நவம்பர் 18 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
முத்தொள்ளாயிரம்
இசையோவியம்
திரையோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
துணுக்கு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : வர்ணாஸ்ரமம்
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  வர்ணாஸ்ரமத்துக்கு விளக்கம் கொடுப்பதென்பது கொஞ்சம் வில்லங்கமான விஷயம். தாழ்த்தப்பட்டவர்களின் நிஜமான எதிரியான வறுமையையும் அறியாமையையும் ஒளித்து வைத்துவிட்டு எல்லா அரசியல் தலைவர்களாலும் அடையாளங்காட்டப்படுவது. குறிப்பிட்ட ஜாதியினரை உரசிப்பார்க்கவே உபயோகப்பட்டு வந்த வர்ணாஸ்ரம தத்துவத்தை வாழ்க்கைக்கு அவசியம் தேவையான விஷயமென்று சொல்கிற துணிச்சல் காந்திஜி ஒருவருக்குத்தான் இருந்தது. 

  'வர்ணம் என்பதற்கும் ஜாதிப்பிரிவுகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த கேலிக்கூத்தான போலித்தனமே இந்து மதத்தையும் இந்தியாவையும் தாழ்த்திவிட்டது. வர்ணதர்மத்தை நாம் பின்பற்ற தவறியதே நமது பொருளாதார, ஆன்மீக அழிவுகளுக்கு பெரும்பாலும் காரணமாயிற்று. வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், வறுமைப்பீடிப்பிற்கும் அதுவும் ஒரு காரணம். தீண்டாமைக்கும் ஆத்திக மனப்பான்மை அதிகரித்து வருவதற்கும் அதுதான் காரணம்' (யங் இந்தியா, 24.11.1927)

  வர்ணம் என்பது சமூகத்தில் இருக்கும் ஒரு விதிமுறை போன்றதுதான். விதிமுறை என்கிற ஒன்று இருந்தால்தான் எல்லாமே ஓழுங்காக நடக்கும் என்பது தெரிந்த விஷயம்தானே! அப்படியொரு விதிமுறைகள் இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான சமூகத் தீமைகள் குறையும். பொருளாதார போட்டிகள் குறையும். விதிமுறைகளினால் ஒரு வகுப்பின் உரிமைகளையோ அல்லது சலுகைகளையோ
  முன்வைக்காமல் அவர்களின் கடமைகளை வலியுறத்த முடியும் என்கிறார் காந்திஜி. அதாவது சுதேசி சோஷலிஸம்!

  வர்ணஸ்ரம விதிமுறைதான் சமய, சமூக, பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்கிறது என்கிறார். குழப்பமாக இருக்கிறதா?  கொஞ்சம் விரிவாகவே அவர் சொல்லியிருப்பதை பார்க்கலாம். (ஹரிஜன், 28.9.1934)

  '...இந்து மதம் நான்கு வர்ணங்களையும் நான்கு ஆசிரமங்களையும் விதியமைப்பாக கொண்டது. வர்ணாஸ்ரம தர்மத்தை பெருமளவில் குறிப்பிடாத ஸ்மிருதி நூல்கள் எதுவுமில்லை. வர்ணஸ்ரம விதிமுறைகள் மிகவும் தொன்மை வாய்ந்த வேதங்களிலிருந்து வந்தவை. எனவே, நான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்ளும் எவரும் இதை புறக்கணிக்க முடியாது.

  ...ஆஸ்ரம விதியை பொறுத்தவரை அதனை யாரும் சடங்காக கூட ஏற்கப்படாமல் என்றோ மறைந்துவிட்டது. இந்து தர்மம் நான்குவித ஆஸ்ரமங்கள் (நிலைகள்) பற்றி சொல்கிறது. பிரம்மச்சாரி, குடும்பஸ்தன், வனப்பிரஸ்தன், சன்னியாசி என்பவைதான் அது.

  ...ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்க்கைப் பயனை பெறுவதற்கு இந்த நான்கு கட்டங்களையும் கடந்தாகவேண்டும். ஆனால், முதல் நிலையும் மூன்றாம் நிலையும் இன்று வ்ழக்கத்தில் இல்லை. நான்காம் நிலையான சன்னியாசத்தையோ பெயரளவுக்கு சிலர் கடைப்பிடிப்பதாக சொல்லலாம். இரண்டாம் நிலை பெரும்பாலும் எல்லோராலும் பின்பற்றப்படுவதாக செல்லிக்கொண்டாலும் மனப்பூர்வமாக அல்ல.

  ஆனால், வர்ண வாழ்க்கை முறை பிறப்புடன் தொடர்பு கொண்டது. அதை பின் தொடர்வது என்பது நமது முன்னோர்களின் பாராம்பரிய முறைகளை அனைவருமே கடமை உணர்வுடன் பின்பற்றுவதாகும். பிராமணணன் ஆன்மீக உண்மையை கற்று மற்றவர்களுக்கு போதிக்கவேண்டும். வர்ண விதிமுறைப்படி அதைத் தவிர வேறு எதுவும் பிராமணன் செய்ய முடியாது என்பதால் அப்பணியை அவன் செய்ய வேண்டியதாகிறது. அதான் அவனுடைய பிழைப்பும் நடக்கிறது. இதே மனப்பான்மையுடன் க்ஷத்திரியன் மக்கள் அளிப்பதை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு அளிக்கிறான். வைஸ்யன் சமுதாய நலனை கருத்தில் கொண்டு செல்வம் திரட்டும் வேலையை செய்கிறான். கிடைக்கும் செல்வத்தில் தனது பராமரிப்புக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு எஞ்சியதை சமுதாயத்திற்காக அளிக்கிறான். ருத்ரன் சமூக சேவை மனப்பான்மையுடன் உடலுழைப்பை தருகிறான். 

  ஒருவரின் வர்ணம், பிறப்பினால் நிர்ணயிக்கப்படினும் அதன் நெறிமுறைகளையும் கடமைகளையும் பின்பற்றி நடப்பதன் மூலம்தான் பாதுகாக்கமுடியும். பிரமாண பெற்றோர்களுக்கு குழந்தையாக பிறந்தவன் பிராமணனாகவோ க்ஷத்திரிய பெற்றோர்களுக்கு பிறந்தவன் க்ஷத்திரியனாவோ நடந்து கொள்ளவேண்டும் என்கிற அவசியமில்லை. அதே சமயம் ஒருவன் பிராமணனாகவோ அல்லது க்ஷத்திரியனாகவோ பிறக்காவிட்டாலும் அதற்காகன லட்சணங்களுடன் நடந்து கொண்டால் அவன் பிராமணனாகவோ க்ஷத்திரியனாகவோ கருதப்படுவான்.

  ...வர்ணமுறை என்பது மனிதனால் தோற்றுவிக்கப்பட்டதன்று. மனித குடும்பத்தை நடத்திச் செல்லும் வாழ்க்கை நெறிமுறையாகும். இது வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அடிப்படையாக கொண்டது. இது கடமையை மட்டும்தான் சொல்கிறதே தவிர உரிமையோ, சலுகையோ எதுவுமில்லை. ஆனால், இன்று வர்ணங்களுக்கிடையே உயர்வு, தாழ்வு தரம் பிரித்து கொச்சைப்படுத்தி கேலிக்குரியதாக்கி விட்டோம்.'

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |