நவம்பர் 4 2004
தராசு
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
அறிவிப்பு
சமையல்
சிறுவர் பகுதி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிறுவர் பகுதி : கபட வேடதாரி
  - கிட்டு மாமா
  | Printable version |

  தனது தீய செயல்களை ஒருவன் மறைப்பானேயாகில் காற்றில் மிதக்கும் பஞ்சு அல்லது வைக்கோலைப் போல அவனது நேர்மை ஊசலாடிக்கொட்டிருக்கும். பெரியோர்கள் சொன்ன பூனையின் கதையைப் போலவே அவனது செயலும் அமையும்.

  மிகவும் சோம்பேறித்தனமுடைய பூனை ஒன்று மிகவும் தீய எண்ணங்கள் கொண்டதாக இருந்தது. அது ஒருநாள் கங்கைக் கரைக்குச் சென்று முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கிக்கொண்டு நின்றது. மிகுந்த பக்திமானைப் போல பாசாங்கு செய்தது. தன்னைச் சுற்றியுள்ள மற்ற மிருகங்கள், பறவைகள் நம்ப வேண்டும் என்பதற்காக " நான் தவம் செய்யப்போகிறேன்!! " என்று அறிவித்தது.

  பூனையில் கபடவேடம் அறியாத அந்த அப்பாவிப் பறவைகள் அதன் பேச்சை நம்பி, போற்றிப் புகழ்ந்தன. இப்போது எனது நோக்கம் நிறைவேறிவிட்டது. எனது பாசாங்கு பக்தியின் பலன் கிடைத்துவிட்டது என்று பூனை தனக்குள் எண்ணி பெருமைப்பட்டுக்கொண்டது.

  அந்தப் பகுதியிலுள்ள எலிகள் பூனை செய்த தவத்தைக் கண்டன. அவை தங்களுக்குள் ஆலோசனை நடத்தின. "நமக்கு பல பகைவர்கள் உள்ளனர். இந்தத் தவயோகியாக விளங்கும் பக்திமானான பூனையை நாம் நமது தாய் மாமனாகக் கருதுவோம். நம் அனைவரையும் அது பாதுகாக்கும். " என்று நம்பிக்கை கொண்டன.

  எலிகள் எல்லாம் ஒன்று கூடி பூனையைக் கண்டன. " உங்கள் தவ மேன்மையாலும், கருணை உள்ளத்தாலும் நாங்கள் அச்சமின்றி வாழ விரும்புகின்றோம். நீங்கள் தூயவர். மேலானவர்.. எங்களுக்கு அடைக்கலம் நீங்கள் தான். உங்களது மேலான பராமரிப்பில் நாங்கள் வாழ விரும்புகிறோம்.." என்று வேண்டின.

  "எலிகளே! நான் தவம் செய்வதற்கும் உங்களைக் காப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனாலும் நான் உங்களுக்கு நன்மையே செய்வேன். நீங்கள் அனைவரும் எனக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும். கடுந்தவம் செய்ததன் காரணமாய் நான் மிகவும் சோர்ந்து போயிருக்கிறேன். ஆனால் வாக்குறுதியைக் காப்பாற்றுவேன். இப்பொழுது என்னால் நகரவும் முடியவில்லை. அருமை நண்பர்களே! நீங்கள் தான் என்னை தினமும் நதிக்கரைக்கு அழைத்துச் செல்லவேண்டும். நான் அங்கு புதிய காற்றை சுவாசிப்பேன். அப்படிச் செய்தால் எனது உடல்நலம் சீரடையும்." என்று தந்திரமுள்ள பூனை கூறியது.

  "ஐயா! எங்களைக் காக்கப்போகும் தங்களுக்கு எந்தவிதப் பணிவிடைகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். " என்று எலிகள் கூறின. ஆனால் பூனை தினமும் தனக்கு பணிவிடை செய்யவந்த எலிகளை இரகசியமாய் கொன்று தின்று கொழுத்து வந்தது. நாளுக்கு நாள் எலிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது.

  பூனை கொழுத்து வருவதையும், தங்கள் இனத்தின் எண்ணிக்கை குறைந்துவருவதையும் பற்றி சந்தேகம் கொண்ட எலிகள் ஒன்று கூடி பேசின. அந்த எலிகளில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்த 'திண்டிகன்' என்ற எலி மற்ற எலிகளைப் பார்த்து, " நீங்கள் அனைவரும் முன்கூட்டியே நதிக்கரைக்குச் செல்லுங்கள். நான் நமது மாமனான பூனையுடன் வருகிறேன்!" என்று கூறியது. அது கூறியதை மற்ற எலிகள் எல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டன.

  கபட வேடதாரியான பூனை திண்டிகனை கொன்று தின்றுவிட்டது. அதன் பிறகு மற்ற எலிகள் எல்லாம் ஆற்றங்கரையில் ஒன்று கூடின. வயதில் மூத்த கிலிகன் என்ற எலி, " நாம் நமது தாய்மாமன் என்று நம்பிக்கொண்டிருந்த பூனைதான் நமது இனத்தாரை கொன்று வருகிறது. அது மகாபாவி! பக்தி வேடம் பூண்டு அனைவரையும் ஏமாற்றும் நயவஞ்சகன். அது நமக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. அது தவமே செய்யவில்லை. பசுதோல் போர்த்திய புலியைப் போல் நம் இனத்தை அழித்து வருகிறது. " என்று வேதனையுடன் குறிப்பிட்டது.

  கிலிகனின் அறிவுரையைக் கேட்ட அனைத்து எலிகளும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டன. கபட பூனையும் தன் வேடம் கலைந்ததை எண்ணி வருந்திக்கொண்டே தன் இருப்பிடம் சென்றது.

  ஆகவே குழுந்தைகளே !
  "தோற்றத்தைக் கண்டும் சொல்வதைக் கேட்டும் எவரையும் நம்பி ஏமாறக்கூடாது என்ற படிப்பினையை இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |