நவம்பர் 11 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
கட்டுரை
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
சிறுகதை
கட்டுரை
சமையல்
கட்டுரை
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : திருநெல்வேலியில் ஒரு தீபாவளி..
  - முரளி வெங்கட்ராமன்
  | Printable version |

  தீவுளி வந்திடிச்சின்னாலே ஒரெ சந்தோசம்தேன்.  பாளையங்கோட்டைல இருந்து அடைக்காணில இருக்குற எங்க பாட்டி வீட்டுக்கு ரெண்டு நா முன்னமேயே போயிருவம்.  எங்கூரில எங்க வூட்லேந்து காலையில 26Aனு ஒரு போர்டு போட்டு வரும் ஒரு கட்டபொம்மன் வண்டி.  செவந்திப்பட்டில எங்க பெரியப்ப இருக்காக.  இந்த வண்சி "26 ஆ டவுன்"னு போர்டு போட்டு செவந்திப்பட்டில இருந்து கெளம்பும்.  நாங்க மகராஜநகர்ல ஏறிக்குவோம்.  நெரிய பேருக்கு இந்த வண்டிதேன் டவுனுக்கு போகவிட்டு "34B பள்ளாக்கால் பொதுக்குடி" பஸ் ஆகப்போவுத்துன்னு தெரியாது. இதெல்லாம் எங்கள மாதிரி செல பேருக்கு மட்டும்தேன் தெரியும்னு எனக்கு ஒரு சந்தோசம்.  இந்த ஒரு வண்டி தேன் எங்கூருக்குள்ள போயிட்டி வரும். மத்தவண்டி எல்லாம் போவாது. வெளியிலே எறக்கி விட்டுருவானுங்க.  ஒரு மைலு நடக்கணும்.  சுத்த போரு.

  தீவாளி அன்னிக்கு மூணு மணிக்கு எளுந்திருக்க சொல்லுவாக.  காலையிலே எவன் எந்திரிப்பேய்ன் ? முணு மணிக்கெல்லாம் எந்திரிக்கரதா அப்ப அம்மாகிட்ட சொல்லிபுட்டு வீராப்புல ஒறங்கிருவேன்.  ஆனா காலையிலே அப்பாரு எண்ணை தேய்க்க "எலே எளுந்திரிலே..கெளக்கு வெளுக்கப் போவுது"னு மெல்ல படுத்திருக்குர போர்வைய உருவுவாக. "யெப்பே..செத்த நாளி இன்னும் தூங்குரேன்"னு வாய் விட்டு கேக்க தெகிரியம் கெடயாது.  மெல்ல போர்வைய உருவின பொறவு ஃபேன் காத்து மேல பட்டு குளுரும். கொஞ்சம் அதுக்ககனாச்சும் தள்ளி படுப்பேய்ன்.  அவரு மெல்ல அடியிலேர்ந்து பாய உருவுவாரு..கொஞ்ச நேரம் அப்டியே உருண்டு போய் தரையில படுப்பேன்.  ஆகா..தரைல படுக்கர சொகம் எதுலயும் இல்ல.
  "ஏலே..தரைல படுக்காதலே வாதம் வந்திரும்"னு அப்பாரு சத்தம் போடுவாக.

  முளிச்சிக்குடுவேன். அதுக்குள்ள பாட்டி தாத்தா அத்தை மாமா எல்லாரும்  வரிசயா குளிக்க வென்னீ போட்டு வெச்சுருப்பாக பாட்டி.  ஆமே, எல்லாரும் வந்திருவாக கொண்டாட.  யாத்தி..எம்புட்டு பெரிய அண்டா அது!  அடி பம்புல தண்ணிய அடிச்சி அண்டாவுல கொட்டுவாக.  கொல்லை திண்ணைல எங்கனையெல்லாம் ஒக்கார வெச்சி உச்சந்தலையில சூடு பரக்க எண்ண தேப்பாக.  தலையில எண்ண தேச்சா சரி. மூஞ்சில வேர தேப்பாக.

  "பாட்டி, மூஞ்சில வேணாம் பாட்டி"னு கத்துவேன். "எலெ..தேக்கலன்ன, மூஞ்சி கொரங்கா போயிரும்" நு சொல்லி தேய்ப்பாக. பயந்துகிட்டு தேய்க்க விடுவேன்.  உச்சந்தலைல இருந்து கால் முட்டி வரிக்கும் எண்ண தான்.  பாட்டியே குளுப்பாட்டுவாக.  "தாத்தா கால்ல விழுந்து கும்புட்டுகிட்டு புது சொக்கா வாங்கிக்க"ன்னு அப்பாரு சொல்லுவாரு.  புது சொக்காய்ல தாத்தா மஞ்சக் கலரும் சோப்பு கலரும் வெக்கும் போது ஒரு மாதிரி இருக்கும். ஆன தாத்தா காலருக்கு அடியில வெக்கரதுனால தெரியாது. அதுல ஒரு சந்தோசம்.

  "யெப்பா..வெடி போடலாம்பா"

  அப்பாரு ஒரு பெரிய தாம்பளத்துல ரத்திரி குளுருல கொஞ்சம் நமத்துப் போன வெடி எல்லாம் சூடு பண்ணி தருவாக.  ஒவ்வொண்ணா வெடிப்பேன்லா, அப்போ அத்தான் வெங்கிடேசு வெடியோட வருவான். ஏதோ அவன் தேன் வெடிக்கரதுல ரொம்ப நல்லாக் கத்து வெச்ச மாதிரி எனக்கு எல்லாஞ் சொல்லித் தருவான்.  ஒரு வாட்டி, லக்ஷ்மி அவுட்டு வெடிக்க போனாம்லா, அப்போ அவன் வரதுக்கு முன்னமெயெ வெடிச்சிருச்சு.  கை பொத்திருச்சு. எங்க்ப்பா தேன் அவன் கைய ஒடனே தோச மாவுக்குள்ள விட வெச்சு ஒதவி செஞ்சாரு. அந்தத் தீவாளி முளுக்க அவன் பின்ன வெடிக்கவே இல்ல.  நான் வெடிக்கரதையே பாத்துகிட்டு இருந்தான்.  அப்பா ஒரு வாட்டி பென்சில் வெடி வாங்கி வந்திருந்தாக.  கைசக்கரமும் கூட வாங்கி இருந்திச்சு.  அதுல ஒண்ணு கையிலயே வெடிச்சிரிச்சு.  யாருக்கும் தெரியாம கைய தண்ணீல முக்கி எடுத்துகிட்டேன் அப்பொல்லாம் எங்கூட்ல  ஐசு தண்ணி இல்ல.  நல்ல எரிஞ்சுது.  ஆனா காமிச்சுக்கல.

  எங்க க்ராமத்துல தானே கொண்டாடுவொம்...அப்பொ எனக்கு மாரியப்பன், மருதமுத்து, எசக்கினு நெரய பிரண்டுங்க இருந்தாங்க.  எங்கூட்டுக்கு பக்கத்துல "கோமா மாமி" ங்கரவுக வீடு இருந்திச்சு.  அது ரொம்ப நா மூடிகெடந்துச்சு.  அணுகுண்டு எல்லாம் அந்த வீட்டு வாசல் தேன் வெப்பொம்.  அந்த வீட்டு வாசல் தூணு மேல ஒரு காக்கா கூடு இருந்திச்சு..எசக்கி அதுக்கு பக்கத்துல ஒரு வெடிய வெக்சுப்புட்டான்.  வெடில காக்கா முட்டை கீள விளுந்து ஒடஞ்சிருச்சி.  அதுலேந்து அவன "காக்கா முட்ட"னு பட்டபேரு வெச்சி தேன் கூப்பிடுவோம்.

  வெடி எல்லாம் வெடிச்சுபுட்டு வந்தா அம்மா "எலே..கை கால எல்லாம் நல்ல களுவிட்டு வாங்கடா..பணியாரம் சுட்டு வெச்சிருக்கேன்"னு கத்தும்.  கைல எல்லாம் வெள்ளை வெள்ளையா மருந்துப் பவுடரு.  அதை களுவரதுக்குள்ள ரொம்ப கஸ்டம். கொழாயில தண்ணி தொரந்து விட்டு கல்லுல தேச்சு களுவுவோம்.  மொத்தமா எல்லாரும் சேந்து சாப்பிட ஒக்காருவம்.  தாத்தாவுக்கு மட்டும் வெள்ளித்தட்டு வெப்பாக.  எங்களுக்கெல்லாம் எலைல போடுவாக.  மீதி வெடி வெடிக்கணும்னு சொல்லிட்டு சீக்கிரம் தின்னுருவேன்.  திருப்பி வெடி வெடிக்க ஓடிருவேன்.

  ஒரு பத்து மணி போல கலியாணம் "கிட்டி விளையாட வரியால்லே"னு கேப்பான்.  எங்கப்பா கிட்ட சொல்லிட்டு ஒடிருவேன். அம்ம கிட்ட கேட்ட திட்டு/ அடிதேன் விளும். போய் வாய்க்கா பக்கம் வெளயாட ஆரம்பிப்பொம்.  சாட் பூட் த்ரி போட்டு "ஒன் டச் டூ டச்" நு கேட்டுபுட்டு வெளடுவோம்.  நான் அஞ்சு டச்செல்லாம் ஆடி பாயின்டு எடுத்திருக்கென்.

  மத்தியானம் சோறு திங்க வீட்டுக்கு வருவோம்.  அப்பொ அம்மா வைவாக.  "வெயில்ல வெளயாடி ஏம்ல கருத்து போறே"ன்னு.  சோரு திண்ணுட்டு, மீதி கெடக்கர வெடிச்ச வெடி மருந்தெல்லாம் ஒரு பேப்பரில கொட்டுவம்.  சந்துரு தேன் நல்ல செய்வான் இத.  எல்லத்தையும் வெச்சு கடைசில தீ மூட்டுவம்.  பக்குனு ஒரு ஃப்லாஷ் வரும். நல்ல இருக்கும் அது.

  இதெல்லாதையும் வுட டிரெயின் வெடி தான் பெஸ்டு. ரெண்டு வீட்டுக்கு நடுவில கயிரு கட்டி "வுஸ் வுஸ்"னு போக வெப்பம். ஆன அப்பா ரொம்ப வெடிக்க விட மாட்டக அத.

  இப்போ நெனச்சாலும் நல்லாத்தேன் இருக்கு. பலகாரம்..பணியாரம்..வெடி..

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |