நவம்பர் 23 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : தலைமகன்
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | | Printable version | URL |

இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாக மாற ஆரம்பித்த இந்நாளில் இதுவரை நடிகராக மட்டும் இருந்த சரத்குமார் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள படம் தான் தலைமகன். வாளை விட பேனா வலிமையானது என்றாலும் அந்தப் பேனாவைப் பிடித்திருப்பவர்களும் வலிமையானவர்களாக இருந்தால்தான் இந்தக் காலத்தில் பிழைக்க முடியும் என்பதை ஆக்ஷன் மசாலா கலந்து கொடுத்திருக்கிறார் சரத். இது சரட்தின் 100 வது படமாகும்.

செய்தி ஊடகங்கள் எல்லாம் அரசியல் கட்சிகளின் ஊதுகுழல்களாக செயல்பட ஆரம்பித்துவிட்ட இந்நாளிலும் நேர்மையான வழியில் பத்திரிக்கை நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் விஜயகுமார். இவரது பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் தீரன் (சரத்), எரிமலை (வடிவேலு) மற்றும் மேகலா (நயன்தாரா). விஜயகுமாரின் நேர்மையான எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து செய்யும் சதியில் தன் உயிரை இழக்கிறார் விஜயகுமார். இவரது மறைவிற்குப் பிறகு அப்பத்திரிக்கையை தானே ஏற்று நடத்துகிறார் சரத்.

Sarath,Nayanபோலீஸ் துணையுடன் அராஜக அரசியல் நடத்துபவர் ஷண்முக சுந்தரம் (முகேஷ் திவாரி). இவருடைய அராஜகங்களுக்குத் துணை போகும் போலீஸ் அதிகாரி அலங்காரம் (சீமா பிஸ்வாஸ்). இவர்கள் இருவரும் இணைந்து வெளிநாட்டு நிறுவனத்திற்கு மினரல் வாட்டர் பிளான்ட் கட்ட அரசாங்க அனுமதி கிடைக்கச் செய்கிறார்கள். இந்நிறுவனம் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் வற்றி பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கபடுவார்கள் - எனவே இந்நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்யவேண்டும் என்று ஆதாரங்களுடன் சரத் பத்திரிக்கையில் எழுதுகிறார். இதனால் கொதித்து எழும் முகேஷ¤ம் சீமாவும் சரத்தையும் அவர் நடத்தும் பத்திரிக்கை அலுவலகத்தையும் துவம்சம் செய்கிறார்கள்.

கிட்டத்தட்ட இறந்துவிட்ட நிலையில் இருக்கும் சரத் ஒருவழியாக மறுஜென்மம் எடுத்து வருகிறார். தன்னுடைய பழைய நிலைக்கு வர சரத்திற்கு 2 வருடங்கள் பிடிக்கின்றன. அதற்குள் முகேஷ¤ம் சீமாவும் பதவிகளின் உச்சத்திற்கு சென்றுவிடுகிறார்கள். தன் சாதுர்யத்தாலும் நண்பர்கள் உதவியுடனும் சரத் எவ்வாறு அக்கிரமக்காரர்களின் கொட்டத்தை அடக்குகிறார் என்பதே மீதிக்கதை.

தனக்கு என்ன வருமோ அதை செவ்வனே செய்கிறார் சரத். சண்டைக் காட்சிகளில் அருமை. வழக்கத்திற்கு மாறாக மேக்கப்பில் அதிக சிரத்தை எடுத்து செயல்பட்டிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். அரசியல் நெடியுடன் சரத் பேசும் சில வசனங்கள் சூப்பர்.

ஆட்டுக்கு தாடி போல இந்தப்படத்தில் நயன்தாரா. நாயகனுடன் டூயட் பாடுவது - வடிவேலுவை திட்டி Nayan,Sarathமுட்டாளாக்குவது இதைத் தவிர படத்தில் அவருக்கு ஒரு வேலையுமே இல்லை. வடிவேலு தன்னுடைய வழக்கமான காமெடியில் கலக்குகிறார். மற்றபடி விசேஷமாக ஒன்றும் இல்லை.

அரசியல்வாதியாக வரும் முகேஷ் ஏதோ தன் பங்கிற்கு வில்லத்தனம் செய்கிறார் என்றால் சீமா பிஸ்வாஸ் தலைவலியான போலீஸ் அதிகாரியாக கலக்குகிறார். ஆனாலும் சீமாவின் திறமைக்கு சரியான தீனி கிடைக்கவில்லையோ என்று தோன்றுகிறது. படத்தில் விஜயகுமார், சங்கிலி முருகன், டெல்லிகணேஷ் உள்ளிட்டவர்களும் இருக்கிறார்கள்.

திரைக்கதை சேரன். தன்னுடைய படத்திற்கு தான் பார்த்து பார்த்து கதை அமைப்பாரோ என்று சந்தேகப்படும் படி கதையில் ஏகப்பட்ட லாஜிக் குளறுபடிகள் மற்றும் தொய்வு. ராஜ்கண்ணனின் வசனத்தால் தான் படம் ஓரளவிற்காவது விறுவிறுப்பாக இருக்கிறது என்றால் மிகையில்லை. பால்.ஜே ஸ்ரீகாந்த் தேவா என்று இரண்டு இசையமைப்பாளர்கள் இருந்தும் பாடல்களும் பின்னணி இசையும் சுமார் தான்.

இயக்குனரான முதல் படத்திலேயே பற்றி எரியும் ஒரு விஷயத்தை தைரியமாக கையில் எடுத்ததற்காக சரத்திற்கு பாராட்டுகள் என்றாலும் இன்னும் நிறைய மெனக்கெட வேண்டும்.

| | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |