நவம்பர் 30 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஜோதிட விளக்கங்கள் : பரிகாரங்கள் பலன் தருமா ?
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

Navagrahamபிரச்சனை உடையதுதான் மனித வாழ்க்கை.  பிரச்சனைகளிலிருந்து வெளியே வர வேண்டும். அதற்கு என்னெல்லாம் வழியோ அதையெல்லாம் செய்துதான் ஆக வேண்டும். வேலை கிடைக்கவில்லை, திருமணம் ஆகவில்லை, திருமணம் ஆனாலும் குழந்தை பிறக்கவில்லை; இதற்கெல்லாம் விடிவு வேண்டுமென்றால் ஜோதிடரிடம்தான் போக வேண்டியதிருக்கிறது. அவர் ஜாதத்திலுள்ள கிரகங்களை மாற்ற முடியாது. பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தான் செய்யச் சொல்லுவார். 

சரி! பரிகாரம் செய்து விட்டால் பிரச்சனைகள் எல்லாம் சரியாகப் போய் விடுமா?  திருமணம் ஆகாதோருக்குத் திருமணம் ஆகிவிடுமா? குழந்தை இல்லாதோருக்குக் குழந்தை பிறந்து விடுமா?

சிலருக்குப் பரிகாரம் செய்து விட்டால் அவர்கள் நினைத்தது நடந்து விடுகிறது. சிலருக்கு என்ன பரிகாரம் செய்தும் பலனில்லை. சிலருக்கு பரிகாரம் எதுவும் செய்யாமலே அவர்களுக்கு வேண்டியதெல்லாம் நடந்து விடுகிறது. இங்குதான் குழப்பமே ஆரம்பமாகிறது.

பிரச்சனைகளுக்குப் பரிகாரம் செய்வதா அல்லது வேண்டாமா? நமது ஜோதிட நூல்கள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று நமது பெரியவர்கள் கூறியதை எடுத்துறைக்கின்றன. ஆகவே பரிகாரம் செய்யத்தான் பொதுவாக ஜோதிடர்கள் கூறுவார்கள்.

நாம் முன்பே கூறி இருக்கிறோம் எல்லாமே நம் பூர்வவினைப் பயனென்று.  குழந்தை பிறக்கவில்லையென்றால் அது நம் பூர்வ வினைப் பயனால்தான். ஒருவருக்குத் திருமணமாகி சில ஆண்டுகளில் குழந்தை பிறக்கவில்லை யென்றால் அவர் ஜாதகத்தில் புத்திர பாக்கியம் எப்படி இருக்கிறதென்று பார்க்க வேண்டும்.  புத்திர பாவங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருந்தால் என்ன பரிகாரம் செய்தும் பலன் இருக்காது. பாதிக்கப் படாதநிலையில் குழந்தை பிறக்கக் கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே பரிகாரத்தை சிபாரிசு செய்ய வேண்டும். இல்லையென்றால் பலன் எதுவும் இல்லை.

ஒருவருக்கு ஜாதகத்தில் லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ அல்லது தற்போது நடக்கும் தசா, புக்தி நாதனுக்கோ குருவின் பார்வை, அல்லது தர்மஸ்தானமான 9 - ம் அதிபதியின் பார்வையோ இருந்தால்தான் அவர்களுக்குப் பரிகாரத்தினால் பலன் கிடைக்கும். இல்லையென்றால் பரிகாரத்தினால் அவர்களுக்குப் பலன் எதுவும் இல்லை.

போன ஜென்மத்தில் கடுமையான, மன்னிக்க முடியாத பாவங்களைச் செய்தவர்களுக்குத்தான் அத்தகைய கிரக நிலை ஜாதகத்தில் இருந்து வரும்.

| | | | | |
oooOooo
                         
 
ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் அவர்களின் இதர படைப்புகள்.   ஜோதிட விளக்கங்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |