நவம்பர் 10 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
நையாண்டி
ஜன்னல் பார்வைகள்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
கட்டுரை
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : மருத்துவ காப்பீடு
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

மருத்துவ காப்பீடுகளின் கட்டனமும் மருத்துவ செலவும் அதிகமாகி கொண்டே போகின்றன. அமெரிக்காவில் நிறைய பணி இடங்களில் இவற்றை ஊதியத்துடன் தருகின்ற போதும், பல   மென்பொருளாளர்கள், மணிக்கு ஊதியம் பெற்று நிறுவனத்தின் Consultant  ஆக இருப்பவர்களுக்கு சில சமயம் இந்த உதவி கிடைப்பதில்லை. தானே சந்தாகட்டினால் மாத கட்டணம் இன்னும் அதிகம் என்பதால் பெரும்பாலோர் ஒரு project இல் இருந்து இன்னொன்றுக்கு மாறும் இடைக்காலத்தில் காப்பீடு இல்லாமல் இருக்கின்றனர். அதேபோல சொந்தமாக தொழில் நடத்தும் பலர் இது போல காப்பீடுகள் பெற்றிருப்பதில்லை.

காப்பீடுகளில் பலவகை உண்டு. புதிதாக வேலைக்கு சேர்தவுடன் பலவகை படிவங்கள், காப்பீடு பற்ரிய குறிப்புகள் தலை சுற்றுகிறதா? இவை மருத்துவருக்கு எப்படி அவர்கள் செயல்களுக்கு ஊதியம் தருகின்றது என்பதையும் எந்த காப்பீடு உசிதமானது என்பதை தெரிந்து கொள்ளும் விவரம், இந்த காப்பீடு தரம், இவற்றில் எப்படி சில மருத்துவர்கள் இடம் பெறுகிறார்கள் என்பதை பற்றியும் வரும் வாரங்களில் எழுதுகிறேன்.

இந்த பதிவில் காப்பீடே இல்லாமல் இருப்பவர்கள் எங்கே உதவி பெற முடியும் என்பதை அவசியம் கருதி எழுதுகிறேன்.

காப்பீடு இல்லாதவர்கள் , ஊரிலிருந்து வந்திருக்கும் பெற்றோர்கள் இவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால்: உடல் நல துறை நடத்தும் சில மருத்துவமனைகளுக்கு செல்லலாம். இவை பெரும்பாலும் walk in clinicகுகளே. உதாரணமாக நியு ஜெர்ஸியில் Chandler மருத்துவமனைகள் நியுப்ரன்ஸ்விக், நியுவர்க் போன்ற இடங்களில் இருக்கிறது. இங்கே கட்டணம் எதுவும் இல்லை.

திடீரென மாரடைப்பு போன்ற அவசர மருத்துவ உதவிகள் வேண்டும் என்றால் 911 கூப்பிட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லவும். அங்கே ஆரம்பத்திலேயே நோயாளிக்கு காப்பீடு பலன் இல்லை என்பதை சொல்லிவிடுங்கள். அங்கே உள்ள charity care க்கு விண்ணப்பிக்கவும் . என்ன பெரிய அறுவை சிகிச்சையானாலும் இந்த charity care பணம் தந்துவிடும். நீங்கள் கவலை பட தேவை இல்லை.

ஐந்து  வருடங்களுக்கு  முன்பு ஸ்மித் க்லைம் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த நண்பரின் பெற்றோர் வந்திருந்தனர். அவருடைய ஊதையம் 100000 $ என்றபோதிலும் அவருடைய பெற்றோருக்கு காப்பீடு இல்லை. திடீரென மாரடைப்பு வந்த தந்தையை மருத்துவ மனையில் சேர்த்து, தமனிகளில் அடைப்பு இருப்பதை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்தார்கள். அதன் பின் பல சிகிச்சைகள், வாராவாரம் பரிசோதனைகள் என்று மருத்துவ கட்டணம் மிக அதிகமாகி போனது. சில மாதங்கள் நன்றாக இருந்த அவர் இறந்துவிட்டார். மருத்துவமனையில் இருந்து வந்த கட்டணம் மிக அதிகம். நண்பர் மருத்துவமனையின் அலுவலகத்திற்கு நேரில் சென்று த ன் ஊதிய விவரங்கள், செலவு எல்லாம் விவரித்து தன்னால் மாதம் $200 மட்டுமே கட்ட முடியும் என்று சொல்ல, மருத்துவமனை அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. நண்பர் இருக்கும் வரை மாதம் 200$ கட்டுவதாகவும் இந்த கடனால் அவருடையை மனைவி, குழந்தைகள் எந்த வித கட்டுமானங்களுக்கும் உள்ளாக மாட்டார்கள் என்று. ஒருவருடம் பணம் கட்டியபின், மருத்துவமனை மீதி தொகையை ரத்து செய்து விட்டது.

மருத்துவமனையில் இருந்து வரும் கட்டணம் கண்டு மலைக்காமல் அவர்களுடன் நேரிடையாக பேசவோஎழுதவோ செய்தால், மருத்துவமனைகள் இந்த செலவீனங்களை ரத்து செய்யும்.

சாதாரண சுரம் போன்ற கோளாறுகளுக்கு, அல்லது இரத்த அழுத்தம் போன்று தொடர்ந்து மருந்து எடுத்து கொள்பவர்கள் இலவசமாக மருந்து பெற்று கொள்ள உங்கள் மாநில உடல்நலதுறைக்கு தொலை பேசி விவரங்கள் கேட்கவும் அல்லது இங்கே http://www.freemedicinefoundation.com/ செல்லவும். http://www.freemedicineprogram.com/ இது போன்ற இடங்களில் காப்பீடு இருந்தாலும் மருந்துகளின் விலை அதிகமாகும் போது பெற்று கொள்ள முடியும்.

மாதா மாதம் பொது நலதுறையில் பல்வேறு நகரங்களில் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்கிறார்கள். ஏதேனும் ஆபத்து இருந்தால் அவர்களே மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வார்கள். அப்போது அது தொடர்பான கட்டணம் கட்டுவதோ உதவி பெறுவதோ அவர்களின் வேலை. மாதாமாதம் எங்கே கிளினிக்குகள் நடக்கிறது என்ற அட்டவனை தயாரிக்க படுகிறது. நீங்கள் உங்கள் பொதுநல துறையை தொடர்பு கொண்டால் அதை வீட்டு முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். இதுபோன்ற கிளினிக்குகளில் பரிசோதனைகள், மாமோகிராம், prostate exam, rectal exam, chest xray, blood test ஆகிய அனைத்தும் செய்ய படும்.

கண்கள், பற்கள் இவற்றை பரிசோதிக்கவும் பல இடங்களில் வசதி உண்டு. நீங்கள் தொடர்பு கொண்டால் உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள கண் மருத்துவரின் பெயரும் தொலைபேசி எண்ணும் அனுப்புவார்கள். நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம். அத்தோடு வயதானவர்களுக்கு இலவச கண்ணாடியும் கிடைக்கும். காது கேட்காத முதியவர்களுக்கு இந்த பரிசோதனையும் ஹியரிங் எய்டும் கிடைக்கும். இதுபோன்ற வசதிகளுக்கு பொதுநலதுறை, முதியோர்களுக்கான அலுவலகம் இவற்றை தொடர்பு கொள்ளவும். இந்த எண்கள் உங்கள் தொலைபேசி புத்தகத்தில் இருக்கும்.

குழந்தைகளுக்கு காப்பீடு இல்லை என்றால் உடனே சோஷியல் அலுவலகத்தை தொடர்பு கொண்டால், இங்கே பிறந்தவர்களானால் 1 வாரத்துக்குள் மெடிக்கெய்ட் அட்டையும், இங்கே பிறக்காதவர்களுக்கு மாநில குழந்தைகள் உடல் நல  பாதுகாப்பு அட்டையும் அனுப்பபடும்.

எந்த ஊரில், நாட்டில் பிறந்திருந்தாலும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்க படும். இதன் அட்டவணையும் எங்கே கிளினிக்குகள் நடத்த படுகின்றன என்பதையும் உங்கள் ஊரில் உள்ள உடல் நல துறையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கல்.செண்ட்ரல்  நியுஜெர்ஸியில் இருப்பவர்கள் 732 745 3100 தொடர்பு கொண்டால் என் காரியதரிசிகள் 40 பக்கம் கொண்ட ஒரு புத்தகம் அனுப்புவார்கள். அதில் எந்த உடல் நிலைக்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் போன்ற விவரங்கள் இருக்கும். குழந்தைகள் உடல் நலம், மன நலம் பற்றிய இ ல வ ச சிகிச்சைகளுக்கு children’s directory என்ற புத்தகத்தை கேட்டு பெற்று கொள்ளுங்கள். 169 பக்கம் கொண்ட இதில் நியுஜெர்ஸியில் உள்ள பல  இ ல வ  ச கிகிச்சை இடங்களும் தொலைபேசி எண்களோடு தரபட்டிருக்கிறது. இதை சமீபத்தில்தான் தயாரித்து முடித்தேன். 211 தொடர்பு கொண்டால் நியுஜெர்சியில் உள்ள பல  மருத்துவ சிகிச்சை கிளினிக்குகளை அறிந்து கொள்ள முடியும்.


இதையும் மீறி உங்களுக்கு காப்பீடு அவசியம் வேண்டும், இல்லை என்றால் பாதுகாப்பு இல்லாதது போல இருக்கிறது என்றால், family care நிறுவனத்தை தொடர்பு கொண்டால் அவர்கள் மாத கட்டணம் 5$ முதல் 50 வரை வசூலித்து உங்கள் குடும்பத்திற்கு காப்பீடு வழங்குவார்கள். இது 4 பேர் கொண்ட குடும்பத்தின் மாத வருமானம் 5000$க்குள் உள்ளவர்களுக்கு. அதற்கு மேல் வருமானம் இருப்பவர்கள் கட்டணம் சற்றே கூடுதலாக இருக்கும்.

பிறவியிலே குறைபாடுள்ள குழந்தைகள் இருந்தால், அரசே அத்தனையும் செய்யும். அவர்களே உங்களை அணுகுவார்கள். வீட்டிற்கு  பிதுநலத்துறையிலிருந்து சமூக நல  ஊழியர் வந்து எல்லாவற்றைம் பரிசோதித்து தேவையான ஏற்பாடுகள் செய்வார்கள்.  காது முழுதும் கேட்காதவர்கள் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் உங்கள் பெயரை சேர்ப்பது அவசியம். அருகில் ஏதேனும் தீவிபத்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை பாதுகாப்பது, தொலை பேசி அடித்தால் விளக்குகள் எரிவது போன்ற ஏற்பாடுகளை இலவசமாக செய்து தருவார்கள். இந்த குழந்தைகள் பற்றி விவரமாக தனியாக எழுதுகிறேன்.

அதுபோல மனைவி கருவுற்றிருக்கும் ஓது காப்பீட்டை இழக்க நேரிட்டால் அதற்கும் தனி உதவிகள் உண்டு. இதை planned parenthoodடன் பொதுநலத்துறை உதவி செய்கிறது மருத்துவ உதவிகளும் காப்பீடும் மிக சிறந்தது இல்லை என்றாலும் பலவகைகளில் அமெரிக்கா முயற்சி செய்கிறது. விவரங்கள் பலருக்கு தெரிவதில்லை என்பதுதான் மிக பெரிய குறை. உங்கள் வீட்டில் புகுந்துவிட்ட பூனையை பிடிப்பது முதல் புல் வெட்டுவதுவரை உதவி பெற முடியும்.

oooOooo
பத்மா அர்விந்த் அவர்களின் இதர படைப்புகள்.   மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |