நவம்பர் 4 2004
தராசு
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
அறிவிப்பு
சமையல்
சிறுவர் பகுதி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  திரையோவியம் : பார்த்திபனுடன் ஒரு சந்திப்பு
  - சுமித்ரா ராம்ஜி
  | Printable version |

  அக்டோபர் இருபத்து மூன்றாம் தேதி சனிக்கிழமை மாலை எடிசன் க்ளியர் வியூ தியேட்டரில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் அவர் மகள் கன்னத்தில் முத்தமிட்டால் புகழ் கீர்த்தனாவுடன் குடைக்குள் மழை படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தியேட்டருக்கு கிளியர் வியூ என்ற பெயர் லொள்ளுதான். குடைக்குள் மழையா திரைக்குள் மழையா? ரீலுக்கு ரீல் இண்டெர்வெல் வேறு. கண்றாவி...

  பொறுப்பற்ற ஒரு டிவி ரியாலிடி ஷோவின் நிகழ்ச்சி தொகுப்பாளி பெண்ணின் பொய் காதலை உண்மை என்று நம்பி ஒருவன் எப்படியெல்லம் பாதிக்கப்படுகிறான் என்ற கதை. புதுமையான கதை. சொல்லும் விதமும் புதுமை. கையையும் காலையும் விலுக் விலுக்கென்று ஆட்டியே வெற்றி நடை போடும் மன்மத ராசா படங்களின் நடுவில் இப்படியும் ஒரு படம் எடுத்திருக்கும் பார்த்திபனை பாராட்டத்தான் வேண்டும். தவறான மொழியில் தவறான நாட்டில் எடுக்கப்பட்ட சரியான படம்.

  படம் முடிந்ததும் வந்திருந்த அனைருடனும் அழகாக பேசினார் பார்த்திபன்.

  நான் தைரியமாக அவரிடம் கேட்டே விட்டேன். ஓடாது என்று தெரிந்தும் எப்படி இந்த படம் எடுக்கும் தைர்யம் வந்தது என்று.

  கொஞ்சம் கூட உணர்ச்சி வசப்படாமல் அவர் சொன்னார். ஓடாது என்று எதிர் பார்த்த எத்தனையோ படங்கள் ஓடவில்லையா? ஓடும் என்று நினைத்தும் எத்தனையோ படங்கள் தோல்வி அடையவில்லையா ?. மக்களின் ரசனையை எடை போடுவது அவ்வளவு சுலபமென்றால் எல்லா படமும் வெற்றி படமாக ஏன் அமைய முடியவில்லை? என்றார். தவிரவும் சென்னை மற்றும் பல 'ஏ' ஏரியாக்களில் நல்ல வரவேற்பு இருப்பதாக சொன்னார். இவரும் கமல் போல வியாபார ரீதியான வெற்றியை விட வரவேற்பு ரீதியான வெற்றியை விரும்பும் எக்ஸென்ரிக் ரகம் என்பது புரிந்தது. கவிஞராயிற்றே அப்படித்தான் இருப்பார். இந்தப்படம் எடுக்க நாலு கோடி செலவாயிற்றாம். எத்தனை நாள் எத்தனை தியேட்டர்களில் எத்தனை பேர் பார்த்தால் நாலு கோடி கிடைக்கும்? திருட்டு VCD போடும் போட்டி வேறு.. எவன் தியேட்டருக்கு போவான்? .

  திருட்டு VCD பற்றியும் மிகுந்த மன வருத்தத்துடன் பேசி¢னார். சென்னையில் குடைக்குள் மழை பட வெளியீட்டிற்கு முன் திருட்டு VCD விற்பனையை எதிர்த்து உண்ணா விரதம் இருந்தாராம். அதனால் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையில் பல கோடி மதிப்புள்ள திருட்டு VCDக்கள் பறிமுதல் செய்யப்பட்டனவாம். படம் வந்த முதல் ஒரு வாரத்திற்கு குடைக்குள் மழை VCDக்கள் ஒன்று கூட வெளி வராதது தம் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றார். (VCD கிடக்கட்டும். அந்த ஒரு வாரமாவது தியேட்டரில் யாராவது வந்து பார்த்தார்களா?).

  அடுத்ததாக அவர் சொன்னதுதான் அவர் கனவுலகில் சஞ்சாரிக்கும் கவிஞர் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது. படிக்காத, வசதியில்லாத மக்கள் திருட்டு VCDயில் படம் பார்ப்பது புரிகிறது. அமெரிக்கா போன்ற இடங்களில் உள்ள உங்களைப் போன்ற படித்த வசதி படைத்தவர்கள் தம் மனசாட்சிக்குப் புறம்பாக ஏன் நடக்க வேண்டும். திருட்டு காபி என்று தெரிந்தும் ஏன் எடுத்து பார்த்து எங்கள் பிழைப்பை கெடுக்க வேண்டும் என்றார். மேலும் சட்டரீதியான நடவடிக்கையை விட மக்களின் மனசாட்சிக்கு அப்பீல் செய்வதுதான் தம்முடைய நோக்கம் என்றார். ஐயா கவிஞரே. கனவுலகை விட்டு கொஞசம் நனவுலகுக்கு வாங்க. இந்த மனசாட்சி இருக்கே மனசாட்சி அது ஒவ்வொரு சமயம் முழிச்சுக்கும் ஒவ்வொரு சமயம் தாச்சிக்கும். பல சமயம் அது முழிச்சுக்கறது சட்டத்துக்கு பயந்துதான். கொலை, கொள்ளை, குடும்பத்துக்கு துரோகம் இதுக்கெல்லாம் உறுத்துற அந்த உறுத்தல் கேவலம் திருட்டு VCDக்கும் உறுத்த வேண்டுமென்றால் அதற்கு குறைந்த பட்சம் ஆட்டுப்பால், வேர்க்கடலை சாப்பிட்டு நூல் நூர்த்து கதர் உடுத்தும் ஆளாக இருக்க வேண்டும். அந்த ரகமெல்லாம் ஒரே தோட்டாவிவ் அவுட்டாகி கோர்ட்டில் படமாக தொங்குகிறதை பார்த்திருப்பீர்கள்.

  அத்தனை இந்தியப் படங்களும் திருட்டு வீடியோவில் கிடைக்கும் பொழுது ஒரு ஹாலிவுட் திருட்டுப் படமும் அமெரிக்காவில் கிடைப்பதில்லையே. ஏன் தெரியுமா பார்த்திபன்? சட்டம். இரும்புக்கரம் கொண்டு எப்.பி.ஐ அமல் படுத்தும் சட்டம். இந்தியத் திரை உலகை திரட்டுங்கள். எப்.பி.ஐக்கு வேண்டுகோள் விடுங்கள். உளவாளிகளை வைத்து கடைகளை காட்டிக்கொடுங்கள். ஏதாவது உருப்படியாக செய்து தொலையுங்கள். வரட்டா? கம்பளிக்குள் புகுந்து கொண்டு 7G ரெயின்போ காலனி பார்க்க வேண்டும்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |