நவம்பர் 10 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
நையாண்டி
ஜன்னல் பார்வைகள்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
கட்டுரை
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஜன்னல் பார்வைகள் : ஊழலோ ஊழல்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| Printable version | URL |

மேம்பாலத்தில் ஊழல், சுடுகாட்டில் ஊழல், செத்த பிணம் வைக்கப்படும் சவப் பெட்டி செய்வதில்  ஊழல், பங்கு பத்திரத்தில் ஊழல், ஆயுத பேர ஊழல் என்று பல ஊழல் செய்திகளை கேட்டு மூளை மங்கிப் போன இந்தியர்களுக்கு புத்தம் புதிய காப்பியாக வந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் ஊழல் என்ற செய்தி. இது என்ன உணவுக்கு எண்ணெய் திட்டம் அதில் என்ன ஊழல் என்று நினைக்கலாம். வாருங்கள் சற்று பின்னோக்கிப் போவோம்.

1990ம் ஆண்டுகளில் ஈராக் மீது அமெரிக்காவும், ஜ.நா. சபையும் பொருளாதார தடை விதித்தது. இதனால் ஈராக்

ஜோக்

"அம்மா. அப்பா வரலாறு பாடத்துல ரொம்ப மோசம்மா"

"ஏண்டா?"

"முதலாம் பானிபெட் போர் எங்கே நடந்ததுன்னா 'ராணிபெட்'ல நடந்ததுன்னு தப்பு தப்பா சொல்லி தர்றாரும்மா"

- சம்பத்
நாடு பிற நாடுகளுக்கு எண்ணெய்களை ஏற்றுமதி செய்து காசு பார்க்க முடியாமல் தவித்தது. இதனால் உணவுப் பொருட்களை கூட பெற முடியாமல் இருந்த ஈராக்கைப் பார்த்து ஜ.நா. சபை பரிதாபப்பட்டது. இதன் காரணமாக ஜ.நா. சபையால் உணவுக்கு எண்ணெய் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதாவது ஈராக் எந்த நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்கிறதோ அந்த நாடுகளிடம் இருந்து உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது. அப்படி இந்த திட்டத்தின் படி இந்தியாவுக்கு எண்ணெய் கொடுக்கும் பொழுது தான் அதில் ஊழல் நடந்துள்ளது. இது எல்லாம் நடந்து 15 ஆண்டுகள் ஆகி விட்டது.

சமீபத்தில் ஈராக்கில்  சதாம் உசேனை நீக்கிவிட்டு அவர்களின் பழைய கணக்குகளை ஜ.நா. சபை தோண்டிப் பார்த்த பொழுது தான் உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் சதாம் பல கோடிகளை பெற்றுள்ளார். அவரைப் போல் பலரும் ஊழல் செய்துள்ளனர் என கண்டு பிடித்தது. அதன் விளைவாக ஜ.நா. சபை வோல்கர் என்பவரை தலைவராக கொண்டு வோல்கர் கமிட்டி வைத்த விசாரிக்க சொன்னது. அவர் விசாரித்து வெளியிட்ட அறிக்கை தான் இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கும், தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் நட்வர்சிங்கிற்கும் இந்த ஊழலில் பெரும் பங்கு உண்டு என்று அறிக்கை வெளியிட்டது. இந்தச் செய்தியை இந்து பத்திரிக்கை முதல் பக்கத்தில் வெளியிட பிரச்சினை பற்றிக் கொண்டு பாரதீய ஜனதா போராட்டத்தில் குதித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி நாங்கள் கன்னியமானவர்கள் என்று சொன்னதோடு நிற்காமல் ஜ.நா. சபைக்கும், வோல்கருக்கும் நோட்டிஸ் அனுப்பப்படும் என்று அறிக்கை வெளியிட்டது.

ஜ.நா. சபைக்கும், வோல்கருக்கும் நோட்டிஸ் அனுப்ப காங்கிரஸ் கட்சி என்ன உலக நீதி மன்றமா என்று ஒரு கூட்டம் இங்கு விவாதத்தில் இறங்கி இருக்கிறது. இந்த அக்கப் போரை பார்த்த பிரதமர் வழக்கம் போல ஒரு கமிட்டியை போட்டு இக்கமிட்டி விசாரிக்கும் என்று சொல்லிவிட்டார். ஆனால் ஊழலில் பெயர் அடிபடும் நட்வர் சிங்கோ பதவியை விட்டு விலக மாட்டேன் என்று சொன்னதோடு இது எல்லாம் பாரதீய ஜனதாவின் சதி என்று ஒரு அணுகுண்டை போட்டுவிட்டார். அதற்கு கம்யூனிஸ்ட்கள் பக்கவாத்தியம் அடிக்கின்றனர். இந்தனை ரகளை நடக்கும் பொழுது ஒரு அதிசயம் நடந்துள்ளது. அது என்னவென்றால் காங்கிரஸ் கட்சியையும், அதன் ஆட்சியையும் கடுமையாக எதிர்க்கும் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாட்ஸ் நட்வர் சிங்கிற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒரு வேலை இந்த இருவருக்கும் ஏதாவது கொடுக்கல், வாங்கல் நடந்திருக்குமோ என்னமோ, யார் கண்டது.ஒரு பக்கம் பத்திரிக்கைகள் இந்திய கிரிக்கெட் அணியை புகழ்ந்து கொண்டிருக்கின்றன. ராகுல் டிராவிட், தோனியை கிரிக்கெட் காவல் தெய்வங்கள் என்று ஒரு பத்திரிக்கை வர்ணணையில் இறங்கி விட்டது. மற்றொரு பத்திரிக்கை எல்லாம் சச்சினால் தான் நடக்கிறது. அவரின்றி ஒரு அணுவும் அசையாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்றொரு பக்கம் பழைய வங்கப்புலி கங்குலி சோகமாக துலீப் டிராபி போட்டியில் 14 ரன்னில் ஆட்டம் இழந்து தலையில் கை வைத்த மாதிரி படம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கங்குலியை கடக ராசி தான் பாடாய் படுத்துகிறது என்று கிரிக்கெட் புகழ் ஜோதிடர் தாருவாலா சொல்லியிருக்கிறார். கங்குலியின் அம்மா இவரிடம் 2 நாட்கள் காத்திருந்து ஜோதிடம் கேட்டதில், கங்குலி 21 அல்லது 32ம் நம்பர் சட்டையை அணிந்தால்; அணிக்கு திரும்பலாம் என சொல்லி இருக்கிறாராம். ஜோதிடக்காரர்களுக்கு இந்தியாவில் தனி மரியாதை தான் போங்கள்.இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று தமிழக தொலைக்காட்சிகள் அறிவிப்புகள் வெளியிடுவதைப் போல் சென்னை நகர போலீஸ் கமினர் நடராஜ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அது என்ன செய்தி என்றால் சென்னையில் முதன் முறையாக ஆண் விபச்சாரி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தான் அது. இதனை பற்றி மேலும் எழுதினால் தமிழோவியம் எடிட்டரிடம் கெட்ட பெயர் தான் கிடைக்கும்.Gajiniவெற்றி பெறுங்கள். பணம் பெறுங்கள். நன்றாக வளருங்கள். வாழ்த்துக்கள். ஆனால் ஒன்றே ஒன்று செய்யுங்கள். படத்தில் கதை என்று உங்கள் பெயரை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். குறைந்த பட்சம் அதை மட்டுமாவது நீக்கி விடுங்கள். இப்படி ஒரு கோரிக்கையை யார் யாரிடம் வைக்கிறார்கள் தெரியுமா? ஊரே ஆஹா, ஓகோ என்று புகழ்ந்து கொண்டிருக்கிற கஜினி படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிற்கு பரசுராம் என்று கட்டுரையாளர் தான் இக்கோரிக்கையை முன் வைக்கிறார். மெமண்டோ என்ற படத்தில் பதினைந்து நிமிட ஞாபக சக்தி இழப்பு என்கிற கதையின் ஆதாரப் புள்ளியை வைத்துப் படத்தை இயக்கியவர் கிரிஸ்டோபர் நோலன். இந்த படம் கிட்டதட்ட ஏழு சர்வதேச இயக்குனருக்கான விருதையும், சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றிருக்கிறது என்று சொல்லும் பரசுராம். இந்த கதையை அப்படியே காப்பி அடித்து ஒரு பாட்டு, ஒரு காதல் காட்சி, ஒரு சண்டை என்று படம் எடுத்து விட்டு அதில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று முருகதாஸ் பெயர் போடுவதை கடுமையாக சாடியிருக்கிறார். முருகதாஸ் இயக்கிய ரமணா படத்தை அப்படி, இப்படி என்று லேசுபாசாக மாற்றி வேறு ஒரு படம் எடுத்தால் முருகதாஸ் சும்மா இருப்பாரா என்றும் பல கேள்விகளை முருகதாஸை பார்த்து  கேட்டுள்ளார்.  
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   ஜன்னல் பார்வைகள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |