நவம்பர் 25 2004
தராசு
கார்ட்டூன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
மேட்ச் பிக்சிங்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
நையாண்டி
சமையல்
அறிவிப்பு
சிறுவர் பகுதி
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  நையாண்டி : தேர்தலில் வேட்பாளாராக நிற்க தேவையான தகுதிகள்
  - மீனா
  | Printable version |

  எலெக்ஷன் கமிஷனும் நீதிமன்றங்களும் சேர்ந்து தேர்தலில் வேட்பாளராக நிற்க என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைப் பட்டியல் போட்டு - அவற்றை செயலாக்க முனைந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொருவரும் இவற்றையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஒவ்வொரு கட்சி
  சார்பாக போட்டியிட பணம் தவிர வேறு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்தோம்.. தலைசுற்றியதுதான் மிச்சம்

  D.M.K

  - திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக போட்டியிடத் தேவையான முக்கியத் தகுதிகள்..

  - ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் - முதல்வர் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவேண்டும்.

  - நெருங்கிய உறவினர்கள் யாராவது எதிர்கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது மத்திய - மாநில அரசு என்கவுண்டரில் இறந்து இருந்தால் அது கூடுதல் குவாலிபிகேஷன்.

  - தினமலர் படிக்கவே கூடாது. முரசொலியின் சங்கொலி மட்டுமே உங்கள் வீட்டில் கேட்கவேண்டும்.

  - தலைவர் பேச்சும் அவரது குடும்பத்தினர் நடந்துகொள்ளும் விதமும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே என்றெல்லாம் சிந்திக்கக்கூடாது. (உதா) இந்தி எதிர்ப்பு - தயாநிதியின் இந்திப் புலமை மற்றும் மூடப்பழக்கவழக்கங்கள் - மஞ்சள் சால்வை, குடும்பத்தினரின் சாமி நம்பிக்கை

  - கலைஞர் வீட்டு குடும்ப நபர்கள் அனைவரிடமும் பயபக்தியுடன் பழக வேண்டும். ( அவர்கள் வயதில் எவ்வளவு சிறியவர்களானாலும் சரி! மரியாதையாக நடந்துகொள்ளவேண்டும். என் வயது என்ன? அவர்கள் வயது என்ன? நான் கட்சிக்காக எவ்வளவு செய்துள்ளேன்? போன்ற புலம்பல்கள் கூடவே கூடா

  - பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சிக் கூட்டங்களில் பேசும்போது 10 வார்த்தை பேசினால் அதில் 4 வார்த்தையாவது ஜெ.வைத் திட்ட பயன்படுத்தவேண்டும்.

  - மேற்கூறியவைகளைத் தவிர பணபலம் ஆட்பலம் எல்லாம் தேவை..

  R.J.D

  - லல்லுவின் ராஷ்ட்ரிய ஜனதாதள் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் முக்கியத் தகுதிகள்.

  - ஒரு பிரபல முன்னாள் அல்லது இன்னாள் தாதாவாக இருத்தல் முக்கியத் தேவை

  - வேட்பாளார் மீது குறைந்தபட்சம் 10 கிரிமினல் கேஸாவது இருக்கவேண்டும்.

  - படிப்பு - கட்டாயம் 10வதைத் தாண்டியிருக்கக்கூடாது

  - ஊழல் செய்வதில் ஏதாவது ஒரு துறையில் வல்லுனராக (expert) ஆக இருக்கவேண்டும்

  - லல்லுவின் குடும்பத்திலிருந்து யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்தப் பதவியிலும் அமரலாம். இதையெல்லாம் அனுசரித்துப் போக வேண்டும்.

  - கடைசியாக உங்களுக்கு பதில் சட்டமன்றத்திற்கோ - நாடாளுமன்றத்திற்கோ போக உங்கள் வீட்டிலிருந்து ஒரு பிரதிநிதி அவசியம் இருக்கவேண்டும்.

  (தொடரும்.....)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |