நவம்பர் 10 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
நையாண்டி
ஜன்னல் பார்வைகள்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
கட்டுரை
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அமெரிக்க மேட்டர்ஸ் : அமெரிக்க தேர்தல் அனுபவங்கள்
- ஆனந்த் சங்கரன் [anand_sankaran@yahoo.com]
| Printable version | URL |
"ஆண்டுச் சம்பளமாக ஒரு டாலரை மட்டுமே பெறபோவதாக அறிக்கை வேறு விட்டார்."

Jon Corzine wins Electionஅமெரிக்க தேர்தல்களைப் பற்றி அப்படி இப்படி  கேள்விப்பட்டிருந்த போதும், சமீபத்தில் நடந்த தேர்தலால் அதிகம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அசிங்கமான அரசியல் அடிதடிகளில் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல அமெரிக்கர்கள் - ஜெயிப்பதற்காக ஒருவர் மீது ஒருவர் எந்த அளவிற்கு சேற்றை வாறி வீசுவார்கள் என்பதை உணர்ந்த போது ஆச்சரியம் மற்றும் அதிர்சியாக இருந்தது.

நியூஜெர்சி மாநில ஆளுனர் (கவர்னர்) தேர்தலில் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர்கள் முதலில் ரொம்பவே நாகரீகமாகத் தான் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கினார்கள். நாட்கள் செல்லச் செல்ல பிரசாரத்தின் கண்ணியத் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. தேர்தல் நடக்க சில வாரங்களே இருக்கும் நிலையில் ஜனநாயக வேட்பாளரின் முன்னாள் மனைவி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை (தன் கணவரைப் பற்றி) விமர்சித்து எதிரணிக்கு ஓட்டுப்போடுமாறு கூறியதை என்னவென்பது? தேர்தல் அறிவிப்பு வெளிவந்து பலநாட்களுக்கு வேட்பாளர்களின் விபரமே தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நியூஜெர்சி மக்கள் இந்த வேட்பாளர்களின் எதிர்மறை பிரசாரத்தால் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் தாங்கள் ஓட்டுப்போடவே போகப்போவதில்லை என்று பகிரங்கமாகவே சொல்ல ஆரம்பித்தார்கள்.

இந்த அழகில் முக்கிய வேட்பாளார்கள் இருவரும் பணத்தை தண்ணீராக செலவு செய்ததை எந்த தேர்தல் கமிஷனும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. வேட்பாளர்கள் இருவருமே நிஜத்தில் நிச்சயம் நடக்காத - நடக்க முடியாத விஷயங்களை எல்லாம் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சயம் செய்து காட்டுவோம் என்று டன் கணக்கில் வாக்குறுதி கொடுத்தது தனிக்கதை.

எல்லாக் கதைக்கும் வரும் முடிவைப் போல சென்ற செவ்வாயன்று நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜான் மகத்தான வெற்றி பெற்றார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விமர்சனங்கள் தன்னை பெரிதும் பாதித்ததாக குறிப்பிட்டவர் நியூஜெர்சியின் பொருளாதாரா சீரழிவை நேராக்க தன்னால் முடிந்த உதவியாக தன்னுடைய ஆண்டுச் சம்பளமாக ஒரு டாலரை மட்டுமே பெறபோவதாக (அட நம்ம அம்மாவையே மிஞ்சிட்டாரே !) அறிக்கை வேறு விட்டார். (எந்த வளர்ப்பு மகனுக்கு எத்தனை பில்லியனில் திருமணம் நடக்க போகிறதோ ?)

மொத்தத்தில் ஒரு பேண்டசியாக எனக்குள் இருந்த அமெரிக்க தேர்தலின் சாயம் அசிங்கமாக வெளுத்தது. உலகின் எந்த மூலையாக இருந்தாலும் - எவ்வளவு முன்§னறிய நாடாக இருந்தாலும் சரி அரசியல், தேர்தல் என்று வந்தால் எல்லா இடத்திலும் நடைபெறும் அரசியல் கூத்துகள் அசிங்கமானவையே. உலகில் அனைத்து நாடுகளும், அனைத்து அரசியல்வாதிகளும்  இந்த விஷயத்தில் ரொம்ப ஒத்துமையாகவே இருக்கிறார்கள்.

oooOooo
ஆனந்த் சங்கரன் அவர்களின் இதர படைப்புகள்.   அமெரிக்க மேட்டர்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |