நவம்பர் 11 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
கட்டுரை
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
சிறுகதை
கட்டுரை
சமையல்
கட்டுரை
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : விடைக்கு அலைந்த கேள்விகள்
  - ராமசந்திரன் உஷா
  | Printable version |

  என் இளமை பருவம் மிக மோசமாய் இருந்தது. பல்வேறு வகையான கேள்விகள் மனதில் கனக்க, பதில் சொல்ல ஆளில்லாமல் தவித்திருக்கேன். என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வீட்டுக்கு வரும் அனைவரும் திகைத்தனர். அப்பாவோ, ஒரு இளம் §மதையின் அறிவின் விசாலத்தைப் புரிந்துக் கொள்ளாமல் லொட்டைக் கேள்விக் கேட்டால், முதுகை பெயர்த்துவிடுவேன் என்று பயமுறுத்தினார். சின்னஞ்சிறு பேதை என் செய்வேன் நான்! என் சந்தேகங்களை நிவர்த்திய செய்ய ஆளில்லாமல் இளம் மேதையான என் திறனை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார்கள். பிறகு என் சந்தேகங்களுக்கு நானே விடை தேடியும் அலைந்துள்ளேன்.

  சில சந்தேகங்களை ஞாபகப்படுத்திக் கொண்டு இப்போது சொல்கிறேன். சென்னை தொலைக்காட்சி ஆரம்பித்த பொழுது சனிக்கிழமையானால் தமிழ்ப் படமும், ஞாயிறு அன்று ஹிந்திப் படமும் போடுவார்கள். ஞாயிறு காலையில் அனைத்திந்தியமொழிகளில் வெளிய¡ன ஆர்ட் படங்கள் போட்டால் அதையும் பார்ப்பேன். ஒரு மலையாள படம், ஹீரோ பீடியை எடுத்து, இப்படி அப்படி பார்த்துவிட்டு, வீடெல்லாம் தேடி வத்திப் பெட்டி எடுத்து அதை பற்றவைக்க முயன்று, சில குச்சிகளை வீணாக்கிய பிறகு பீடியைப் பற்ற வைத்து அதை இழுத்து, இழுத்து வானத்தையெல்லாம் சோகமாய் பார்த்துவிட்டு பீடியைக் குடித்து முடித்து எழுந்துப் போவான். இதற்கு பிறகு ஏதோ வரப்போகிறது என்று இந்த இருபது நிமிட காட்சியை நகம் கடித்துக் கொண்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். ஆனால் அடுத்த காட்சி அதற்கு சம்மந்தமேயில்லாமல் இருந்தது. என்ன இது என்று கேட்டதற்கு, அண்ணா ஆர்ட் பிலிம் என்றால் அப்படித்தான் இருக்கும் ஒற்றை வரியில் சொல்லி முடித்து விட்டான். அதற்கு பிறகு இன்றும் சில புரியாத நவீன கவிதை மற்றும் கதைகளை இலக்கிய இதழ்களில் பார்க்கும் பொழுது அந்த பீடி குடித்த தாடி வைத்த ஆள் என் நினைவில் இன்றும் நிழலாடுவான்.

  சினிமாவில் எல்லார் வீட்டிலையும் பாத் டப் இருக்கும். முக்கியமாய் வில்லனின் காதலி மற்றும் ஹீரோவுக்கு உதவும் பெண் அதில் வழக்கமாய் கொலை செய்யப்படுவாள். இந்த பாத்டப் பற்றி பலரிடமும் விசாரித்தும் யாருக்கும் தெரியவில்லை. அத்தகைய சாதனம் இந்தியாவில் புழக்கத்திலேயே இல்லை என்றார்கள்.

  பிறகு தூங்கும்பொழுது யாராவது பெல் அடித்தால் எழுந்து -சட்டை , பைஜாமா அணிந்திருக்கும் ஹீரோ உட்பட அனைவரும் கோட்மாதிரி ஒன்றை அணிந்துக் கொண்டே வெளியே வருவார்கள். இப்படி நம் வீட்டில் இல்லையே, அப்பா வேஷ்டி - பனியன் அணிந்திருப்பார். அப்படியே போய் வாசல் கதவு திறப்பார், சில சமயம் துண்டை மேலே போட்டுக் கொள்வார். பிறகு தெரிந்தது, இது ஆங்கில படத்தின் காப்பி என்று. அங்கு குளிர் அதிகம் என்பதால் இரவு உடைக்கு மேலே ஒன்றைப் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியே வருவார்களாம். சிவாஜி, எம்ஜிஆர் முக்கியமாய் மேஜர் ஆகியோர் செய்வார்கள்.

  அதற்கு பிறகு அன்றைய சினிமா நட்சத்திரங்கள் வெய்யிலில் காலில் செருப்புக்கூடப் போடாமல் ஆடுவதைப் பார்த்து கண்ணீர் உகுத்திருக்கேன். என்ன பார்வை உந்தன் பார்வை என்று காஞ்சனா சென்னை கடற்கரையில் பன்னிரண்டு மணி வெய்யிலிலும், கண்ணன் என்னும் மன்னன் பெயரை சொல்ல சொல்ல என்று நம் முதல்வர் அதே கொளுத்தும் வெய்யிலில் பாறை மீது குதிப்பதைப் பார்த்து அன்றே பெண்கள் சமூகத்தில் எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்று மனம் கொதித்துப் போயிருக்கிறேன்.

  அதைவிட சின்னஞ்சிறு பெண்ணான என் மனதில் கூட தோன்றிய விஷயம், கற்பழிப்பு காட்சிகளில் ஹீரோயின்கள் ஏன் புடைவை முந்தானியை முதலில் இழுத்து சொறுகாமல் தரை எல்லாம் தேய தேய ஓடுகிறார்கள்?  ஸ்ரீவித்யா நடித்த படம், விஜயகுமார் ஹீரோ அதில் இப்படிதான் கடைசிக் காட்சியில் ஸ்ரீவித்யா வில்லனிடம் தப்பிக்க முயற்சிக்கும் பொழுது "முதலில் புடைவையை இழுத்து செ¡ருகுடி முண்டம்" என்றுக் கத்திவிட்டேன். இந்த பேசிக் நாலேஜ் கூட இல்லாமல் என்ன படம் பிடிக்கிறார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது.

  சரித்திரம் பல வருடங்களுக்குப் பிறகு திரும்பியது.

  "அம்மா! ஒரு டவுட்?" மகன் ஆரம்பித்ததும் லேசாய் தூக்கம் கண்ணை  சுழற்ற, " மூன்று கேள்விகள்தான் கேட்க வேண்டும்" என்ற அக்கிரீமெண்டை ஞாபகப்படுத்தினேன். இது சமீபக் காலத்தில் எனக்கும் என் மகனுக்கும் ஏற்பட்டுள்ள உடன்பாடு. இல்லை என்ற¡ல் பதில் சொல்ல சொல்ல புதிய கேள்விகள் முளைத்துக் கொண்டேயிருக்கும்.

  "ஏம்மா! எல்லா சினிமாவிலும் பேய்ங்க பழி வாங்கிக் கொல்லுதே, அப்படி பேயால செத்தவங்களும் பேயா மாறி, மத்தவங்களுக்கு ¦ஹல்ப் செய்யக்கூடாது?" என்றவனிடம், " பேயீ, கீயீ எல்லாம் ஒண்ணுமில்ல! நீ கண்ணை மூடிக்கிட்டு தூங்கு" என்றேன்.

  தீடீரென்று, " ஏம்மா! சரோ மாமியார் இவ்வளவு பேட் லேடியா இருக்காங்க? " என்றவனிடம் " அது சும்மா, சீரியல்டா கண்ணா!" என்றேன்.

  "அப்ப, நிஜ மாமியார் எல்லாம் குட் லேடிசா?" என்றான். அந்த பக்கம் இருந்த கணவர் தொண்டையைக் கனைத்தார்.

  "உம்!" என்று உம் கொட்டினேன். " உனக்கு மாமியார் இருக்காங்களாமா?" அடுத்தக் கேள்வி ஆரம்பித்தது.

  "பாட்டிதாண்டா என் மாமியார்" என்றதும் " அவங்க நல்லவங்களா இல்ல கெட்டவங்களா?" கேள்வி தொடர்ந்தது.

  ஒரு நிமிட மெளனத்துக்குப் பிறகு " தெரியலையே கண்ணா" என்றேன் நாயகன் கமலைப் போல!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |