நவம்பர் 25 2004
தராசு
கார்ட்டூன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
மேட்ச் பிக்சிங்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
நையாண்டி
சமையல்
அறிவிப்பு
சிறுவர் பகுதி
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  நாங்க ரெடி நீங்க ரெடியா ? : உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ஊர்
  -
  | Printable version |

  நீங்கள் பிறந்த, வளர்ந்த, வாழும் ஊர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ஊர் எது ? ஏன் ?

  ஐயப்பன் :

  சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போலவருமா ... இந்த பாட்ட எல்லாரும் கேட்டு இருப்பீங்க. ஆனா கொஞ்சம் பேர் தான் அதோட உண்மையான அர்த்தம் தெரிஞ்சி உணர்ந்து அனுபவிச்சி இருப்பீங்க. அந்த வகைல அதை உணர்ந்து அனுபவிச்சவன் நான்.

  சரி முதல்ல எங்க ஊரை பத்தி சொல்லிடரேன். வேலூர்னா எத்தனை பேருக்கு தெரியும். அங்க இருக்கிற தொறப்பாக்கம் ஜெயில் ரொம்பவே பிரசித்தம். வேலூர் தெரியாதவங்களுக்கு திருவண்ணாமலை. திருவண்ணாமலைக்கும் வேலூருக்கும் ஏறக்குறைய மத்தியில் இருக்கிறது தான் வாழியூர் எனப்படும் குக்கிராமம். வெறுமனே இதான் எங்க ஊருன்னு சொன்னா போதுமா... அதனால எங்க ஊர பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குங்க...

  ஒரு காலத்துல எக்கல்லா வரம் அப்படின்னு இருந்த ஊர்பேர வந்தாரை வாழவைக்கும் ஊர் அப்படிங்கற மாதிரி வாழியூர்னு சொல்லிட்டாங்க. ஆஹா ஓஹோன்னு சொல்லுற அளவுக்கு இல்லைன்னாலும் இது ஓரளவுக்கு அமைதியான கிராமம் தான். பச்சை பசேல்னு வயக்காடுகள் மரங்கள் தோட்டங்கள் அப்படின்னு அதிகம் இருக்காது ஆனாலும் வறண்ட பிரதேசமும் இல்லை. எல்லாமே ஓரளவுக்கு சுமாரா இருக்கும்.

  ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ் அப்படிம்பாங்க. ஆறில்லாததால கொஞ்சம் இயற்கை அழகு குறைஞ்ச இடம் தான். ஆனாலும் எங்க ஊர் ரொம்ப்ப்ப்ப்பவே பிடிக்கும். ஏன்னு கேக்கிறீங்களா... என் கூட அப்படியே பின்னாடி வாங்க. அதாங்க  பிளாஷ்பேக். இப்போதைக்கு இருக்கிறாப்பல அப்ப அவ்வளவு காஞ்சி கிடக்கல பூமி. ஊருக்கு பக்கத்தில இருக்கிறது வெள்ளி மலைன்னு பேரு. பாருங்க எவ்வளவு பெரிய மலைன்னு உங்களுக்கே புரியும். கார்த்திகை தீபம்னா அந்த மலைச்சிகரத்தில விளக்கு வைப்பாங்களாம் ஒரு காலத்துல. இப்ப அந்த சிகரத்துக்கு போறதுக்கே முடியாம திண்டாடிட்டு இருக்கவங்க தான் அதிகம். அந்த மலையோட சிகரத்தை  பாத்தீங்கன்னா ஒரு வித்தியாசமா இருக்கும். உங்க கற்பனைக்கு ஏத்த மாதிரி ஒரு மனிதனோட முகமாவோ இல்ல பறவையோட முகமாவோ கற்பனை செஞ்சு  பாக்கலாம்.

  ஒரு காலத்துல வனவிலங்குகள் நிறைய இருந்த இடம்தான். இப்ப வனவிலங்குகள்னு பாத்தா எதுவும் இருக்க  மாதிரி தெரியல... எங்காச்சும் ஒண்ணு ரெண்டு இருக்கலாம். வெய்யில் காலமானா ராத்திரி நேரத்தில மலைல கொள்ளி எரியும். அம்மாட்ட கேப்பேன். என்னம்மா என்னமோ எரியுதேன்னு. அவங்க சொல்லுவாங்க. அது கொள்ளிவாய் பிசாசு. சொல்பேச்சை கேக்காதவங்களை கொண்டு போய் அங்க தான் விட்டுட்டு வந்துடுவாங்கன்னு, கொஞ்சநாள் அத நெஜம்னு நம்பி எல்லார் பேச்சையும் கேட்டுட்டு இருந்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது ஆடு மாடு மேய்க்க போறவங்க வரும்போது அங்கே இருக்கிற மஞ்சு எனப்படும் கோரைப்புற்களை கொளுத்திட்டு வருவாங்கன்னு. காட்டுத்தீ ஏற்படாம இருக்கறதுக்கான ஏற்பாடாம் ஐந்தாவது வரை மட்டுமே எங்களூர் பள்ளி. வீட்டுக்கும் பள்ளிக்கும் ஒரு 400 மீட்டர்  தொலைவுதான் இருக்கும்.

  உடற்பயிற்சி நேரம் வந்தால் எல்லோரும் பள்ளி தோட்டத்துக்கு போய்விடுவோம். நிலம் திருத்தி வேலி அமைத்து அதில் பல கீரை வகைகளை விதைப்போம் மேற்பார்வைக்கு ஒரு ஆசிரியர் இருப்பார். அதிகம் கத்தாமல் அமைதியாய் சொல்லித்தருவார். ஐந்து அல்லது ஆறு பேர் சேர்ந்து ஒரு பாத்தி என பிரித்து நீர்பாய்ச்சி கீரை பக்குவமாய் வளரும்வரை கண்காணிப்போம். ஒரு முறை நாங்கள் பயிரிட்டது எங்களுக்காய் சமைத்து போட்டார்கள் ( மதிய உணவுக்காக கோதுமை அரிசியை சமைத்து கேன்களில் அடைத்து கொண்டு வருவார்கள். கூட தொட்டுகொள்ள எதுவும் இருக்காது. கீரைத்துவையலுடன் கோதுமை அரிசி சாதம் சாப்பிட்ட அந்த ருசி இன்னும் நினைவில் இருக்கிறது ). " தேவே உன்னை போற்றிடுவோம் தினமும் எம்மை காத்திடுவாய் நாவால் உம்மை நாம் பாட நல்ல தமிழை  தந்திடுவாய்" என அனைவரும் கோரசாய் கடவுள் வணக்கம் சொல்லி முதல் உணவை கடவுளுக்கு என வைத்து விட்டு மிச்சத்தை எங்களுக்கு போட்டார்கள். அந்த நாள் எங்களுக்கு என்னவோ பெரிதாய் சாதித்து விட்டதாய் ஒரு சந்தோசம் இருந்தது. (அப்போதெல்லாம் கேன் தூக்கி வருபவர்களுக்கும் பறிமாறுபவர்களுக்கும் நிறைய மீதம் கிடைக்கும்.... அதற்காகவே பல பேர் போட்டி போடுவார்கள்). அதற்கப்புறம் சில நாட்களில் கோதுமை சாதமும் நின்று போனது. பதிலாக அரிசி சாதம் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதெல்லாம் தாண்டி இன்று வேறு  இடத்தில் அமர்ந்திருக்கிறேன். ஆனாலும் அந்த கோதுமை சாதத்திற்காய் மனம் இன்னும் ஏங்குகிறது.

  பள்ளியின் பின்னாடி ஒரு மரம் இருந்தது. அதன் காய்கள் பிளந்தால் உள்ளே சோற்று பருக்கைகள் போல் விதைகள் இருக்கும் .. சோற்றுக்காய் மரம் என அழைப்போம் அதை.. நேரம் கிடைக்கும் போது அதில் காய்களை பறித்து இரண்டு மூன்று  பேராய் பங்கிட்டு தின்ற நாட்கள் நினைவில் பசுமையாய் இருக்கிறது. கப்பல் மிளகாய் என்று வெகு சின்னதாய் இருக்கும் மிளகாய் அது. ஒரு காய் தின்றால் போதும் மனுஷனுக்கு குறைந்த பட்சம் ஒரு குடம் நீராவது தேவைப்படும் அவ்வளவு காரம். அதையும் போட்டி போட்டு கொண்டு அந்த  சோற்று காயுடன் தின்பார்கள். எனக்கு சோற்று காய் மட்டும் போதும் என ஒதுங்கிவிடுவேன்.. (ஒரு முறை அந்த மிளகாய் தின்று விட்டு  காரம் தாங்காமல் அலறி அடித்துகொண்டு வீட்டுக்கு வந்து அப்பாவிடம் திட்டும் உதையும் வாங்கிய பின் அந்த மிளகாய் பக்கம் போவேனா என்ன). வேப்பம்பழம், இலந்தை பழம், காரைப்பழம் என பலவகை பழங்கள் கிடைக்கும். இப்போது இந்த பழங்கள் வெகுவாக குறைந்து விட்டது. இலந்தை கிடைக்கிறது. காரைப்பழமும் இன்னொன்று சொத்தைகலாப்பழமும் (கருப்பாய் மிளகை விட சற்று பெரியதாய் இருக்கும்) அரிதாகி போய்விட்டது. நாவல் தின்று விட்டு யாருடைய வாய் நீல நிறத்துக்கு மாறி இருக்கிறது என்று பார்ப்போம். மலை வெகு அருகில் (ஒரு 2 KM தொலைவு அவ்வளவுதான்) இருப்பதால் பல பழங்களை நண்பர்கள் அல்லது அவர்கள் பெற்றோர்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள். நான் வாழ்நாளில் மூன்று முறைதான் அந்த மலை அருகில் சென்று இருக்கிறேன்... மலை அடிவாரத்தை தொட்டுவிட்டு திரும்பிவிட்டேன்... என்றேனும் ஒரு நாள் அதன் உச்சிக்கு சென்று பார்க்கவேண்டும்.

  ஐந்தாவதற்கப்புறம் வேறு இடத்தில் தான் சென்று படிக்கவேண்டியதாயிற்று. அதற்கு மேல் அந்த பள்ளியில் வசதி செய்து தரப்படவில்லை. அந்த கடைசி நாளில் மாங்கொட்டை (அதாவது ஓடு உடைத்து உட்புரம் இருக்கும் பருப்பு) கொண்டு என்பெயரும்  நெருங்கிய நண்பனின் பெயரும் எழுதி வைத்தேன். என் வகுப்பறையில். முன்பெல்லாம் ஊருக்கு போகும் நாட்களில் எல்லாம் மறக்காமல் பள்ளிபக்கம் போய்வருவேன்... அதே சற்றே மஞ்சள் படிந்த காவி நிறம் பூசப்பட்ட சுவர். நாங்கள் படிக்கும்போது அடித்தது தான் அதுக்கப்புறம் ஏதுமில்லை. அந்த பழைய கட்டடம் சிதிலமாகி இப்போது அதன் முகப்பு மாடுகட்ட மட்டும் உபயோகத்தில் இருக்கிறது. கடைசியாக சென்ற போது மிகவும் மோசமான நிலைமையில் அப்படியே நினைவு சின்னமாய் இருந்தது கட்டிடம். உள்ளே நாங்கள் அமர்ந்திருந்த இடங்கள் எல்லாம் நினைவில் வர, சட்டென்று கடைசியாக எழுதிய பெயர் நினைவுக்கு வந்தது.... தேடி பார்த்த போது..... பெயர்ந்து போயிருந்த கொஞ்சம் மங்கலாய் ஐயப்பன், கோபி என கிறுக்கலான எழுத்தும் தெரிந்தது. என் கை எழுத்து தான் எழுத துவங்கிய நாட்களின் எழுத்து.... அமர்ந்து அதை தடவி பார்க்கையில் கண்களில் நீர் கோர்த்தது. ஊரின் முகப்பில் இருந்த குண்டன் கடையும் அங்கு கிடைக்கும் பலகாரங்களும் இன்னும் நினைவில் இருக்கிறது.

  வாழை மரங்கள் அதிகம் நிறைந்த ஊர். வாழைத்தோப்புகளிடையே ஓடியாடியதும், வீட்டிற்கென வாழை இலைகளை கத்தை கத்தையாக அறுத்துக் கொண்டு வந்ததும், நெற்கதிர்கள் அறுக்கப்பட்ட வயல்வெளியில் வெறும் கால்களில் அறுக்கப்பட்ட கதிர்களின் அடிப்பாகம் குத்த அப்படியே பட்டம் விட்டுக் கொண்டு இருந்த நாட்களும், மின்சாரம் வீடுகளுக்கு வராத போது சுக்கங்காய் (மினியேச்சர் பூசணிக்காய்.. பூசனிக்காய் வடிவில் இருக்கும். ஆனால் பூசனிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை) விளக்கேற்றி அதில் படித்த நாட்களும், தட்டான் பிடித்து விளையாடி அதற்கு தந்தையிடம் பெற்றவசவுகள் பல உணர்ச்சிகளையும் பால்யநினைவுகளையும் உள்ளடக்கி வைத்திருக்கும் எங்களூரை என்னால் வாழ்வில் மறக்க முடியுமா என்ன ? டிப்ளோமா படித்து முடித்ததும் வேலைக்கென பெங்களூர் வந்து விட்டேன். ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்... அந்த நாள் நினைவுகள் நெஞ்சில் இருந்து நகர மறுக்கிறது.


  ரகுலல்லிஹரி :

  நான் பிறந்த ஊர் காஞ்சிபுரம்.  ஆனால் வளர்ந்த ஊரென்னவோ நெய்வேலி. வேலை பார்த்து தற்சமயம் (12 வருடமாக) வசித்து வருவதென்னவோ கொல்கத்தாவில். 

  நெய்வேலியே எனக்குப் பிடித்த ஊர். காரணம் சிறுபிராயத்து இனிய நினைவுகளே.  ஓருவேளை நானும் தமிழ்நாட்டிலேயே வாழ நேர்ந்திருந்தால் எனது விடை வேறாக இருக்கக்கூடும்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |