது தவிர, தங்கள் நண்பர்களைக் கும்பலிலிருந்து வெளியேற்ற உதவுமாறும் இளையர்களிடம் சொல்கிறார்.

  முன்பெல்லாம் இவ்வகைக்கும்பல்களில் சேரும் இளையர்கள் சிதைந்த குடும்பங்களிலிருந்தும் பொருளாதார வசதிகுறைந்த குடும்பங்களிலிருந்தும் தான் வந்தனர். ஆனால், இப்போதெல்லாம் அப்படியில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. நல்ல குடும்பத்துப்பிள்ளைகளும் கும்பல் நடவடிக்கைகளில் (gangsterism) மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிப்பதைப் பார்க்கமுடிகிறது.

  கும்பகளில் கிடைப்பதாய் இளையர்கள் நம்பும் 'பாதுகாப்பு' மற்றும் 'நட்பு' துரதிருஷ்டவசமாக இவர்களின் குடும்பத்தில் இவர்களுக்கு கிடைத்தாததே கும்பலில் இவர்கள் சேர முழுமுதற்காரணம். சிறுவயதுமுதலே வளர்ப்பு முறைகளில் அவ்வப்போது மனதில் ஏற்றப்படும் சிறந்த விழுமியங்களும்கூட நிச்சயம் உதவும் இல்லையா வாசகர்களே?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |