நவம்பர் 23 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : ரவுடிகள் கைது
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | | Printable version | URL |

ரவுடிகள் எங்கு உருவாகிறார்கள், அவர்களை வளர்ப்பது யார் என்றால் சக மனிதர்கள் தான் காரணம்.

தமிழகம் முழுவதும் ரவுடிகள் கைது. போலீஸ் வேட்டை என்ற செய்தி சமீப காலமாக பத்திரிக்கைகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள் எங்கிருந்து வருகிறார்கள். அவர்களை வளர்ப்பது யார் என்ற கேள்விகளும் எழுகிறது.

பொது மக்களுக்கு அச்சம் தரும் வகையில் செயல்படும் தனி நபர், நபர்கள் நிறைந்த குழுக்களை ரவுடிகள் என்று சொல்லலாம். இந்த ரவுடிகள் சமூகத்தில் இருந்து தான் உருவாகிறார்கள். 10 வயது வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வளரும் ஒரு குழந்தை பின் ஏற்படும் சுற்றுச்சூழல், குடும்ப சூழல், பழக்க வழக்கங்கள் போன்ற காரணங்களினால் வன்முறை செயல்களில் ஈடுபட்டு, பின் அதுவே பழக்கமாகி ரவுடி, பொறுக்கியாக மாறும் நிலை இங்கு இருக்கிறது. பொதுவாக ரவுடிகள் என்பவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனி மனிதனை, மனிதர்களை விட்டு விலகியே இருந்தார்கள்.. முன்பு எல்லாம் ரவுடிகள் என்பவர்கள் இந்திய சட்டத்திற்கு புறம்பான வேலைகளை மட்டுமே செய்து கொண்டு இருப்பார்கள். அதாவது சாராயம் காய்ச்சுவது, அதனை கடத்துவது, கஞ்சா கடத்துவது, கள்ள நோட்டுக்களை கடத்துவது என்று தான் இருந்தார்கள். அப்பொழுது எல்லாம் ரவுடிகள் பொது மக்களுக்கு எந்த விதத்திலும் நேரடியாக தீங்கு ஏற்படுத்த மாட்டார்கள். அதனால் கடந்த 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் ரவுடிகள் காவல் துறையினருக்கு மட்டுமே சவாலாக இருந்தார்கள்.

இப்படி பொது மக்களுக்கு இடையூறு செய்யாமல் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் சொல்கிற சட்டவிரோத வேலைகளை மட்டுமே செய்து வந்த ரவுடிகள் 1980ம் ஆண்டுகளில் வேறு மாதிரியான வேலைகளில் இறங்கினார்கள். அதாவது பெரும் செல்வாக்கு படைத்த மனிதர்களின் வீடுகளில் கொள்ளை அடிப்பது. அவர்களது விளை நிலங்களில் இருக்கும் பொருட்களை யாருக்கும் தெரியாமல் கொள்ளை அடிப்பது என்று இறங்கினார்கள். இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் நக்சலைட்டுக்கள் உருவாகி கொள்ளை அடிப்பதில் ஈடுபட்டனர். இவர்களின் நோக்கமே இருப்பவனிடம் இருந்து கொள்ளை அடித்து இல்லாதவனுக்கு கொடுப்பது என்பது தான். இவர்களை ஒரு கட்டத்தில் காவல் துறையினர் கட்டுப்படுத்தினர். இப்படி இருந்தவர்களில் சிலர் பல இடங்களில் தனக்கென ஒரு செல்வாக்கை வளர்த்துக் கொண்டு இருந்தனர். பின் இந்த ரவுடிகள் ஜாதி வாரியாக வளர்ந்து ஜாதி கலவரங்களை ஏற்படுத்துவது, பஸ்சைக் கொழுத்துவது, பொதுமக்கள் விடுகளில் கொள்ளை அடிப்பது, பணத்திற்காக கொலை செய்வது என்று வளர்ந்து இருக்கிறார்கள். ரவுடிகளை காவல் துறையைச் சேர்ந்த சிலரே ஊக்குவித்தும், சில நேரங்களில் காவல் துறையைச் சேர்ந்த நபர்களே கொள்ளை, கொலையிலும் ஈடுபட்டு வருவதை பார்த்து வருகிறோம்.   

ரவுடிகளை அரசியல்வாதிகள், பணம் படைத்தோர் தங்களது சுய நலத்திற்கு பயன் படுத்தத் துவங்கியதில் இருந்து ரவுடியிஸம் பல வடிவங்களில் வந்து பொதுமக்களை மிரள வைத்துக் கொண்டு இருக்கிறது. பொதுமக்களிடம் இருந்து விலகி இருந்த ரவுடிகளை தங்களது சுய நல அரசியலுக்காக அரசியல்வாதிகள் பயன்படுத்தத் துவங்கினார்கள். தங்களுக்கு என்று பணம் கொடுத்து கூலிப் படைகளையும் அமர்த்திக்கொண்டனர். அதன் விளைவை நாம் சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பார்த்தோம். இன்று பொதுமக்களுக்கு எதிராக எதையும் சாதிக்க வேண்டுமானால் ரவுடிகள் இருந்தாலே போதும். என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த நிலை மாறவில்லை என்றால் வருங்கால தலைமுறையினருக்குத் தான் கேடு என்கிறார் ஒரு கல்லூரி முதல்வர்.

மதத்தின் பெயரில் கலவரம் செய்யும் ரவுடிகள், பிட்பாக்கெட் ரவுடிகள், கொள்ளையடிக்கும் ரவுடிகள், கொலை செய்யும் ரவுடிகள், பணத்திற்காக மட்டுமே கொலை செய்யும் கூலிப்படைகள், போதைப் பொருள் கடத்தும் ரவுடிகள், மணல் கொள்ளையர்கள் என்று ரவுடிகள் இன்று பல வகைககளில் இருக்கிறார்கள். இவர்களை காவல் துறையினர் களை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. உதாரணமாக கடந்த ஆட்சியிலும், இன்றைய ஆட்சியிலும் ரவுடிகள் என்கவுண்டர்கள் செய்யப் பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். தவறு செய்து விட்டு எந்த மனிதரும் வாழ முடியாது என்ற சட்டத்தின் வழி முறையை காவல் துறையினர் செயல்படுத்தி வருவதால் தான் மக்கள் அமைதியான, வளாச்சியான வாழ்க்கையை வாழ முடிகிறது. அதே சமயத்தில் காவல் துறையைச் சேர்ந்த சிலரே ரவுடிகள் போல வழிப்பறியில் ஈடுபடுவது, கொள்ளையடிப்பது, கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை செய்தித் தாள்களில் பார்க்கும் பொழுது பொதுமக்களின் மதிப்பை காவல் துறை இழக்கிறது என்பது உண்மை தான். இந்த நிலையை மாற்ற வேண்டும். அதே சமயத்தில் ரவுடியாக இருந்து பின் திருந்தி வாழ இன்று பல ரவுடிகள் முன் வருகிறார்கள். அதனையும் காவல் துறை பரிசீலித்து வருகிறது. என்கிறார் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி.

Aaru Suryaரவுடிகள் எங்கு உருவாகிறார்கள், அவர்களை வளர்ப்பது யார் என்றால் சக மனிதர்கள் தான் காரணம். இந்த வேலையை தமிழ் சினிமா படு சமார்த்தியமாக செய்து கொண்டு இருக்கிறது. ஒரு மொழியின் சினிமா அந்த மொழியின் சிறப்பை பிரதிபலிக்க வேண்டும். ஆனால் தமிழ் சினிமா கதாநாயகனின் கைகளில் வீச்சருவாள், சைக்கிள் செயின் உட்பட கொடிய ஆயுதங்களை கொடுத்து, அவர்களை வலம் வர வைக்கிறது. திரைப்படங்களை பார்த்துத் தான் ரவுடியாக மாறினேன் என பல ரவுடிகள் நீதி மன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். இன்று ரவுடியாக நடித்தால் தான் திரைத்துறை தன்னை அங்கீகரிக்கும் என எல்லா நடிகர்களும் நினைத்து நடித்து வருகிறார்கள். ஆனால் அவர்களை பார்த்து ரவுடியாக பலர் மாறி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டுள்ளனர். வட இந்தியாவில் மத்தின் பெயரில் மதத்தைக் காக்க தீவிர பக்தர்கள் ரவுடிகளாக உருவாக்கப்படுகிறார்கள். அந்த நிலை தமிழகத்தில் இல்லை என்றாலும், இன்று தமிழ்நாட்டை ரவுடிகள் தங்களுக்குள்ளே பிரித்துக் கொண்டார்கள். இது எனது ஏரியா, இது உனது ஏரியா என பிரித்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசு10லித்துக் கொண்டு இருக்கிறார்கள். சாதாரண ரே~ன் கடையில் இருந்து தெருவில் வரும் தண்ணீரைப் பிடிப்பது வரை ரவுடிகள் ராஜியம் தான் நடக்கிறது. இவர்களுக்கிடையே மோதல் வரும் பொழுது மாறி மாறி வெட்டிக் கொலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக நெல்லை மாவட்ட வரலாற்றை புரட்டிப் பார்த்தால் பதிலுக்கு பதில் கொலைகள் செய்யும் ரவுடிக் கும்பல்கள் அதிகமாக இருப்பதை நாம் பார்க்கலாம்.

ரவுடிகளை வளர்த்த, வளரவிட்ட பெருமை திராவிடக் கட்சிகளையே சாரும். திராவிடக் கட்சிகளுக்கு முன்பு Arul Vikramகாங்கரஸ் தமிழகத்தை ஆட்சி செய்த காலக்கட்டத்தில் திராவிடக் கட்சியினர் காங்கிரசாருக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய பொழுது கல்லை விட்டு எறிவது,கலகம் செய்வது என்று இருந்தனர். தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து வந்த பொழுது, அவரை கொலை செய்வதற்கு என்று ஒரு தனி கூலிப்படையே அலைந்ததாக எம்..ஜி.ஆரே குற்றம் சொல்லி இருக்கிறார். அதே சமயத்தில் 1990களில் இருந்து அரசியல்வாதிகள் ரவுடியிஸத்தை தங்கள் கட்சியின் ஒரு பிரிவாகவே வளர்த்து வந்தார்கள். 1991 முதல்1996 வரையிலான காலக்கட்டத்தில் ரவுடிகளை ஆட்சியாளர்கள் உரம் போட்டு வளர்த்தார்கள். ஊழலை வெளியே சொன்ன அதிகாரிகள் ரவுடிகளால் தாக்கப்பட்டனர். அதனை எதிர்த்து கேள்வி கேட்டவர்களுக்கும் ரவுடிகள் வந்து பதில் சொன்னார்கள். அதனைப் போலவே அதற்கு அடுத்து வந்த ஆட்சியாளர்களும் அதே பாணி கடை பிடித்து வருகின்றார்கள் என்பதை நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்களில் நாம் பார்த்து வருகிறோம். தர்மபூரியில் வேளாண்பல்கலைக் கழக மாணவிகள் பேருந்தில் வைத்து உயிரோடு எரித்துக் கொலை செய்ய வழக்கு, தா.கிருஷ்ணன் கொலை, என்று திராவிட கட்சிகளின் ரவுடிப்பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிலை மாற வேண்டும் மாற்று அரசியல் சக்தியால் மட்டுமே முடியும். இதற்கு இளைய தலைமுறையினர் முன் வர வேண்டும்.

| | |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |