நவம்பர் 16 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : பாம்பு பிடிப்பவர்கள் - வலையர்கள்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | | Printable version | URL |

பாம்பு பிடிப்பவர்கள் என்று சொல்லக் கூடிய வலையர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்களின் தொழிலே பாம்பு பிடிப்பது. அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் குடும்பம் நடத்துவருகின்றனர். அவர்களின் ஒருவரான ராக்கப்பன் என்பவர் தான் பிடித்து வைத்திருந்த பாம்புகளைக் கொண்டு ரோட்டின் ஓரத்தில் வித்தைக்காட்டிக் கொண்டு இருந்தார்.

snake charmerவகை வகையான பாம்புகளைக் சிறு கூடைகளில் வைத்துக் கொண்டு இவர்காட்டும் வித்தைகளை பார்க்கும் பொழுது வியப்பாகத்தான் இருக்கிறது. சாரைப் பாம்பு, மண்ணுலிப் பாம்பு முதல் பச்சைப்பாம்பு, நல்ல பாம்பு, வி~ம் மிகுந்த கட்டுவிரியன் பாம்பு என 20க்கும் மேல் பாம்புகளை வைத்து லாவகமாக பிடித்து  அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து வித்தை காட்டிக்கொண்டிருந்தார்.

இது பற்றி ராக்கப்பனிடம் கேட்டபொழுது.........

தமிழகத்தின் அனைத்துப்பகுதியிலும் வாழும் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் தான் இந்த பாம்பு பிடித்தல், அதனை வைத்து வித்தைகாட்டுதல் போன்ற தொழில்களைச் செய்த வருகிறோம். குறிப்பாக நறிக்குறவர்களைப் போல் எங்களையும் எடுத்துக் கொள்ளலாம். எங்களைப் போன்றவர்களுக்கு நிரந்தரம் என்று சொல்லிக் கொள்வதற்கு என்று எதுவுமே இல்லை.பரந்த தரைப்பகுதியில் மரத்தின் நிழலில் தான் அன்றாட இரவு வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. பாம்பு பிடித்தல் என்பது சர்வ சாதாரண வி~யம் அல்ல. இது எனது குலத் தொழில். முன்பெல்லாம் நகரப் பகுதிகளில் பாம்பாட்டிகளுக்கு என்று தனி மதிப்பு இருந்தது. தற்பொழுது நாகரிக வளர்ச்சியில் எங்களுக்குவேலையே இல்லாமல் போய் விட்டது. அவ்வளவு கட்டிடங்கள் பெருகிப்போய்விட்டன. பாம்பு பிடித்தல் என்பதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. பாம்புகளை பிடிக்கும் பொழுது முதலில் பய உணர்வை விட்டு விட வேண்டும். அதன் போக்குக்கு போய் அதனை மடக்கி பிடித்துவிட வேண்டும். இதுவரை 1000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து இருக்கிறேன். சில பாம்புகளிடம் கொத்தும் வாங்கி சாகும் எனது உடம்பு முழுவதும் வி~மாகிவிட்டது. தற்பொழுது நானும் ஒரு மனிதப் பாம்புஎன்று சொல்லிச் சிரிக்கிறார். பாம்புகளிடம் கொத்து வாங்கி சாகும் நிலைக்கும் சென்று இருக்கிறேன். அப்பொழுது எல்லாம் எனக்கு கைகொடுத்தது பச்சை இழைகள் தான்.

பாம்புகளில் மோசமான பாம்பு என்று பார்த்தால் கட்டுவிரியன் பாம்புகளைச் சொல்லலாம். பிணம் மாதிரி கிடக்கும் மனிதர்கள் மிதித்துவிட்டால் ஒருவழி பண்ணிவிடும். அதே போல் இதன் விஷமும் வேகமாக உடம்பில் பரவிவிடும். அதே போல் பாம்புகளில் நல்ல பாம்பு அற்புதமானது. நாம் ஒன்றும் செய்யாவிட்டால் அதுவும் ஒன்றும் செய்யாது. ஆனால் கோபம் வந்தால் ஒரு வழி பண்ணி விடும். என்னிடம் 5 நல்ல பாம்பு இருக்கிறது எனச் சொல்லி ஒவ்வொரு பாம்பின் பெயரைச் ராக்கப்பன்சொன்ன உடன்; தலையைத்தூக்கி அப்பாம்புகள் பார்க்கிறது.

பாம்பு தொழில் மூலம் வருமானம் கிடைக்கிறதா? அதன் மூலம் வாழ்க்கை நடத்த முடிகிறதா என்ற பொழுது.....

பாம்புத் தொழிலில் வருமானம் இல்லை தான். எனக்கு இத்தொழில் பிடித்து இருக்கிறது. நாங்கள் பிடித்துக்கொடுக்கும் பாம்புகளை வைத்தத் தான்அரசு மருத்துவமனைகளில் மருந்து தயாரிக்கப் படுகிறது.ஒரு பாம்பு பிடித்துக் கொடுத்தால் 25 ரூபாய் வரை தருவார்கள். இவை தவிர கிராம, நகரப் பகுதிகளில் பாம்புபிடிக்க கூப்பிட்டால் கொஞ்சம் பணம் கிடைக்கும். இது தவிர ரோட்டின் ஓரங்களில் பாம்புகளை வைத்து வித்தை காட்டும் பொழுது சிறிது வருமானம் வருகிறது. இதனைக் கொண்டு வாழ்க்கை எப்பிரச்சினையம் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது.

பாம்புக்கு காது இல்லை.அது எப்படி குழல் ஊதியவுடன் ஆடுகிறது என்ற பொழுது

பாம்புக்கு காது இல்லை தான் ஆனால் நமது செயல்களை வாய் அசைவுகளை நன்கு கவனிக்கும். நாங்கள் குழல் ஊதும் பொழுது தலை, கைகளை ஆட்டுவோம் அதனைப் பார்த்து பாம்பும் அடுது. இது எல்லாம் தொழில் ரகசியம் யாரிடமும் சொல்லிடாதீங்க என்று சொல்லி சிரிக்கிறார்.

உங்கள் தொழிலில் மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதாவது உண்டா ? என்ற பொழுது...

இரண்டு சம்பவம் இருக்கிறது. ஒன்று மனிதனின் கை கால் எதையும் பார்க்காமல் கண்ணை மட்டுமே பார்த்துக் கொத்தும் பச்சைப்பாம்பிடம் கண்ணில் கொத்து வாங்கி ஒரு கண் பார்வை தெரியாமல் போனது. மற்றொன்று ரோட்டில் யாரையும் தொந்தரவு செய்யாமல் எனது செல்லக் குழந்தைகளான பாம்புகளை வைத்து வித்தை காட்டிக்கொண்டு இருந்தேன். நான் ஏதோ பாம்புகளை சித்திரவதை செய்கிறேன் என்று சொல்லி என்னிடம் இருந்த 25 பாம்புகளை பிடிங்கிக் கொண்டு என்னை கைது செய்து 5 நாள் கழி திங்க வைத்தவிட்டனர். ஜெயிலில் இருந்து வந்தவுடன் 5 வகை பாம்புகளை மலைகளில் பிடித்து பல்லை பிடிங்கி என்னை ஜெயிலில் போட்ட அதிகாரியின் வீட்டை கண்டு பிடித்து இரவு விட்டுவிட்டு பக்கத்து மரத்தடியில் படுத்துக்கொண்டேன். அதிகாலை 6 மணிக்கு அந்தத் வீட்டில் இருந்து வந்த குய்யோ, முறையோ சத்தத்தில் தெருவே கலகலத்தது. பின்பு எதுவும் தெரியாதது போல் போய் பாம்பினை பிடித்து வந்துவிட்டேன். நான் பல்லைப் புடுங்காமல் பாம்பை போட்டு இருப்பேன். பாவம் அவர் வீட்டு ஆட்கள் என்ன செய்வார்கள் மனிதர்கள் எங்களை மதிக்கவில்லை தான். நான் மனிதர்களை மதிக்கிறேன் என்கிறார்;. நம் நாட்டில் அந்த சட்டங்களை எல்லாம் ஒழிக்க வேண்டும். பாம்பினை நான் சித்திரவதை செய்தால் பாம்பு என்னிடம் இருக்குமா ?  என்கிறார்.

oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |