நவம்பர் 16 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரையோவியம் : விஷால் அடுத்த வசூல் மன்னனா?
- கார்த்திகேயன் முத்துராஜன் [karthikmuthurajan@gmail.com]
Save as PDF | | Printable version | URL |

முதன் முதலாக, விஷால் செல்லமே படத்தில் சொந்த தயாரிப்பில் நாயகனாக நடித்த போது.. தமிழ் சினிமாவுக்கு என்ன கொடுமையான நேரமிது.. இப்படி எல்லாம் ஒரு நாயகன் என்று எல்லோரும் விமர்சித்த போது நானும் அவர்கள் பக்கம் இருந்து ஆமோதித்தேன். ஆனால் படம் பார்த்த போது.. பரவாயில்லை ஓரளவுக்கு நடிக்கவாவது வருகிறதே என்று சமாதானம் செய்துகொண்டேன்.

விஷால் சினிமாவில் நடிகனானதே ஒரு பெரிய கதை தான். இவர் நடிகர் அர்ஜுனிடம் துணை இயக்குனராக சேர்ந்தார். ஒரு நாள் எதற்கோ கேமிராவில் விஷாலை கோணம் பார்த்த அர்ஜுன் விஷாலுக்கு நல்ல கேமரா அழகிருப்பதாக சொல்ல, அடுத்த சொந்தப் படத்தில் கதாநாயகன் வேடம்.

vishal,meeraஅடுத்த படமே சண்டக்கோழி.. தேர்ந்த இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில்.. நல்ல ஆக்க்ஷன்.. நல்ல திரைக்கதையால் படம் நூறு நாட்களை தாண்டி ஓட.. அடுத்த படமான திமிருவை எல்லோரும் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். தருண் கோபியின் இயக்கத்தில் அதுவும் விநியோகஸ்தர்கள் வயிற்றில் பாலை வார்த்து.. டஜனுக்கும் மேற்பட்ட திரையரங்கில் நூறு நாட்களை தாண்டியது.. இப்போது விஷாலை ஏற்கனவே இருக்கும் 'வி' (விஜய், விக்ரம்) நடிகர்களின் பட்டியலில் இணைத்துவிட்டனர்.

இப்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளிவரப்போகும் சிவப்பதிகாரம் நிறைய காசுகளை கொட்டி எல்லா ஏரியாக்களிலும் வாங்கப்பட்டுள்ளது. படத்தின் டிரெய்லரும் எல்லோரையும் கவர்ந்துள்ளது.. இந்த படம் ஜெயுத்து விஷாலை அடுத்த உயரதுக்கு கொண்டு செல்லுமா.. இது தான் எல்லோருடைய கேள்வி சண்டக்கோழியில் இவரின் ஆக்க்ஷன் சாகஷங்கள் பார்த்தவரை கொஞ்சம் ஈர்க்கவே செய்தது.. அதிலும் இவரின் வசன உச்சரிப்பும்.. எல்லோரையும் குமுறவைத்த நிறமும் இப்போது அட..நம்ம பக்கத்துவீட்டு பையன் என்று தோழமையுடன் அணைக்க வைத்திருக்கிறது.. இதுதான் இவருக்கு மிகப்பெரும் பிலஸ் பாயிண்ட்.. இவருடைய படங்களும் விஜயின் படங்களை போன்ற ஒரு ஃபார்முலாவில் இருக்க.. விஜயும் சில நாள் காணாமல் போனதும் இவருக்கு துணையாய் இருக்கிறது.

இவர் படம் மட்டும் அல்ல.. இவருடைய ஃபார்முலாவும் விஜயை போன்று தான் இருக்கின்றன.. படங்களுக்குvishal, இவர் தரும் விளம்பரம் ரொம்ப அதிகம்..  இதுவரை இவர் நடித்த படமெல்லம் சொந்த தயாரிப்பு.. ஆனால் மத்த தயாரிப்பாளர்கள் இது போல செலவு செய்வார்களா என்றும் தெரியாது.. ஆனால் இவர் தயாரிப்பளர்களின் நண்பனாகவும் இருக்கிறார். இவருடைய சிவப்பதிகாரம் தீபாவளிக்கே தயாராக இருந்தும் கூட்டத்தோடு கோவிந்தா வேண்டாம் என்று நவம்பரில் வெளியிட முடிவு செய்தார். ஆனால் விஜயோ தயாரிப்பாளரை பற்றி கவலைப்படாமல், அந்நியனையே ஷங்கர் இரண்டு மாதங்கள் தள்ளிப்போட, தனது பலத்தை காட்ட, சந்திரமுகிக்கு எதிராக சச்சினை களமிறக்கி கலைபுலி தாணுவுக்கு தலை துண்டை போட வைத்தவர்.

சினிமா உலகம் சென்டிமெண்ட் அதிகம் பார்ப்பது. இப்படித்தான் தனுஷுக்கும் மூன்று படங்கள் பயங்கரமாய் ஓடி நாலாவது படத்தில் விழுந்ததில் இன்னும் எழாமல் இருக்கிறார்.

அப்படிப்பார்த்தால் விஷாலுக்கு இது நாலாவது படம். இந்த படத்தை வெற்றிகரமாக தாண்டி விட்டால் இவருக்கு தயாரிப்பளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கல் மத்தியில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் தனுஷ் மாதிரி இல்லாமல் இவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரும் அடியும் மிகவும் பொறுமையாகவும் விவேகமாகவும் எடுத்து வைப்பதால் தனுஷின் நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் இது வரை இவர் படங்கள் மிகுதியான விளம்பரங்களால் தான் ஓடின என்னும் ஒரு எண்ணத்தை வரப்போகும் சிவப்பதிகாரம் மாற்றுமா.. விஷாலை அடுத்த வசூல் மன்னனாக்குமா.. இன்னும் சில நாட்களில் வெளியாகப்போகும் அந்த படம் உங்களுக்கு சொல்லும்.. இருந்தாலும் ஒரு வளரும் கலைஞருக்கு நமது வாழ்த்தையும் சொல்லிவிடுவோம்.. விஷால் இன்னும் நல்ல படங்களை கொடுத்து திரை உலகில் சிறக்க வாழ்த்துகிறோம்.

| |
oooOooo
                         
 
கார்த்திகேயன் முத்துராஜன் அவர்களின் இதர படைப்புகள்.   திரையோவியம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |