இனி வரும் வாரங்களில், ஒவ்வொரு வாரமும் நமக்கு கடிதம் எழுதும் வாசகர்களில் சிலரை தேர்ந்தெடுத்து ஒரு கேள்வி கேட்போம். அதற்கு வாசகர்கள் தங்கள் பதிலை (தமிழில்) சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதி அனுப்பலாம். கேள்வியை அனுப்பினால் கண்டிப்பாக பதில் அனுப்பியாக வேண்டுமென்பதில்லை. (முடியவில்லை என்று ஒரு வரி பதில் போட்டால் போதும். அதுவும் முடியவில்லையென்றால் பரவாயில்லை)
இது வரை கடிதம் எதுவும் எழுதவில்லை ஆனால் இதில் கலந்து கொள்ள விருப்பமா? உங்கள் ஆர்வத்திற்கு எங்கள் நன்றி. உடனே feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்து ஒரு வரி போடுங்கள். வரும் வாரங்களில் உங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறோம்.
பதிலை அனுப்பும் போது உங்கள் (சமீபத்திய) புகைப்படத்துடன் அனுப்பினால் ரொம்ப சந்தோஷம்!
இதோ இந்த வார கேள்வி.
பேட்மேன், சூப்பர்மேன், ஜேம்ஸ்பாண்ட், ஸ்பைடர்மேன், ஹீமேன் போன்ற சூப்பர் ஹீரோக்களில் யாராக இருக்க உங்களுக்கு பிடிக்கும் ? ஏன் ?
ராஜ் :
ஹீமேன்னா தப தபன்னு ஓடனும் நம்மளால அது முடியாது. அதுக்கு டிரெயினே தேவலை. பேட்மேன் ஜெட்க்கு பெட்ரோல் போட்டே போண்டியாயிடுவேன். ஸ்பைடர்மேன் மாதிரி தாவலாம்னா எல்.ஐ.சி மாதிரி ஒரு சில பில்டிங் சென்னையிலே உயரமா இருக்கு. சரி ஜேம்ஸ்பாண்ட் மாதிரி கார் ஓட்டலாம்னா நம்ம பக்கத்து வீட்டு பையன் கார்ல ஆணியால கோடு போடுவானோன்னு பயமா இருக்கு. அதனால என் சாய்ஸ் சூப்பர்மேன்தான். பெட்ரோல் செலவு கிடையாது. ஒரு பத்து தப்படி ஓடி சட்டைய கழட்டி போட்டுட்டு ஜாலியா பறந்து போகலாம்.
வித்யா :
எல்லாமே ஆம்பளைங்களா இருக்கே ? ஆமாம் இந்த சூப்பர் ஹீரோல ·பேண்டம் விட்டுடீங்களே ? எனக்கு ஸ்பைடர்வுமனாக இருக்க பிடிக்கும். பஸ்ஸ¤ல மேல உரசற ஜொல்லு பசங்கல ஸ்பைடர் வெப்விட்டு கிட்ட நெருங்க விடாம செய்யலாம்.
ஹரி :
என் சாய்ஸ் ஜேம்ஸ்பாண்ட்தான். அப்படியே தமிழ் ஹீரோ கணக்கா ஸ்லோ மோஷன்ல நடந்து வரலாம். யாரை வேணா போட்டு தள்ளலாம். யாருக்கும் பதில் சொல்லவேணாம். முக்கியமா யாருக்கு வேணாலும் இச் அடிக்கலாம். அப்புறம் நமக்கு புதுசு புதுசா பேனா, கார்ன்னு, துப்பாக்கின்னு ஏகப்பட்ட ஸ்டைலான சமாசாரம் கொடுப்பாங்க. அதை ஸ்டைலா வாங்கிட்டு போஸ் கொடுக்கலாம். முக்கியமா உங்க லிஸ்ட்ல இருக்கும் மத்த மேன்ஸ் மாதிரி வித்தியாசமா டிரெஸ் போடாம, ஜம்முனு கோட் சூட்ல ஸ்டைலா வரலாம்.
|