நவம்பர் 16 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : பெய்யோ பெய்யென பெய்த மழை - ஒரு வர்ணனை
- லெனின் [lenin_ramasamy@yahoo.com]
Save as PDF | | Printable version | URL |


மேகக் குடையில் யார் ஓட்டை போட்டது?
இந்த பூமித் தலையில் நீர் அப்படியே வழிகிறதே!

பூமித் தாயிடமிருந்து தன்னை ஆவியாக்கிப் பிரித்ததால்
மேகக் குழந்தைகள் விடும் கண்ணீர்!

மேகக் குழந்தைகள் தன் தாயான பூமியின்
மடியில் ஒன்னுக்கு அடிக்கிறார்கள்!

மேகக் கணவன் ஆசையாய் அணைக்கிறான்
தன் பூமி மனைவியை, தண்ணீர் கைகளைக் கொண்டு!

யாருக்கும் தெரியாமல் குடித்து விட்டு - இப்ப
ஊருக்கே தெரியும்படி பாடுகிறான் மேகக் குடிகாரன்!

ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல்
பூமியின் தலையிலேயே எச்சில் துப்பும் மேகங்கள்!

என்ன மேகமே! நிலவை 'சைட்' அடிக்கிறாயா?
ஜொள்ளில் பூமியை நனைக்கிறாயே!

மேகமே! ஜாதிச் சண்டையா  அங்கேயும்?
இவ்வளவு வெண்ரத்தம் எங்கள் மேல் கொட்டுகிறதே!

பூமித் தாயை மேகக் குழந்தையுடன்
இணைக்கும் நீர்த்த தொப்புள் கொடிதான் மழை!

பூமி இலையை ஏன் கழுவுகிறாய் மேகமே!
பசி நேரம் வந்து விட்டதா?

என்ன மேகமே? உனக்கும் காதல் தோல்வியா?
பிறகு ஏன் தாடி வளர்க்கிறாய்?

பூமியில் மனிதர்கள் வாடை தாங்கமுடியாமல்
குளிப்பாட்டி விடுகிறாயா மேகமே?

பூமி என்ன கும்ப கர்ண தூக்கமா தூங்குகிறது?
அதன் முகத்தில் இவ்வளவு தண்ணீரை தெளிக்கிறார்களே!

மேக நாட்டில் தீபாவளி போலும்!
பூமியை பார்த்து புஷ்வானம் கொளுத்துகிறார்கள்!

கற்பு கறுப்பாகிப் போனதா பூமியே?
காற்றுக் கணவனை விட்டுவிட்டு
களவாணி மழையுடன் கானம் பாடுகிறாயே!

பறந்து பறந்து உழைப்பதனால் தான்
இப்படி வேர்த்துக் கொட்டுகிறதா மேகமே?

திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து விட்டாயா மேகமே?
அம்மாவைக் காணாமல் அழுது கொண்டிருக்கிறாயே?

மேகமே! எங்களைப் போல் உங்களுக்குள் சண்டை போடாதீர்கள்!
செத்து செத்து பூமியின் மேல் விழுகிறீர்களே!

என்ன மேகமே? உங்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு கிடையாதா?
தண்ணீர் குழந்தைகளை 'மளமள'வென்று பெத்துக் கொண்டேயிருக்கிறீர்களே!

மழை என்ன பெண் குழந்தையா ?
பிறந்தவுடன் பூமித் தொட்டியில் போட்டு விடுகிறார்களே!

மேகத் தேனடையை யார் பொத்து விட்டார்கள்?
மழைத்தேன் கொட்டொ கொட்டெனக் கொட்டுகிறதே!

பூமித் தங்கையின் திருமணத்திற்கு
மேக அண்ணன் பன்னீர் தெளிக்கிறான்!

சிறுக சிறுக சேர்த்துவிட்டு
மொத்தமாய் செலவு செய்கிறான் ஊதாரி மேகம்!

ஏ! மேகமே! எந்த நடுவர் மன்றம் தீர்ப்பு கூறியது?
இவ்வளவு நீர் இங்கே என்று!

அப்படி எந்த 'ஜோக்'கிற்கு, இப்படி 'இடி' சிரிப்புடன்
ஆனந்த கண்ணீர் விடுகிறாய் மேகமே?

மழை போல் கவிதை பொழிய வேண்டும் என்ற
ஆசைகளுடன்

| |
oooOooo
                         
 
லெனின் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |