டிசம்பர் 02 2004
தராசு
கார்ட்டூன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
கட்டுரை
சமையல்
நையாண்டி
கட்டுரை
அறிவிப்பு
மேட்ச் பிக்சிங்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : ரோகம் அவர்களின் குற்றமா ?
  - ஜெயந்தி சங்கர்
  | Printable version |

  பொதுவாகவே சிங்கப்பூரர்கள் கொஞ்சம் பயந்தாங்கொள்ளிகள் தான். அது சார்ஸ் போன்ற உயிர்கொல்லி நோயென்றாலும் சரி, அக்கம்பக்க நாடுகளில் நடக்கும் இயற்கை/செயற்கை பேரிடர்களென்றாலும் சரி, அளவுக் கதிகமாக பயப்படுவார்கள். மிகவும் வேடிக்கையாக இருக்கும். இவர்களுக்கு 'ஆவி', 'பேய்' போன்றவற்றிலும் பயம் கலந்த ஈடுபாடு அதிகம். எப்போதாவது ஏற்படுவதாலோ என்னவோ ஓர் இரவு முழுவதுமான மின்வெட்டு ஒரு பெரும் செய்தியாகவும், இளைய குடிமக்களுக்குப் பெரும்பயத்தைக் கொடுப்பதாகவும் இருக்கிறது.

  சமீபத்தில் 40 தொழு நோயாளிகளைக் உற்சாகப்படுத்த தொண்டூழியர்கள் சிலர் உணவகம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க நினைத்திருக்கின்றனர். உணவகத்தைத் தேர்ந்தெடுத்துத் தீர்மானிக்கவேண்டிய கட்டம் வந்தது. 50 வயது திரு.ஜோன் சூ மற்றும் அவரின் 40 வயது மனைவி திருமதி. ரோஸாலிண்ட் இருவரும் ஒவ்வொரு இடமாகத் தொலைபேசியில் அழைத்தனர். சன் டெக் ஸிடி, ஆர்சார்ட் ரோட் மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே என்று எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட 12 உணவகங்களில் இவர்களுக்கு ரிஸெர்வேஷன்/அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம்.

  சிலர் மிகவும் பணிவாக, "நாங்கள் உங்களுக்கு அனுமதி கொடுத்தால், நாங்களே எங்கள் வாடிக்கையாளர்களை பயமுறுத்தி விரட்டிவிடக்கூடும்", என்றுகூறி மறுத்துவிட்டனர். பெரும்பாலோர் மறுபடியும் அழைக்குமாறு பணிவன்புடன் கூறிவிட்டுப் போனை வைத்துவிட்டனர்.

  "எங்களுக்கு வேறுபாடு காண்பிக்கும் எண்ணம் இல்லை. ஆனால், ஹோமிலிருந்து வந்திருக்கும் நோயாளிகளைப் பார்த்ததும் எங்கள் உணவகத்திற்கு வரக்கூடியவர்கள் பயந்து திரும்பிச்சென்றுவிடலாம் இல்லையா?,"ஜும்போ ஸீ ·புட் ரெஸ்டாரண்ட் என்றறியப்படும் உணவகத்தில் பணியாற்றும் மார்கெட்டிங்க் எக்ஸெக்யூட்டிவ் திருவாட்டி. எவ்லின் ஸிம் கூறினார். தங்களது சிரெங்கூன் கார்டன் கிளையில் அதுவும் வாரநாட்களில் ஒருநாள்
  ரிஸெர்வேஷன் கொடுக்கத் தயார் என்றும் சொன்னார். வார இறுதியில் மேசைகள் முற்றிலும் புக் ஆகி வியாபாரம் முழுவேகத்தில் இருக்குமாம்.

  மேலும் சிலரோ எதிர்வரும் டிசம்பர் 5 அன்று ஞாயிற்றுக்கிழமை, அன்று உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிகம், ஆகவே முடியாது என்று மறுத்தனர். மேலும் சிலரோ 40 பேரில் பாதிபேர் சக்கரநாற்காலிகளில் இருப்பவர்கள் என்பதால், சமாளிப்பது சிரமம் என்ற காரணத்தைக்கூறி மறுத்தனர். நோயாளிகளில் சிலருக்கு தோல் அழர்ச்சி, நீளம் குறைந்த விரல்கள் போன்ற நோயின் அடையாளங்கள் இருந்ததை மறுப்பதற்கோ மறைப்பதகோ இல்லை.

  வீடமைப்புப்பேட்டைகளில் இத்தகைய நோயாளிகள் வசிக்கிறார்கள் என்பதிலிருந்தே இது தொற்றக்கூடிய நோயல்ல என்றறியலாமே என்று கூறும் திரு. சூ இவ்வருடம் இரண்டாவது முறையாக இல்லத்தில் வசிக்கும் இந்த நோயாளிகளுக்கு 'விருந்து' ஏற்பாடு செய்ய முனைந்திருக்கிறார். ·பிப்ரவரியில் சீனப்புத்தாண்டு நேரத்தில் சில வாரங்களுக்கு முயன்றபிறகே ஒரு தாய் உணவகத்தில் ஏற்பாடு செய்ய அவரால் முடிந்தது.
  முடிவில் கில்லினி ரோட்டில் இருக்கும் ஓர் உணவகத்தில், முன்னாள் தொழுநோயாளிகள் என்ற விவரம் அறியாததால் 40 பேரையும் அனுமதிப்பதாகச் சொன்னார்கள். "நாங்கள் வர்த்தகர்கள், தொண்டு நிறுவனமல்ல எங்களது. பணம் தருவதானாலும் அனுமதிக்க முடியாது", என்று கூறினார்கள் ஒரு பெரானகன் உணவகத்தில்.

  "வார இறுதியில் ஏற்பாடு செய்யமுடியாது, ஏனென்றால் நோயாளிகளை ஹோமிலிருந்து கூட்டிக்கொண்டு வந்து விருந்து முடிந்து திரும்பக்கூட்டிக் கொண்டு விடும் பொறுப்பு தொண்டூழியர்களுடையது. அந்தத் தொண்டூழியர்களில் பலர் வாரநாட்களில் மும்முரமாக உழைக்கும் அதிகாரிகள் என்கிறார் திரு சூ. அவர்களின் சேவை வார இறுதியில்தான் கிடைக்குமாம்.

  சிங்கப்பூரின் பிரபல நாளித The Straits Times 10 உணவகங்களுக்குச் சென்று திடீர் சோதனையும் செய்தனர். அதில் 3 'முடியாது', என்று சொல்லிவிட்டனர். 5 இடங்களில் 'மறுபடியும் தொலைபேசுங்கள்',என்று சொல்லித் துண்டித்தனர். இரண்டு இடங்களில் மட்டுமே ரிஸெர்வேஷன் அளிக்க முன்வந்தனர்.

  நாளிதழ் 'த ஹௌஸ் ஆ·ப் சுடானீஸ் ·புட் அண்ட் கண்ட்ரி மன்ன' என்னும் உணவகத்தை அணுகியது. உணவகம் உடனே சக்கரநாற்காலியில் இருக்கும் நோயாளிகளையும் சேர்த்து எல்லோருக்கும் ரிஸெர்வேஷன் கொடுக்க முன்வந்தது.

  ஈரப்பதமும் வப்பமும் நிறைந்த சீதோஷணத்தில் வாழும் மக்களுக்கு வரக்கூடிய தொழுநோய் microbacteriumleprae என்னும் பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. இது சிகிச்சையளித்தால் கண்டிப்பாகக் குணமாகக் கூடியது தான். அதன்பிறகு தொற்றக்கூடியதல்ல. சிகிச்சை பெறாவிட்டால்தான் ஆபத்து. கால்,கை விரல் நுனிகளில் தொடங்கும் இந்த நோய் முற்றிலும் குணமாகாது என்றாலும் 90% குணமாகும். இதற்கு Hansen's disease என்ற
  பெயருமுண்டு. ஏனென்றால் இந்த நோயைத் தோற்றுவிக்கும் பாக்டீரியாவை 1873 ஆம் ஆண்டில்   G.A. Hansen என்பவர் கண்டுபிடித்தார்.

  28-11-04 நிலவரப்படி ஹோமின் நோயாளிகளோ விருந்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். " ஹோமிலிருப்பவர்கள் பெரும்பாலும் வருடத்தில் மூன்று அல்லது நான்கு முறை செந்தோசா, விலங்கியல் தோட்டம் போன்றவற்றிற்குச்சென்று வருகிறார்கள். ஆனால், நவீன உணவகங்களில் 'விருந்து' என்பது இவர்களுக்கு மிகமிக அரிது", என்கிறார் Singapore Leprosy Relief Association ஹோமின் எக்ஸெக்யூட்வ் ஆ·பீஸர்.

  சோங்க் தை ஓன் என்னும் முதியநோயாளி முன்பு திரு. சூ கூட்டிக்கொண்டு போன விருந்துக்குப் போயிருந்தாராம். சீனப்புத்தாண்டின் போது சைனாடௌண் வட்டாரத்தில் ஒரு உணவகத்தில் நடந்ததாம் விருந்து. "காரசாரமான உணவுதான். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விருந்தைப்பற்றியும் நாங்கள் அனுபவித்த களிப்பையும் தொடர்ந்து பல நாட்களுக்குப் பேசிப்பேசி மகிழ்ந்து கொண்டிருந்தோம்", என்கிறார் ஏழு வருடமாக ஹோமில் வசிக்கும் 70 வயதாகும் இவர்.

  சமீபகாலங்களில் சிங்கப்பூரின் 'சேவை'த் துறைகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் இவ்வேளையில் உணவகங்களின் மனோபாவங்களிலும் சிற்சில மாற்றங்கள் அவசியம் என்று இச்செய்தியின் மூலம் தெரிகிறது.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |