நவம்பர் 4 2004
தராசு
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
அறிவிப்பு
சமையல்
சிறுவர் பகுதி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : ஸ்ரீராமஜெயமும் இணைய இதழ்களும்
  - ராமசந்திரன் உஷா
  | Printable version |

  இணைய இதழ்களில் ராமஜெயத்தை எழுதி அனுப்பினால் கூட போட்டுவிடுவார்கள் என்ற செலவாடை சமீபகாலமாய் புழங்கிவருகிறது. அதற்கு அஞ்சியே எழுத்தாள நண்பர்கள் இணையத்தில் தங்கள் படைப்புகள் வந்தால்கூட மற்றவர்களிடம் சொல்வதில்லை. ஆனந்தவிகடன், கல்கியில் வந்தால்தான் எழுத்தாளர்கள் என்ற அங்கீகாரம் கிடைக்கிறது. ஆனால் இந்த ஜனரஞ்சக பத்திரிக்கையில் கதைகள் பிரசுரமாக  மெனக்கெடுவதைவிட கின்னஸ் புத்தகத்தில் பெயர் வருவது சுலபம். யோசித்து பாருங்கள் ஒரு நிமிடத்துக்கு ஆயிரம் முறை எச்சில் துப்பிக் கூட பெயர் பெறலாம்.

  எழுத ஆரம்பித்தவுடன் முதல் கதையை ஆ.விக்கோ அல்லது கல்கிக்கோ, கொஞ்சம் ஒருமாதிரியான கதை என்றால் குமுதத்துக்கோ அனுப்பிவிட்டு, பாலகுமாரன் அ சிவசங்கரி ரேஞ்சில் ஆகப் போவதாய் கனாக்காண ஆரம்பிப்போம். சில மாதம் கழித்து இன்னொரு கதை, ஆனால் ரிசல்ட் என்னவோ பழைய குருடி கதைதான். இப்படி ஒரு இரண்டு வருடம் ஆனால் சே! இந்த பத்திரிக்கைகாரர்களே மோசம், ஒண்ணா இவங்க மாமா, மச்சானாய் அல்லது மச்சினியாய் இருக்க வேண்டும் இல்லாட்டி பத்திரிக்கை ஆபிசில் நம்ம பிரண்ட்ஸ் யாராவது வேலை செய்ய வேண்டும் என்று திட்டிவிட்டு எழுதும் ஆசையே ஏறக்கட்டிவிடுவார்கள். நான் எழுதி அனுப்பிய முதல் கதையே பிரசுரமானது என்று சொன்னால் ஐயா, அம்மா நீங்கள் பெர்னாட்ஷா/ டால்ட்ராயைவிட திறமையானவர்கள்.

  இன்னொரு பக்கம்  சிற்றிதழ்களில் எழுதுவது, கவனிக்க இலக்கிய இதழ்கள் இல்லை. இவற்றில் முதலில் எழுத ஆரம்பித்து பின்பு பிரபல பத்திரிக்கைக்கு அனுப்புவது. இந்த முறை சென்னையில் இருந்து நான்கு பிரபல எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகள் வாங்கி வந்தேன். ஆச்சரியமான விஷயம்- பெரும்பாலான கதைகள்  பெயரே தெரியாத சிற்றிதழ்களின் வெளியானவை மற்றும் சிலகதைகள் வெகு சுமாரானவை என்பதுதான். ஆனால் சுமாரான கதைகளோ அல்லது கதைமாந்தர்களோ பின்னால் மெருகேற்றப்பட்டு வேறு ஒரு நல்ல கதையாகவும் மாற்றப்பட்டதையும் கண்டேன்.

  இப்படிதானே வெகு சுமார் என்றுச் சொல்லப்படும் கதைகள் இணைய இதழில் வருகின்றன. ஆக இணையமோ அல்லது எழுதியதை அப்படியே போட ஒரு பத்திரிக்கையோ ஆரம்ப எழுத்தாளனுக்குத் தேவை. இது ஒருவித பயிற்சி. உண்மையில் எழுத்தே தவமாய் நினைப்பவர்களுக்கு இத்தகைய இணைய இதழ்கள் இடம் தருகின்றன. எழுதி எழுதி பட்டை தீட்டப் படும் எழுத்தின் வீச்சு, உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து முன்பின் தெரியாத நபரிடமிருந்து வரும் பாராட்டு மடல்தான். இணையம் நல்ல தகவல் தொடர்ப்பு சாதனமாததால் இணைய முகவரி இருக்கும் எந்த ஒரு எழுத்தாளருடமும் நீங்கள் தொடர்ப்புக் கொள்ளலாம்.

  கட்டுரை எழுதுவது இப்பொழுது வெகு சுலபமாகிவிட்டது. எதைப் பற்றி வேண்டுமானாலும் தேடி, படித்து தமிழில் மொழிபெயர்த்து எழுதிவிடலாம். அதேப்போல குழுக்கள்- நம்முடைய ஆரம்பக்கால முயற்சியில் தெரியவரும் சொற் பிழைகள், பொருட் பிழைகளைத் திருத்த, பாராட்ட, விமர்சிக்க நல்லதளமாய் விளங்குகிறது.

  தமிழில் இணையம் பரவலாய் அறியப்பட்டு இரண்டு, மூன்று வருடம்தான் ஆகிறது. அதற்குள் இணைய இதழ்கள், குழுக்கள், வலைப் பதிவுகள், வலைத்தளங்கள், தமிழில் அரட்டை என்று நாளுக்கு நாள் அதி வேகமாய் வளர்ந்துக் கொண்டு இருக்கிறது. எப்படி ஓலையில் எழுதிக் கொண்டிருந்த தமிழ் மொழி பேப்பர், அச்சு இயந்திரம் கண்டுப் பிடிக்கப்பட்டதும் எழுத்தின் போக்கு முற்றிலும் மாறிப் போனதோ அப்படியே இணையத்தில் புழங்க ஆரம்பித்த தமிழ் மொழியின் வளர்ச்சிகளும் இனி வேறு ஒரு திசையில் முன்னேறும் என்பதில் ஐய்யமில்லை.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |