நவம்பர் 24 2005
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : மன்னர் ராஜமன்னார்
- சம்பத்
| Printable version | URL |

 

1. மந்திரி: மன்னா. பக்கத்து நாட்டு பேரரசர் நம்பளை கப்பம் தான் கட்ட சொன்னாரே தவிர கப்பலெல்லாம் கட்ட சொல்லலை. எதுக்கும் பயப்படாம இன்னொரு தடவை தைரியமா கேட்டு சரி பாத்துடுங்க!

2. மந்திரி: மன்னா. வாழ்க்கையில இப்பதான் முதன் முறையா போருக்கு போறீங்க, சரி. ஆனா அதுக்காக மார்பு கவசத்துல 'எல் போர்டு' போட்டுகிட்டுதான் போவேன்னு அடம் பிடிக்கிறது அவ்வளவா சரியில்லீங்க.

3. மந்திரி: மன்னா! நம்ப அரண்மனை வரைபடத்தை கொஞ்சமாவது முயற்சி பண்ணி மனப்பாடமா வைச்சுக்க ட்ரை பண்ணுங்க. நீங்க பாட்டுக்கும் நீச்சல் குளம்ன்னு நினைச்சு, முதலைங்க இருக்கிற அகழியில குதிச்ச விஷயம் வெளிய தெரிஞ்சா, ஜனங்க உங்களை ரொம்ப கேவலமா நினைப்பாங்க.

4. மந்திரி: மன்னா! என்ன பண்றது. அரண்மனைக்குள்ள இன்னைக்கு கொஞ்சம் புழுக்கம் ஜாஸ்தி தான். அதுக்காக வெறும் லுங்கி பனியனோடு வந்து சிம்மாசனத்துல உட்கார்ந்திருப்பது அவ்வளவா நல்லாயில்லை.

oooOooo
சம்பத் அவர்களின் இதர படைப்புகள்.   நையாண்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |