Tamiloviam
நவம்பர் 27 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அடடே !! : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
- [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

 

கோட்டைக்கு வரவே மாட்டேன் என்ற உறுதி பூண்ட பா.ம.க தலைவர் இரண்டாவது முறையாக கோட்டைக்கு வருகை தருகிறார். அவர் வந்து முதல்வரை பார்த்த சில மணி நேரங்களிலேயே முன்பு தி.மு.க தலைவர்களை எல்லாம் அவமதித்துப் பேசி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குரு தமிழக அரசாலேயே விடுதலை செய்யப்படுகிறார்..

ooOoo

DML Familyகிட்டத்தட்ட சேனல் யுத்தமாகவே நடந்துவந்த தாத்தா - பேரன்கள் மோதல் ஒரளவிற்கு ஓயும் போல ஒரு தோற்றத்தை தாத்தாவே ஏற்படுத்துகிறார். தாத்தாவின் ஒவ்வொரு வார்த்தை தாக்குதல்களுக்கும் பேரன்களிடம் பதில் கணைகள் தயாராக் இருப்பதாலும் அவர்களை வெளியே விட்டுவைப்பதால் ஏற்படும் ஏகப்பட்ட ஆபத்துகளை (சேனல் பலம் - ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் அவர்கள் டெல்லி பத்திரிக்கைகாரர்களுக்கு போட்டுக்கொடுக்கும் தகவல்கள் என ஏகப்பட்ட சமாச்சாரங்கள்) தடுக்க தாத்தா தற்போது அவர்களை தன்னுடன் சேர்த்துக்கொள்ள முடிவெடுக்கிறார்.

ooOoo

இலங்கை அதிபரை தேவைபட்டால் அந்நாட்டிற்கே சென்று சந்தித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவிப்போம் என்று ராமேஸ்வரத்தில் முழங்கிய இயக்குனர்களில் ஒருவர் கூட டெல்லிக்கு அவர் வந்திருந்தபோது - விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்களை நிறுத்த முடியாது அவை தொடரும் என்று பகிரங்கமாக டெல்லியில் அவர் அறிவித்தபோதும் அங்கே போய் அவர் வரும் பாதையில் ஒரு கருப்புக் கொடி கூட காட்டவில்லை. ஏன் ? ஜெயில் வாசம் வீசுவதாலா ?

oooOooo
                         
 
அவர்களின் இதர படைப்புகள்.   அடடே !! பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |