நவம்பர் 4 2004
தராசு
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
அறிவிப்பு
சமையல்
சிறுவர் பகுதி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : ஹரிஜன்கள்
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி அழைப்பது என்கிற சர்ச்சைக்கு வயது ரொம்பவே ஜாஸ்திதான். 'ஹரிஜன்' என்கிற பதத்தை முதன்முதலாக பயன்படுத்தியவர் காந்திஜிதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.  ஹரிஜன் என்கிற சொல் கூட தங்களை இழிவுபடுத்துவதாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கருதுவதால் 'தலித்' என்கிற சொல்லாக்கம் தற்போது பிரபலமாகிவருகிறது. இதுவும் ஒரு காலகட்டத்திற்கு பின்னர் ஒதுக்கி வைக்கப்படக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

  'ஹரிஜன்' என்பதன் அர்த்தம் ஆண்டவனின் அருளை நேரடியாக பெறக்கூடிய பாக்கியம் பெற்றவர்கள் என்பதுதான். தெய்வமே துணைக்கு நிற்கும் ஜனங்கள் என்று குறிப்பிட மிக பொருத்தமானவர்களாக நான் நினைப்பது இந்த திக்கற்ற, நாதியற்ற, நலிவுற்ற, இழிவாக கருதப்படுகின்ற ஜனங்களைத்தான்.' (ஹரிஜன், 11.2.1933)

  திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று நாம் சொல்வதைப்போல, தாங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டதாக தாழ்த்தப்பட்டவர்கள் நினைக்கக்கூடாது என்பதற்காகத்தான் காந்திஜி கடவுளின் நேரடி அருட்கடாட்சம் பெற்றவர்கள் என்பதற்காக ஹரிஜன் என்று குறிப்பிட ஆரம்பித்தார். இந்தியா சுதந்திரமடைவதற்குள் தீண்டாமை போன்ற விஷயங்கள் நாட்டை விட்டு அகலவேண்டும் என்று சொன்னார் காந்திஜி. அவர் நினைத்தது சரிதான் என்பது இன்றும் ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

  'அந்நிய ஆட்சியில் கீழ் 'பஞ்சமர்' என்று சொல்லப்படும் ஹரிஜன்களின் நிலைமை சீர்படவில்லை என்றால், சுயராஜ்யம் என்னும் போதை நம் தலைக்கேறும்போது அவர்களின் நிலையை மாற்ற நம்மால் முடியாது' (யங் இந்தியா, 12.6.1924)

  தீண்டாமையெல்லாம் ஹிந்து மதத்தில் சகஜம்தான் என்று நினைத்துக்கொண்டு சும்மா இருப்பவர்களுக்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்துவிடுவதால் ஒரு பயனுமில்லை. எந்தவொரு மதத்தின் சம்மதத்தையும் பெறாத தீண்டாமை போன்றவற்றை ஒழிப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் முக்கியமாக ஒவ்வொரு இந்துவுக்கும் கடமையாக இருக்கவேண்டும் என்கிறார்.

  'பசுவைப் போற்றி பூஜை செய்ய விதித்திருக்கும் ஒரு மதம், மனிதர்களை இரக்கமின்றி, மனிதத்தன்மைக்கு புறம்பாக விலக்கீடு செய்ய இடமோ, அங்கீகாரமோ அளிக்கக்கூடியதன்று. மகிமை வாய்ந்த மதத்தை அவமதிப்பில் ஆழ்த்தி வைத்திருக்கும் வரை இந்துக்கள் சுதந்திரம் பெற அருகதையற்றவர்கள். நமது நாட்டில் ஐந்தில் ஒரு பங்கினர் நம்மோடு சரிநிகர் சமானமாக கூடி வாழும் உரிமையை மறுப்பது கடவுளையே மறுப்பதாகும்' (யங் இந்தியா 6.10.1921)

  நூற்று பத்து கோடியை தொடும் இந்நேரத்திலும் காந்திஜி சொல்வது போல ஐந்தில் ஒரு பங்கு மக்கள் ஒதுக்கப்பட்டு வருவதை பார்க்கமுடிகிறது. இந்த கடையவர்களில் லிஸ்ட்டில் தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், ஊனமுற்றோர் என்று எல்லோரும் அடக்கம். இவர்களுக்கான சமூக நீதியை
  வலுக்கட்டாயமாக அமலாக்க முடியாது என்பதே காந்திஜி சொல்லும் விஷயம். அப்படி வலுக்கட்டாயமாக ஆக்கப்படும் பட்சத்தில் அது தற்காலிகமானதாகவே இருக்கமுடியும் என்பது அவரது நம்பிக்கை.

  ஒடுக்கப்பட்டவர்களை பற்றிய சிந்தனைகள் காந்திஜியை ஆக்ரமித்ததற்கு காரணம் தென்னாப்ரிக்காவில் ரயிலுக்கு வெளியே தூக்கியெறிப்பட்டது மட்டுமல்ல. திரும்பவும் டர்பன் நகருக்கு வரும்போது காந்திஜி ரசித்து படித்த ரஸ்கின் எழுதிய 'அன் டு திஸ் லாஸ்ட்' புத்தகமும் ஒரு காரணம். ரஸ்கின் வலியுறுத்திய சமத்துவம், சகோதரத்துவம் உள்ளக்கிய மூலக்கோட்பாடுகளையே இந்தியா திரும்பியதும் பல பிரச்னைகளுக்கு தீர்வாக அவர் பயன்படுத்தி வந்தார். முக்கியமாக சமூக படிநிலைகளின் அடித்தளத்திலிருக்கும் ஹரிஜனங்களை ஒதுக்கக்கூடாது என்பதற்காக காந்திஜி வலியுறுத்திய விஷயங்கள் ரஸ்கினின் மூலக்கோட்பாடுகளை உள்ளடக்கியவைதான்.

  ஹரிஜன குடியிருப்புகளில் சுகாதாரம் இரண்டாம் பட்சமாக கருதப்பட்டு வருவது பற்றி காந்திஜி கவலைப்பட்டிருக்கிறார். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர பல வழிமுறைகளையும் சொல்கிறார். பல வழிமுறைகள் இன்றைய காலத்துக்கு ஒவ்வாத விஷயமென்றாலும் சுகாதாரம் பேணுவது பற்றிய விஷயங்கள் இன்னும் சரிவர கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று சொல்லாம். இக்குறைகளை நீக்க காந்திஜி சொல்லும் அறிவுரைகள். ஹரிஜனங்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு சென்று அவ்விடங்களை சுத்தம் செய்வது, முடிந்தால் ஹரிஜனங்களையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு சுகாதர பணிகளை மேற்கொள்வது, ஹரிஜன சிறுவர்களுக்கு சுற்றுப்புறத்தை பற்றியும், வரலாறு, புவியியல் பற்றிய விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பது. முக்கியமாக அவர்களை அழுக்கு போக குளிப்பாட்டி உடல் நலம் பேணுவது பற்றி கிளாஸ் எடுப்பது என்று நிறைய.

  ஹரிஜன்களை பற்றி பேசும்போது வர்ணாஸ்ரமம் பற்றியும் பேசியே ஆகவேண்டும் என்பது இங்கே எழுதப்படாத விதி. காந்திஜியின் பார்வையில் வர்ணாஸ்ரம் எப்படியிருக்கிறது?

  'வர்ணாஸ்ரம விதிமுறை, சமூக, சமய, பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்கிறது. விதிமுறையை பின்பற்றுவது சமுதாய தீமைகளை தவிர்க்கிறது. இரக்கமற்ற பொருளாதாரப் போட்டியை முற்றிலும் தவிர்க்கிறது. இந்த விதிமுறை ஒரு வகுப்பின் உரிமைகளையோ அல்லது சலுகைகளையோ முன் வைக்காமல் அவர்களின் கடமையை வலியுறுத்துகிறது. இந்த விதிமுறையில் ஒருவன் பெற்றோர்கள் பார்த்து வந்த தொழிலைத்தன் பின்பற்றவேண்டும் என்கிற வலுக்கட்டாயம் எதுவுமில்லை. வர்ணதர்மத்தை நாம் பின்பற்றத் தவறியதே நமது பொருளாதார, ஆன்மீக அழிவுகளுக்கு காரணமாகிவிட்டது.' (யங் இந்தியா, 24.11.1927)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |