நவம்பர் 10 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
நையாண்டி
ஜன்னல் பார்வைகள்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
கட்டுரை
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : காதல் என்றொரு கனவு
- சத்தி சக்திதாசன் [sathnel.sakthithasan@bt.com]
| Printable version | URL |

சிரித்திருந்தாள்
சித்திரம் போலே - ஆம்
பூத்திருந்தாள்
பூவையைப் போலே
அது
காதல் என்றொரு கனவு

நிறைந்திருந்தாள்
நிலமகள் போலே - ஆம்
படர்ந்திருந்தாள்
பச்சைக் கொடியினைப் போலே
அது
காதல் என்றொரு கனவு

கமழ்ந்திருந்தாள்
கலைமகள் போலே - ஆம்
விடிந்திருந்தாள்
வீசும் காலைத் தென்றலைப் போலே
அது
காதல் என்றொரு கனவு 

இசைத்திருந்தாள்
இனிய தமிழிசை போலே - ஆம்
தெளிந்திருந்தாள்
தேன் வடியும் பூரண நிலவினைப் போலே
அது காதல் என்றொரு கனவு

காதல் என்றொரு கனவு
கனிந்து வருகின்ற வேளையிது
காலம் என்றொரு புயற்காற்று
காத்திருக்குமா கனியும் வரை ?

oooOooo
சத்தி சக்திதாசன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |