Tamiloviam
நவம்பர் 06 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : இலங்கைத் தமிழரின் இன்னல்கள்
- சிதம்பரம் அருணாசலம்
  Printable version | URL |

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள 6 வழிச் சாலைக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்டி சோனியாவிற்கு தனது விசுவாசத்தைக் காட்டியதுடன் மட்டுமில்லாமல், இலங்கைப் பிரச்னையில் ராஜீவ்காந்தி வழியில் தீர்வு காணவேண்டும் என்று வழக்கம் போல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார், தமிழகத்தின் பாதுகாவலர் என்று தன்னை அடிக்கடி கூறிக்கொள்ளும் முதல்வர்.

நான் கிள்ளுற மாதிரிக் கிள்ளுறேன், நீ அழுகிற மாதிரி அழு என்பது போல மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடியை உண்டு பண்ணுகிற மாதிரியான நாடகத்தை அரங்கேற்றி முடித்திருக்கிறார்.  அந்த நாடகத்தின் முதற்காட்சியில் மகள் கனிமொழியை வைத்து ஆரம்பித்திருக்கிறார். போதாக்குறைக்கு மனிதச் சங்கிலிப் போராட்டம்.  உண்மையில் வருத்தத்துடனும் நல்லது ஏதாவது பிறக்காதா என்கிற எதிர்பார்ப்புடனும் கலந்து கொண்டவர்கள் வாயில் தேனைத் தடவிய கைங்கரியத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் தமிழக முதல்வர். நாடகத்தை சுபமாக முடித்திருக்கிறார்.  மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதால் நாம் நமது போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று களிப்பு வேறு.  பிரதம மந்திரிக்குத் தந்தி அனுப்பிக் குவியுங்கள் என்கிற   நகைச்சுவைக் காட்சிகளையும் இணைக்கத் தவறவில்லை.              

இலங்கைத் தமிழர் பிரச்னை இங்கே திமுக அரசிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களிருந்து மக்களைத் திசை திருப்ப முடிவுசெய்யப்பட்ட திட்டம் என்பது வெட்டவெளிச்சமானது தான். துரதிருஷ்டம் என்னவென்றால் இதைப் பற்றி அறிவு பூர்வமாகச் சிந்திக்காமல், உணர்ச்சிவசப்பட்டு மக்கள் சிந்திப்பது தான்.  ஆட்சியில் அமர்ந்து அட்டகாசம் செய்பவர்களுக்கு இது மிகவும் வசதியாகப் போய் விடுகிறது.

இலங்கைத் தமிழர்கள் அவர்களது நாட்டில் பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்றால்,
அகதிகளாக இங்கு வந்து அவர்கள் படும் துயரங்கள் அதைவிட அதிகம்.  இங்குள்ள நிலைமையைப் பார்த்து, தாய்நாட்டிலேயே போய் செத்துவிடலாம் என்று புறப்பட்டுப் போனவர்கள் தான் அதிகம். ஆம்! உண்மை தான். மண்டபத்திலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்தவர்களுக்கு இதில் உள்ள உண்மை புரியும்.  குடும்பம் குடும்பாமாகத் தங்க நேர்கின்ற போது சரியான தடுப்பு வசதி கூட இல்லாமல் அட்டைப் பெட்டிகளை விரித்து அதைத் தடுப்பாக்கி அதற்கிடையே வாழ்கின்ற அவல நிலை இந்த அரசிற்க்குத் தேரியாதா என்ன? கொட்டும் மழையில் மனித சங்கிலியில் நின்றோம் என்று விளம்பரம் தேடும் மந்திரிகளால் இதற்குத் தீர்வு காண முடியாதா?  கோடிக் கணக்கில் சொத்து சேர்க்கத் தெரிந்திருக்கும் போது ஒரு கோடியில் குடியிருப்புத் திட்டத்தை அவர்களுக்கு ஏற்பாடு செய்து தர முடியாதா? அல்லது அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய முடியாதா?

நாம் இலங்கை அரசின் மீது கண்டனம் தெரிவித்துப் போராடுகிறோம். அது நமது தார்மீக இன உணர்வு.  இலங்கை அரசு செய்கிற அதே தவறை நாம் செய்யலாமா? தமிழக அரசு முதலில் இங்கிருக்கின்ற அகதிகளின் மேம்பாட்டிற்கு வழிசெய்து விட்டு போராட்டங்களில் குதித்தால் உண்மையில் அக்கறையுடன் செயல்படுகிறது என்று கூறலாம். அப்படி இல்லையென்றால் வாய்ச் சொல் வீரர்களாகத் தான் அவர்களைப் பார்க்க முடியும்.

oooOooo
                         
 
சிதம்பரம் அருணாசலம் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |