நவம்பர் 30 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : தேனி மனிதன்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

மற்றவர்கள் என்னை வியப்போடு பார்ப்பது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை தருகிறது என்று சொல்லும் ஜெயக்குமாருக்கு வயது 30. விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். திருமணமான இவர் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றிருக்கிறார். இவரது தொழில் தேன் வியாபாரம் செய்வது. இவரது பொழுது போக்கு தேனீக்களை உடலில் மொய்க்க வைத்து சாதனைகள் செய்வது.

Jayakumarநான் டிப்ளமோ பட்டம் பெற்ற பிறகு என்ன செய்வது என்று யோசனையில் இருந்தேன். அப்பொழுது உறவினர் ஒருவரை காண எஸ்டேட் பகுதிக்கு சென்றேன். அங்கு தேன் சேகரித்து, அதனை வியாபாரமாக செய்வதைப் பார்த்து நானும் அத்தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன். அதன்படி கோவை வேளான் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் உதவியோடு 10,000 இத்தாலி நாட்டைச் சேர்ந்த தேனீக்களை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். இந்த ஈக்கள் சேகரித்த தேன்களை விற்பனை செய்யத் துவங்கினேன். அப்பொழுது இந்த தேனீக்கள் என் மீது மொய்க்கும். இதனை ஏன் நாம் சாதனையாக செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் ராணி தேனீயைப் பிடித்து எனது தலைப்பகுதியில் வைத்துப் பார்த்தேன். உடனே அனைத்து தேனீக்களும் என் தலையை மொய்க்க ஆரம்பித்தன.

இப்படி ஆரம்பி;த்த எனது சாதனைப் பயணம் இன்று எனது பெயரை லிம்கா சாதனை புத்தகத்தில் பதிய வைத்திருக்கிறது. அடுத்து எனது பெயரை கின்னஸில் பதிய வைப்பதற்கு முயற்சி செய்து வருகிறேன். அதற்காக எனது வாய்க்கு உள்ளே 100 தேனீக்களை வைத்து 10 நிமிடங்களுக்கு மேல் வைத்திருந்து சாதனை செய்ய திட்டமிட்டுள்ளேன். இதில் கண்டிப்பாக நான் சாதித்து எனது பெயரை கின்னஸில் பதிய வைப்பேன் என்கிறார் நம்பிக்கையோடு.

பொதுவாக இந்திய நாட்டு இன தேனீக்கள் அதிகமாக கொட்டும் தன்மையுடையவை. ஆனால் இத்தாலி நாட்டுத் தேனீக்கள் சாதுவானவை.  அவைகள் அதிகமாக கொட்டுவதில்லை. அதே போல் இந்திய தேனீக்களைப் போல் அடிக்கடி இறந்து விடும் தன்மையும் இத்தாலி நாட்டுத் தேனீக்களிடம் கிடையாது. அதனால் தற்பொழுது பல லட்சம் தேனீக்களை வைத்து தேன் சேகரித்து அதனை வியாபாரம் செய்து வருகிறேன். வாழ்க்கையை ஓட்டுவதற்கு இதில் இருந்து பணம் கிடைக்கிறது. பணம் சமபாதிப்பதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் இந்த தேனீக்களை வைத்து  சாதிக்க நினைத்து  ஒரு லட்சம் தேனீக்களை உடல் முழுவதும் ஒட்டவைத்து பெரிய சாதனையை கடந்த ஆண்டு ஒன்றைச் செய்தேன். அதே போல உடல் மற்றும் தலைப்பகுதி முழுவதும் தேனீக்களை மொய்க்க வைத்து இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் வலம் வந்து இருக்கிறேன்.

எனது சாதனையை ஜெயா டி.வியில் பார்த்து ஏ.எக்ஸ். என் டி.வி. சேனலில் வந்து செய்து காட்டும்படி கேட்டனர். நானும் செய்யலாமா, வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி செய்யும் பொழுது நமது சாதனையை அங்கீகரிக்கும் படி இருக்க வேண்டும். பிறரின் பார்வைக்காக மட்டுமே செய்வதால் எந்த நன்மையும் எனக்கு இல்லை. அதனால் பல இடங்களில் இருந்து வந்து என்னை செய்து காட்டும் படி சொல்வார்கள். நான் தான் வேண்டாம் என்று விட்டு விடுகிறேன்.

தேனீக்களை வைத்து சாதனை செய்ய பயிற்சி எடுக்கும் பொழுது உடலில் தேனீக்கள் கொட்டும். தேனீக்களை அகற்றிய உடன் உடலில் அரிப்பு போன்று ஏற்படும். அதனை எல்லாவற்றையும் தாண்டித் தான் ஜெயித்துக் கொண்டு இருக்கிறேன். இந்திய அளவில் என்னைப் பற்றிய செய்திகள், எனது சாதனையை அங்கீகரித்து அடையாளம் காட்டப்பட்டு விட்டேன். எனது அடுத்த குறிக்கோள் கின்னஸில் சாதிப்பது தான் என்கிறார் தீர்க்கமாக.

| |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |