நவம்பர் 11 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
கட்டுரை
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
சிறுகதை
கட்டுரை
சமையல்
கட்டுரை
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  தராசு : சங்கடத்தில் சங்கரமடம்
  - மீனா
  | Printable version |

  சங்கரராமன் கொலையில் காஞ்சி மடாதிபது ஜெயேந்திரருக்கு நேரடித் தொடர்பு உள்ளது என்று கூறி மூன்று பிரிவுகளில் அவரைக் கைது செய்துள்ளனர் தமிழக போலீசார். மடாதிபதிகள் மீதும், இந்துத்துவா கொள்கைகளிலும் அபிரிதமான நம்பிக்கை வைத்துள்ள ஜெயலலிதா ஆட்சியிலேயே காஞ்சி மடாதிபதியைக் கைது செய்துளார்கள் என்றால் போலீசார் எந்த அளவிற்கு ஆதாரங்களைக் கையில் வைத்திருப்பார்கள் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டியுள்ளது. போலீசார் கைது செய்தது நாதியற்ற குப்பனையோ சுப்பனையோ இல்லை. மகாராஜாக்களும், நாட்டின் பிரபலத் தலைவர்களும் வந்து தரிசனத்திற்காக காத்து நிற்கும், பல நூற்றாண்டு கால சரித்திரம் கொண்ட ஒரு மடாதிபதியை. இதில் ஏதாவது ஒரு சிறிய தவறு ஏற்பட்டால் கூட இந்திய அளவில் தங்கள் நிலை என்ன ஆகும் என்பதைக் காவல் துறையினர் நன்றாக உணர்ந்தே இருப்பார்கள். அப்படி இருந்தும் அவர்கள் இத்தகைய துணிச்சலான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்கு நிச்சயம் தகுந்த காரணம் இருந்திருக்கவேண்டும்.

  நிற்க ஜெயேந்திரர் கைது நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் பரவலான அளவில் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கிறது. பல மடாதிபதிகளும், பா.ஜனதா விஷ்வ ஹிந்து பரிஷித் தலைவர்களும் பந்த் நடத்த முடிவு செய்துள்ளார்கள். மேலும் சம்மந்தமே இல்லாத வகையில் காஞ்சி மடாதிபதியின் கைதிற்கு கிறிஸ்தவ அமைப்புகளும் நாத்திகர்களும் உள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஜெயேந்திரரை ஒரு மூன்றாம் தரக் கைதியைப் போல போலீசார் நடத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்கள். மேலும் குஜராத் முதல்வர் மோடி, பிரதமரை நேரடியாக இந்தப் பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று வேண்டிகோள் விடுத்திருக்கிறார்.

  இவர்கள் அனைவருக்கும் நமது கேள்வி இதுதான். தகுந்த ஆதாரம் இல்லாமல் போலீசார் நிச்சயம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு என்னவோ சாதாரணம் இல்லை. ஒரு கொலைக் குற்றம். அப்படியிருக்க, அதற்கேற்றபடிதான் போலீசார் நடந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளைக் கலைக்க பெருமளவு சாத்தியம் இருப்பதாக கருதியே கோர்ட் 15நாள் அவரைக் காவலில் வைக்க உத்திரவிட்டுள்ளது. இதில் தவறு ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. மேலும் மடாதிபதி அவர்கள் பரவலாகவே அரசியல் சம்மந்தப்பட்ட மற்ற விவகாரங்களிலும் அதிகமாகவே ஈடுபட்டு வந்தார். இதில் மறுப்பதற்கோ மறைப்பதற்கோ ஒன்றும் இல்லை. ஜெயேந்திரர் நிஜத்தில் குற்றம் ஒன்றும் செய்யாதிருந்தாலும், இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் அனைத்து இந்தியர்களும் மதித்து வணங்கும் ஒரு மடத்தின் பீடாதிபதி இத்தகைய கொலைக்குற்றத்தில் கைதானதே காஞ்சி மடத்திற்கு ஏற்பட்ட ஒரு கரும்புள்ளியாகும். இதில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மடத்தின் நிலை என்ன ஆகுமோ? நிச்சயமாகத் தெரியவில்லை.

  இந்நிலையில் பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகள் இந்தப் பிரச்சனையை மதரீதியாக அணுகி மீண்டும் ஆதாயம் தேட முயற்சிப்பதை விட்டுவிட்டு உண்மையைக் கண்டுபிடிக்க காவல் துறைக்கு ஒத்துழைக்க வேண்டும். பந்த் செய்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஜனங்களின் பொது வாழ்க்கை பாதிக்கப்படுமே அன்றி வேறு ஒரு நடக்கப்போவதில்லை. மேலும் கொலை செய்யப்பட்டவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான்... காஞ்சி மடத்தின் மீது அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். அவரது மரணத்திற்காக நீதி கேட்பதும் இந்துத்துவா இயக்கங்களின் கடமை தான்!! எனவே அரசியல் தலைவர்களே!! மடாதிபதிகளே!! சட்டம் தனது வேலையைச் செய்யட்டும். தயவு செய்து அதில் குறுக்கிடாதீர்கள்.

   

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |