நவம்பர் 4 2004
தராசு
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
அறிவிப்பு
சமையல்
சிறுவர் பகுதி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  திரைவிமர்சனம் : கிரி
  - மீனா
  | Printable version |

  குஷ்பு தயாரிப்பில் அவரது கணவர் சுந்தர்.சி இயக்கியிருக்கும் கிரியில் கதையென்னவோ பழசுதான். ஆனால் அதை அர்ஜுன் தனது நடிப்பாலும், இயக்குனர் தனது திரைக்கதையாலும் கொஞ்சம் புதிதாகக் காட்ட முயற்சி செய்துள்ளார்கள்.

  பேக்கரி வைத்து நடத்தும் வடிவேலுவிடம் அடித்து பிடித்து வேலைக்குச் சேருகிறார் அர்ஜுன். இவர்கள் பேக்கரி கம் வீட்டிற்கு பக்கத்திலுள்ள தேவயானியின் பையன் மீது அதீத பாசம் வைக்கிறார். முதலில் அர்ஜுனை வெறுக்கும் தேவயானி அவர் தன் மகனைக் காப்பாற்றியதால் அர்ஜுனுடன் சகஜமாகப் பழகத் துவங்குகிறார். இதற்கு நடுவிலேயே ரீமாவிற்கு அர்ஜுன் மீதான ஒருதலைக் காதல் வேறு தனி ரூட்டில் செல்கிறது. பிரகாஷ்ராஜின் தங்கையின் திருமணத்தை அர்ஜுன் முன்நின்று நடத்திவைக்கிறார். அப்போது அங்கே வந்து தகராறு செய்யும் ஒரு கோஷ்டி அர்ஜுனைப் பார்த்து, " உன் கண்முன்னாலேயே இந்தப் பையனின் அப்பாவைக் கொன்றதைப் போல இந்தப் பையனையும் கொல்வேன்!! " என்று கூறும் போது, நடுங்கிப் போகிறார் தேவயானி. கணவன் பிரகாஷ்ராஜ் கொல்லப்பட்ட விஷயம் அப்போதுதான் அவருக்குத் தெரியவருகிறது. அர்ஜுன் யார் என்பது ஒரு ·ளாஷ்பேக்.

  எரிமலையாய் வெடிக்கும் இரண்டு கிராமங்களின் தலைவர்கள் வினுசக்ரவர்த்தி - பெப்சிவிஜயன். தன்னுடைய சொந்தப் பகை காரணமாய் இரண்டு கிராமங்களும் இணையவே முடியாதபடி சண்டையை தூண்டிவிடுகிறார் பெப்சி விஜயன். வினுசக்ரவர்த்தி தரப்பு ஆள் ஒருவனால் தன்னுடைய இரண்டு மகன்களும் இறந்துவிடுவதால் வினுசக்ரவர்த்தியின் மகனைக் கொல்ல முயல்கிறார் பெப்சிவிஜயன். மகனைத் தப்பிக்கவைக்க வினுசக்ரவர்த்தி செய்யும் முயற்சியில் மகன் காணாமல் போகிறான். தொலைந்த மகனை இருதரப்பினரும் தேடுகிறார்கள்.

  இதற்கிடையே வினுசக்ரவர்த்தி வீட்டில் பரம்பரை பரம்பரையாக வேலை செய்துவரும் வேலைக்காரன் - கம் வளர்ப்பு மகன் அர்ஜுன். ஊருக்குப் புதிதாக வரும் போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ் இரு கிராமங்களையும் ஒன்று சேர்த்து வைக்கப் பாடுபடுகிறார். இந்தக் கிராமத்து அர்ஜுனுக்கும் அந்தக் கிராமத்து ரம்யாவிற்கும் திருமணம் செய்துவைக்க முயற்சி செய்கிறார். அதற்குள் பிரகாஷ்ராஜ் தான் சிறுவயதில் காணாமல் போன வினுசக்ரவர்த்தியின் மகன் என்ற உண்மை அனைவருக்கும் தெரியவருகிறது. பழைய பகையை மறக்காத பெப்சி விஜயன் பிரகாஷ்ராஜைக் கொன்றுவிட்டு, பிரகாஷ்ராஜின் மனைவி தேவயானி மற்றும் அவரது மகனையும் கொல்லத் திட்டமிடுகிறார். இதைத் தடுப்பதற்காகவே அர்ஜுன் தேவயானி இருக்கும் இடத்திற்கு வருகிறார்.. பெப்சி விஜயன் தேவயானியையும் அவரது மகனையும் கொல்லத் திட்டமிடுகிறார். அதிலிருந்து அவர்களை அர்ஜுன் எப்படிக் காப்பாற்றுகிறார்? அர்ஜுனின் மனைவியாவது ரீமாவா? இல்லை ரம்யாவா? இவைகளே மீதிக் கதை.

  ஆக்ஷன் ஹீரோ அடிதடியில் தூள்கிளப்புகிறார். அர்ஜுனின் டான்ஸ் மற்றும் நடிப்பும் ஓ.கே வடிவெலுவிடம் ரொம்ப பவ்யமாய் வந்து வேலை கேட்கும் காட்சிகளிலும், வடிவேலுவுக்கு ஐடியா கொடுக்கும் காட்சிகளிலும் அர்ஜுனின் காமெடி நன்றாக இருக்கிறது. ஒரு ஹீரோயினுக்குப் பதிலாக இருவர். காதல் காட்சிகளில் மனிதர் புகுந்துவிளையாடுகிறார்.

  ரீமா மற்றும் ரம்யா. இருவருக்கும் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. ஆளாளுக்கு அர்ஜுனுடன்  2 டூயட் பாடுகிறார்கள். கொஞ்சூண்டு நடித்திருக்கிறார்கள். அவ்வளவே.

  தேவயானியின் நடிப்பு சூப்பர். பிரகாஷ்ராஜ் இறந்ததைத் தெரிந்துகொள்ளும் காட்சிகளில் இவரது நடிப்பு டாப். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதியும் கேரக்டர் பிரகாஷ்ராஜ். இரண்டு கிராமங்களையும் ஒன்று சேர்க்கவேண்டும் என்று அவர் செய்யும் முயற்சிகளும், ஒரு அப்பாவி பலியாகக்கூடாது என்ற எண்ணத்தால் தான் யார் என்பதை வெளிப்படுத்தும் காட்சிகளும் ஓ.கே ரகம். ஆனாலும் சிறு வயதில் காணாமல் போன அவர் எப்படி வளர்ந்து போலீஸ் அதிகாரியாகிறார்? இந்தக் கேள்வியை இயக்குனர் மறந்துவிட்டார் போலிருக்கிறது.

  வடிவேலுவின் காமெடி படத்திற்கு பயங்கரமாய் பலம் சேர்த்திருக்கிறது. கதையோடு இணைந்த நகைச்சுவைத் தோரணம் தான் இவர் சம்மந்தப்பட்ட சீன்கள். சொந்தமாய் வீடு கட்டி குடிபோக மதன்பாப் ஒவ்வொரு முறை முயலும் போதும் வடிவேலு எதிர்பாரத விதமாக அவர் மீது விதம் விதமாய் விழுந்து அவரை ஆஸ்பத்தரிக்கு அனுப்பும் சீன்களில் அவரது காமெடி சூப்பர். அதே போல அவருக்கு வீடும் பேக்கரியும் எப்படிக் கிடைத்தது என்பதை அர்ஜுனிடம் அவர் ரகசியமாய் சொல்ல படத்தின் கடைசி வரைக்கும் ஒவ்வொருவராக அந்த ரகசியத்தை வடிவேலுவிடம் சொல்லும் காட்சிகளும் அருமை. 

  இசை இமான். பாடல்கள் அனைத்தும் டப்பங்குத்து ரகம். அருமையான ஒளிப்பதிவு செய்திருக்கும் கேமரா மேன் செல்வாவிற்கு பாராட்டுக்கள். ஆக்ஷன், காமெடி, காதல், கொஞ்சம் செண்டிமெண்ட் என்று அனைத்தையும் சேர்த்து சூப்பர் மசாலா படமான இதை தயாரித்து இயக்கியுள்ளார் சுந்தர்.சி  கிரியில் புதிதாக ஒன்றும் இல்லை என்றாலும் ரசிக்கும்படி எல்லாமே இருக்கிறது.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |