நவம்பர் 25 2004
தராசு
கார்ட்டூன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
மேட்ச் பிக்சிங்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
நையாண்டி
சமையல்
அறிவிப்பு
சிறுவர் பகுதி
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : தானமா ! இலவசமா ? !
  - ஜெயந்தி சங்கர்
  | Printable version |

  கடந்த ஆண்டு (2003) பிப்ரவரி மாதம் Food from the heart என்னும் இலப நோக்கமற்ற நிறுவனம் ஒன்று க்ரிஸ்டியன் மற்றும்  ஹென்ரி லைமர் ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது. முதலில் இது தொடங்கப்பட்டதே ரொட்டி (பிரெட்) வினியோகத்திற்காகத்தான்.  ஒவ்வொரு நாளும் இங்கு ரொட்டிக்கடைகளில் (பேக்கரி) நடந்துவந்த மிகப்பெரிய அக்கறைக்குரிய விஷயம் ஒன்று அப்போது ஆங்கில நாளிதழில் அலசப்பட்டது. இங்கு 'டெலி·ப்ரன்ஸ்' ,'ப்ரிமா டெலி' போன்ற பல ரொட்டிக்கடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ரொட்டிக்கடைகளில் விற்கப்படாத ரொட்டி மற்றும் ரொட்டிசார்ந்த உணவுப்பொருட்களை அன்றன்றே குப்பைத்தொட்டியில் போட்டுவந்தனர். இது அதிக எண்ணிக்கையில் தீவெங்கும் நடந்துவந்தது. அவற்றைச் சரிவர பங்கீடுசெய்யக்கூட முடியாது இயந்திரகதியில் வேலை செய்கிறவர்கள் செயல் பட்டுவந்தனர். இதையறிந்த சிலர் அதிகாலைவேளைகளில் தங்களில் வாகனங்களிலேயே ரொட்டிகளை எடுத்துக்கொண்டு வசதிகுறைந்த குடும்பங்கள், தொண்டு நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்குக் கொண்டுபோய் கொடுக்க ஆரம்பித்தனர்.

  Food from the heart என்னும் இந்த நிறுவனம் தற்சமயம் ஒவ்வொரு மாதமும் சராசரி 20,000 கிலோ ரொட்டிகளை வினியோகிக்கிறது. அக்டோபர் 2ஆம் தேதி இவர்கள் புதுவிதமான செயலொன்றைச்செய்தனர். ரொட்டி மட்டுமே நாங்கள் வினியோகிப்பதில்லை, எல்லாவிதமான உணவுப்பொருட்களையும் வினியோகிக்கிறோம் என்று பொதுமக்களுக்கு உணர்த்த நன்கொடையாளர்களிடமிருந்து உணவுப்பொருட்களாகச் சேகரித்தனர். பேரங்காடிக்கடைகளிலேயே இந்நடவடிக்கையை மேற்கொண்டனர். ஷாப்பிங்க் செய்யும் மக்கள் அப்படியே தானம் செய்யவும் சில பொருட்களை வாங்கி இவர்களிடம் கொடுத்தனர். சமையல் எண்ணை, திடீர் நூடில்ஸ், அரிசி, போன்ற 1000 பொருட்களை எதிர் பார்த்தனர். ஆனால், 4000 பொருட்கள் சேர்ந்தன ! இவை அடுத்து வந்த வாரங்களில் 774 ஏழை தனிநபர்கள், 95 இல்லங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. மேலும் மேலும் தொண்டூழியர்கள் சேரச்சேர இவர்கள் தங்களின் சேவையை விரிவு படுத்தியபடியிருக்கிறார்கள்.

  பொதுவாய் ஒரு வாஷிங்க் மெஷின் பழுதானால் புதியது வாங்குவோம். அதுகூட, அதைச் சரியாக்கமுடியுமா என்று முயற்சிசெய்துவிட்டுத்தானே வாங்குவோம். சிங்கப்பூரில் ஒரு பழக்கம் உண்டு. தீபாவளிக்கு இந்தியர்களும் சீனப்பத்தாண்டுக்கு சீனர்களும் ரம்ஸான் பெருநாளுக்கு முன்னர் மலாய் சமூக இஸ்லாமியர்களும் சோபா, மின்பொருட்கள் போன்ற வீட்டுப்பொருள்களைப் புதிதாக வாங்குவார்கள். வீட்டில் அந்தப்பொருட்கள் பழுதாகாமல் புத்தக்கருக்கழியாமலேயே இருக்கும். ஆனாலும், பார்த்துப்பார்த்து அலுத்துவிடுமோ என்னவோ, மாற்றுவார்கள். குறைந்தபட்சம் திரைச்சீலைகளையாவது மாற்றுவார்கள். கொஞ்சம் அதிகக் காசிருந்தால், புத்தம்புதிய
  தரையை உடைத்து வேறு மாற்றுவார்கள்.

  இந்தமாதிரி புதியது வாங்கியதுமே வீட்டில் உள்ள பழைய பொருளை அகற்றவேண்டுமே. அவ்வகையில், வீணே தூக்கியெறியாமல், சிங்கப்பூரர்களில் பலர் டோஸ்டர், வாஷிங்க் மெஷின், டீவீ போன்ற ஏராளமான வீட்டுப்பொருட்களை 'தானம்' செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

  'சால்வேஷன் ஆர்மி' என்னும் தொண்டு நிறுவனம் நாள் ஒன்றுக்கு மட்டும் 10 டன் உபயோகித்த புத்தகங்கள், பர்னிச்சர்கள் மற்றும் உடைகளைச் சேகரிக்கிறதாம். ஒரு முறை இங்கு தானமாக வந்த பொருள் என்ன தெரியுமா? ஒரு கா·பின் (COFFIN ) ! வித்தியாசமான பொருட்களில் மேலும் சில உண்டு. அவை  3.7 மீ படகு (boat) , ஒரு வேன் (van) ஒரு ·போர்ட் கார் (ford cortina car) போன்றவை. டன் கணக்கில் சிங்கப்பூரர்களிடையே உபயோகிக்கப்படாத பொருட்கள் குவிந்திருக்கிறது என்பது தெரிகிறது.

  செப்டம்பர் 20 ஆம் தேதி ஆங்கில நாளிதழில் ஒரு வித்தியாசமான செய்தி. "வாங்க வாங்க ! முற்றிலும் இலவசம்,." என்று கூவியழைக்காதகுறையாய் ஒரு விண்ணப்பம். வீட்டிற்குப்பயன்படும் வாஷிங்க் மெஷின், டோஸ்டர், பிரிண்டர், ·பேன், டீவீ, மொபைல் போன், ரைஸ் குக்கர், மெத்தை என்று சுமார் 5000 பொருள்கள் குவிந்துவிட்டன. இவற்றில் 1300 மட்டுமே குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டன. மற்றவற்றை வைக்கவே புவா என்ற பெண்மணி தனியே தன் கைக்காசில் வாடவைக்கு ஓரிடத்தைப்பிடித்துள்ளார். இவர் வசதிகுறைந்தோருக்கு உதவ பொருட்களைச் சேகரிக்கிறார் என்றறிந்து நட்பு வட்டம் மூலம் செய்திபரவி பொருட்கள் குவிந்துவிட்டன. பெற்றுக்கொண்டு உபயோகிக்க ஆளில்லை. குவிந்திருக்கும் பொருட்கள் யாவும் பழுதடையாதவை. சில புதியவை. இவற்றில் ஒரு சோபாசெட், ஒரு டைனிங்க் டேபிள் போன்ற சில ஆடம்பரத்தோற்றம் கொண்டவை என்ற காரணத்திற்காகவே எளியோரால் நிராகரிக்கப்படுகின்றனவாம். தன் இரண்டு தோழிகளோடு தன் மொபைல் நம்பரைக்கொடுத்து பொதுமக்களில் வசதிகுறைந்தோர் அழைத்து வேண்டிய பொருளைப்பெற்றுக் கொள்ளச்சொல்லியிருந்தார்.

  நிலமை எந்த அளவிற்கு இருந்ததென்றால், ஒரு குறிப்பிட்ட தேதிவரை வைத்திருந்து பார்த்துவிட்டு அதற்குப்பிறகு கொடுத்தவர்களிடமே திருப்பிக்கொடுக்கப்பட்டுவிடும், அதை அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்துக்கொள்ளலாம். இல்லை, குப்பையில் வேண்டுமானால் போட்டுக்கொள்ளட்டும் என்றே அறிவிக்கப்பட்டது.

  புவா என்று மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெண்மணிக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. தெருவிலா நின்று, " 'வாங்க வாங்க ! முற்றிலும் இலவசம்,. பொருளாதாரப் பின்னணியை மட்டும் தெரிவிக்கணும்' என்று கூவிஅழைத்துக் கொடுக்கமுடியும், அதான் நாளிதழில் அறிவிக்கத்தீர்மானித்தோம்", என்கிறார். இவர் தன் வட்டாரப் பொதுமக்களில் சிலரிடம் சென்று அவர்களது பொருளாதார நிலையைக்கேட்டறிய முயன்றிருக்கிறார். ஆங்காகே சின்ன அளவில் போஸ்டர்கள் ஒட்டலாமாவென்றும் யோசித்தார்.

  நாளிதழ் செய்தி மூலமாக வசதிகுறைந்தோரில் நிறைபேர் பயன் பெறுவார்கள் என்றும் பொருட்களை வைத்துப் பாதுகாக்கும் தொந்தரவு குறையும் என்று பெரிதும் எதிர்பார்த்தார். நாளிதழ் செய்தி நிச்சயம் பலனைக்கொணர்ந்தது, அதோடு சில தலைவலிகளையும் சேர்த்துத்தான்.

  இரண்டே நாளில் செப்டம்பர் 22ஆம் தேதி புதன் அன்று செய்தியாக வெளியாகியிருந்தது. புவா கொடுத்த மொபைல் தொலைபேசி எண் (97627063) விடாமல் அடித்துக்கொண்டேயிருந்தது. போனில் புவா பேசிக்கொண்டிருக்கையில் கிட்டத்தட்ட 30 மணிநேரத்தில் missed callls மட்டுமே 1429  பதிவானது.  அவற்றையெல்லாம் மறுபடியும் அழைத்துப்பேசிவிடத்திட்டமிட்டிருக்கிறார். நியாயமானவர்களுக்கு / வசதிகுறைந்தோரைக்கண்டறிந்து அவர்களுக்கு வேண்டியபொருள்களைக் கொடுத்துதவத் திட்டமிட்டுள்ளார். ஆனால்,
  வந்த அழைப்பில் கால்வாசி மட்டுமே வசதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஒரு ஆண் போன் செய்து ஐரோப்பாவிற்கு விமான டிக்கெட் இருக்கிறதாவென்று கேட்டிருக்கிறார். 'வசதிகுறைந்தோருக்கு அத்தியாவசியப்பொருட்கள்' என்ற அறிவிப்பிற்குக் கிடைத்த எதிர்வினையைப்பார்த்தீர்களா ! ? இன்னும் இருக்கிறது..

  சிலர் அங்கேயிருந்த அத்தனை பொருட்களையும் எடுத்துக்கொண்டு ரூமைக் காலிசெய்து கொடுக்கத்தயாராயிருந்தார்கள். லாரி அனுப்பிச் சேகரித்துக்கொள்ளவும் கூட 'மனமுவந்து' முன்வந்தார்கள். வேறு சிலர் தங்களுடைய டீவீ வாங்கி ஐந்து வருடமாகிவிட்டது என்றும் நல்ல டீவி இருக்கிறதாவென்றும் கேட்டுள்ளனர். வசதியற்றோருக்கு இன்னது தேவையென்று தானே தோன்றும். புவாவுக்கு ஒரே ஆச்சரியம். நிறையபேர்,"உங்களிடம் என்னென்ன பொருட்களிருக்கின்றன? என்னென்ன brand ?", என்று கேட்டிருக்கிறார்கள். தானம் கொடுத்த மாட்டின் பல்லைப்பிடுங்கிப் பார்த்தானாம்! அந்தக்கதையாக அல்லவா இருக்கிறது? ! கேட்பவர்களின் பொருளாதாரப் பின்னணியை அறியாமல் பொருட்களை எப்படிக் கொடுப்பது? ஆனால், மிகவும் வேடிக்கையென்னவென்றால், அவர்களது விவரங்களைக்கேட்டதும் போன்செய்தவர்கள் கோபத்தில் தகாதவார்த்தைகள் சொல்லித்திட்டி மிரட்டியது.

  புவா நாளிதழில் அறிவித்ததற்கு பலனுமில்லாமலும் இல்லை. போனில் சிலர் உதவுவதாகச் சொன்னார்கள். அவரின் உயர்ந்த நோக்கத்தை ஊக்குவித்துப்பாராட்டினர் சிலர்.

  'இலவசம்' என்றதுமே மக்களின் சிந்தனை எப்படியெல்லாம் போகிறது பார்த்தீர்களா ! ?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |