நவம்பர் 23 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : உடைகிறது தி..மு.க. கூட்டணி
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | | Printable version | URL |

பா.ம.க. விலகினால் வை.கோ.வின் நிலைமை எப்படி இருக்கிறதோ அதே நிலைமை ராமதாசுக்கும் ஏற்படும்.

Ramadossஉடைகிறது தி..மு.க. கூட்டணி என்ற வார்த்தை தான் தமிழக அரசியலில் தற்பொழுது பேசப்படும் வார்த்தை. பலம் வாய்ந்த கூட்டணியாக கருதப்படும் தி.மு.க. கூட்டணியை உடைக்க பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. முயற்சி செய்து வருவதாக புலனாய்வு இதழ்கள் கட்டுரை எழுதத் தொடங்கி விட்டன. தி.மு.க. கூட்டணியில் இருந்து குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறுவது உறுதி என்று சொல்லப்பட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் சொல்லி சர்ச்கைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி தனது பாதையை மாற்றிக் கொள்ள தயாராகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். 

தி.மு.க.வினர் தங்களுக்கு பச்சைத் துரோகம் செய்து விட்டனர். அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கமானவர்கள். தேர்தலில் தோழமைக் கட்சிகளின் வெற்றிக்காக உயிரையும் கொடுப்பார்கள். ஆனால் தி.மு.க. தொண்டர்கள் குழி பறிப்பதையே வேலையாகக் கொண்டவர்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சொன்ன வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. அதாவது தி.மு.க.வை விட அ.தி.மு.க. தான் எங்களுக்கு பெஸ்ட் என்று சொல்வது போல் இருக்கிறது. இதே கருத்தை  இந்திய, மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சொல்லி இருக்கின்றன. தி.மு.க. கூட்டணியில் ஒற்றுமையில்லை என்பதை நிருபிக்க இது ஒன்றே போதும். கடந்த நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் கூட்டணி கட்சிகளை நன்கு பயன்படுத்திக் கொண்ட தி.மு.க. மீது கூட்டணிக்கட்சிகள் இன்று கோபம் கொண்டு இருக்கின்றன. இதற்கு காரணம் தி.மு.க.வின் சுயநல அரசியல் தான். அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது என்ற தத்துவம் இருக்கிறது. அந்தத் தத்துவம் தமிழக அரசியலில் வெகு விரைவில் நிகழப் போகிறது. அதாவது தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறப் போகின்றன. அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் முடிந்து விட்டன. இன்னும் 4 மாதங்களில் தமிழகத்திற்கான 2007-08ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப் படும் பொழுது தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் வெளியேற வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கணித்திருக்கிறோம். அதாவது இந்த முறையும் முதல்வர் கருணாநிதியால் வரியில்லாத, பஸ் கட்டணம் உயர்வு இல்லாத, சாமன்ய, நடுத்தர மக்களை பாதிக்காத  பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அதனால் 2007-08ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பொழுது பஸ் கட்டணம், ஆவின் பால் விலை உயர்வு, ரே~ன் கடைகளுக்கான மண்ணெண்ணெய் விலை உயர்வு கண்டிப்பாக இருக்கும் என எங்கள் கட்சியின் தலைமைக்கு தகவல் வந்திருக்கிறது. அதனால் இனிவரும் முதல்வர் கருணாநிதியின் மைனாரிட்டி அரசு நிலைத்து இருக்கிறதோ இல்லையோ அவர்களோடு கூட்டணி வைத்திருக்கும் சில கட்சிகள் தி.மு.க.வோடு நிலைத்து இருக்காது என்கிறார் முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலராக இருந்த செல்வன்.

தனித்து அரசியல் செய்து பலம் வாய்ந்த கட்சிகளாக இருந்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இன்று கூட்டணிக்காக பிற கட்சிகளை தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ள படாத பாடு படுகின்றன. இன்று இந்தியா முழுவதும் ஒரு கட்சியின் ஆதிக்கம் என்பது கானல் நீராகி விட்டது. இதற்கு தமிழகமும் விலக்கல்ல. 2004ம் ஆண்டில் இருந்து இன்றைய உள்ளாட்சித் தேர்தல் வரை தி.மு.க. வெற்றி பெற்றதற்கு காரணம் அதன் கூட்டணிக் கட்சிகள் தான். கூட்டணி செல்வாக்கு இல்லாமல் அ.தி.மு.க. அடி மேல் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியும், கம்யூனிஸ்ட்களும் எதிர்ப்பு குரல்களை முதன் முதலில் வெளியிட்டுள்ளனர். இதனை நாம் சாதாரண குரலாக எடுத்துக் கொள்ளவே முடியாது. தி.மு.க.வுடன் பா.ம.க. வைத்திருக்கும் கூட்டணி நிரந்தர கூட்டணி அல்ல. இது தேர்தலுக்கான கூட்டணி என்று ராமதாஸ் சொல்லி விட்டார். இந்த தேர்தல் கூட்டணி அடுத்த முறை மாறலாம் என்பது தான் இதன் உட்பொருள். பொதுவாக ஒரு கூட்டணியில் இருக்கும் கட்சி  கூட்டணிக்கு தலைமை வகிக்கம் கட்சியை தாக்கி, விமர்சனம் செய்கிறது என்றால் அவர்களுக்குள்ளே ஏதோ பிரச்சினை என்று தான் அர்த்தம். இப்பொழுது பா.ம.க. சமாதானம் அடைந்து விட்டதாக சொல்வது எல்லாம் ஒரு தற்காலிக தீர்வு தான். இனி மேல் தேர்தல் வர சில ஆண்டுகள் இருக்கிறது. அது வரை ஏன் ஆளும் கட்சியை பகைத்துக் கொள்ள வேண்டும் என ராமதாஸ் நினைத்திருக்கலாம். அதே போல பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராமதாஸின் மகன் அன்புமணி மத்திய சுகாதாரக் துறை அமைச்சராக இருக்கிறார். அந்த பதவிக்கு எந்த சிக்கலும் வந்து விடக் கூடாது. அதனால் தேர்தல் காலம் வரை தி.மு.க.வோடு அனுசரித்துப் போகலாம் என்று தான் பா.ம.க. முடிவெடுத்து இருக்கலாம். அப்படியே தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நிலைத்திருந்து பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தால் குழி பறிக்கும் தொண்டர்கள் முன்பை விட ஆழமாகத் தான் குழி பறிப்பார்கள். இது ராமதாசுக்கும் நன்கு தெரிந்திருக்கும். அதனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேற வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது என்கிறார் ஓய்வு பெற்ற சமூக அறிவியல் துறை பேராசிரியர் வெங்கட்ராமன்.

 Anbumaniதி.மு.க. கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகுகின்றன, கூட்டணி உடைகின்றன என்பதெல்லாம் வடி கட்டிய பொய். முதல்வர் கருணாநிதி சொன்னது போல் வேற்றுமைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக இருப்போம். இந்தக் கூட்டணி மூன்று தேர்தல்களிலும் பல வெற்றிகளை பெற்று இருக்கிறது. இன்று கிராம பஞ்சாயத்து முதல் மத்திய அரசு வரை அதிகாரத்தை பெற்று இருக்கக் கூடிய கூட்டணியாக தி.மு.க. தலைமையிலான கூட்டணி இருக்கிறது. இந்த கூட்டணியை விட்டு ராமதாஸ் சென்றால் அவருக்குத் தான் நஷ்டம். இன்றைய மத்திய அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் அன்புமணி பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா, மத்திய அறிவியல் கழகத் தலைவர் வேணுகோபாலோடு மோதல் போன்ற விஷயங்களில் அன்புமணியை அனைவருமே குறை சொல்கிறார்கள். ஆனால் அவரை பாதுகாத்து வருவது தி.மு.க. தான். கடந்த சட்டமன்றத் தேர்தலை ராமதாசுக்கு பதிலாக திருமாவளவனை வைத்து எப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாளித்தாரோ, அதே போல நாங்களும் சமாளிப்போம். பாட்டாளி மக்கள் கட்சிக்கு முன்பு போல் செல்வாக்கு எல்லாம் கிடையாது. அப்படி செல்வாக்கு இருந்திருந்தால் பலமான கூட்டணி இருந்தும் விருதாசலத்தில் விஜயகாந்தையும், திண்டிவனத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகத்தையும் வெற்றி பெற விட்டிருக்க முடியுமா? அதனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகினால் தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் இல்லை. பா.ம.க. விலகினால் வை.கோ.வின் நிலைமை எப்படி இருக்கிறதோ அதே நிலைமை ராமதாசுக்கும் ஏற்படும். இப்பொழுது தி.மு.க. கூட்டணியை உடைக்க சில பத்திரிக்கைகள் தான் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறாது என்கிறார் தி.மு.க. ஒன்றியச் செயலர் கனகராஜ்.

| | | | |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |