நவம்பர் 10 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
நையாண்டி
ஜன்னல் பார்வைகள்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
கட்டுரை
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : குழந்தைகள் தினம்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

Childrens Day - Nehruஇந்தியாவில் இன்று குழந்தைகள் தினம். சர்வதேச குழந்தைகள் தினம் இன்னும் ஒரு வாரத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு குழந்தைகளை நம்பித் தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது என்பதை மிகவும் திடமாக நம்பினார். குழந்தைகளை அவர் மிகவும் நேசித்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

உண்மையில் நாம் குழந்தைகளின் நலவாழ்வில் அக்கறை செலுத்துகிறோமா? உலகில் இன்று குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டிக்கேட்க - அவற்றை களைய நாம் ஏதாவது முயற்சி செய்கிறோமா? வறுமையால் கல்வி பெற முடியாதவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், காமக் கொடூரர்களிடம் சிக்கி சீரழியும் குழந்தைகள், பெற்றோர்களால் கைவிடப்பட்டு அனாதகளாக நிற்பவர்கள் என்று உலகில் குழந்தைகளுக்கு எத்தனை பிரச்சனைகள்.. சரியான ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு இல்லாமல் எத்தனை குழந்தைகள் இளமையிலேயே பல கொடுமையான நோய்களின் பிடியில் சிக்குகிறார்கள்? இவற்றை எல்லாம் தடுக்க நாம் ஏதாவது உதவி செய்கிறோமா?

மேற்கூறிய பல கேள்விகளுக்கும் நம்மில் பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில் "இல்லை" என்பதுதான். சமுதாயத்தில் வெகு சிலரே குழந்தைகள் பற்றிய பிரச்சனைகளுக்கு விடை காண - பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாகப் போராட முன்வருகிறார்கள். மற்றும் சிலர் யூனிசெப் போன்ற குழந்தைகள் நிறுவனங்களுக்கு ஒரு தொகை அனுப்புவதுடன் தங்கள் கடமை முடிந்ததென்று நினைக்கிறார்கள். இத்தகைய போக்கு இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கிலும் காணப்படும் ஒரு பொது மனோபாவம்.

சட்டம் போட்டு எல்லா தவறுகளையும் சரி செய்வது என்பது சாத்தியமே இல்லாத விஷயம். அப்படி இருக்க இந்த விஷயத்தில் நாம் தான் குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க / போராட முன்வரவேண்டும். சொட்டுமருந்து கொடுப்பதிலிருந்து குழந்தைக் கல்வி, பராமரிப்பு விஷயங்களைப் பற்றி பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறவதிலிருந்து ஆரம்பித்து, குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டுவது, பாலியல் பலாத்காரங்கள், பிச்சை எடுப்பது உள்பட சமூக விரோதிகளால் பல விதங்களில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய நீதி மற்றும் ஆதரவு கிடைக்க வழி செய்வது போன்ற பல விஷயங்களிலும் அரசியல்வாதிகளையும், அரசு அலுவலர்களையும் பெருதும் நம்பிக்கொண்டிருக்காமல் பொதுஜனமாகிய நாம் - தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாகவோ, தனிநபராகவோ உதவி செய்ய முன்வரவேண்டும்.

நம் வீட்டுக் குழந்தைகளை கண்ணை இமை காப்பது போலக் காக்கும் நாம் அண்டை வீட்டுக் குழந்தையின் நலனிலும் கொஞ்சம் அக்கறை செலுத்தலாம் அல்லவா.. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிக்கேற்ப நம் சுற்றுப் புறத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளின் நலனிலும் அக்கறை செலுத்த முற்படுவோம். அப்போதுதான் குழந்தைகள் வளமான வாழ்வு வாழும் சூழ்நிலை ஏற்படும். நேரு கண்ட கனவும் பலிக்கும்.

oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |