டிசம்பர் 08 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : இருமல்
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

coughபனியும் குளிருடன் கூடவே ஆரம்பித்துவிட்டது இருமல் சப்தமும். இருமும் நோயாளிகளுக்கு ஒரு வலி என்றால் அவர்கள் படும் அவஸ்தை கண்டு, விடாமல் வரும் சப்தம் கேட்டு உடன் வேலை செய்பவர்கள் படும் அவஸ்தை இன்னொருபுறம். தொற்று நோய் இருந்தால் கூட தெரியாது, ஆனால் இருமல் சப்தம் காட்டி கொடுத்து எட்ட போகும் அலுவலர், கடை சிப்பந்திகள், ஒரு மாதிரியாக பார்க்கும் உ ண  வ க விடுதி ஊழியர்கள் என்று இது சட்டென்று நீங்கினால் பரவாயில்லை என்று யார் என்ன சொன்னாலும் செய்து பார்க்க கூடிய மனம் உள்ளவர்களை இப்போது அதிகம் காணலாம்.

இருமல் தொடர்ந்து இருந்தால் அல்லது கீழ்க்காணும் அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

1  இருமி துப்பும் போது சளி மஞ்சள் அல்லது பிரவுன் நிறத்தில் இருந்தால்
2. இருமும் போது விசில் போல சப்தம் கேட்டால் (இழுப்பு)
3. எந்த வித உடற்பயிற்சியும் இண்றி எடை குறைந்தால்
4. தூங்கும் போது இரவு உடை வியர்வையில் நனைந்து போனால்
5. சுரம் அல்லது காய்ச்சல் இருந்தால் (101) F மேல் இருந்தால்
6. இருமும் போது இரத்தம் வெளிப்பட்டால்

இருமலை தவிர வேறு ஏதோ ஒரு சுவாச மண்டல நோய் இருப்பதாக பொருள். எனவே உடனே மருத்துவரை நாட வேண்டும். மேலே உள்ள காரணங்கள் இல்லை என்று பதில் உரைத்தால் கீழ்க்கண்ட ஏதோ ஒருகாரணம் உங்கள் இருமலுக்கு காரணம்.

புகை பிடித்தல் :  தொடர்ந்து புகை பிடிப்பவர் என்றாலோ, அல்லது புகை பிடிப்பவருடன் வசித்தாலோ தொடர்ந்து ஒரு இருமல் இருக்கும். இதற்கு Smoker’s bronchitis என்று பெயர்.
ஒவ்வாமை: ஒவ்வாமையினால் இருமல் வருமானால் தொண்டையில் பின்னால் ஏதோ திரவம் சுரப்பது போல இருக்கும். தூசி, சில வேதிப்பொருட்களின் திரவ துகள், செல்ல பிராணிகளின் உடலில் சுரக்கும் திரவம் அல்லது அவர்களின் fur, பாசி , சுத்தம் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் இவையும் இருமலை தோற்றுவிக்கும்.

ஆஸ்த்மா :  முன்னரே சொன்னபடி ஆச்த்மா இருமலை ஏற்படுத்தும். ஆஸ்த்மாவை கட்டு படுத்த மருந்து டஹ்ந்து, இருமல் குணமானால் அது ஆஸ்த்மாவினால் ஏற்பட்டது என்றறிந்து மருந்து தொடர்ந்து தருவார்கள்.

மருந்துகள் : சில மருந்துகள் இயல்பாகவே இருமலை தோற்றுவிக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தரும் ACE கட்டுப்படுத்தும் மருந்துகள், B ரிசப்ட்டார்களை கட்டுப்படுத்தும் சில மருந்துகள் இருமலை ஏற்படுத்தும். அமிலத்தன்மை: வயிற்றில் அதிக அமிலம் சுரந்து அது தொண்டைக்கு வந்ததல் அதுவும் இருமலை ஏற்படுத்தும். இதற்கு தலையை சற்று தூக்கிய நிலையில் வைத்திருந்தால் அல்லது அமிலம் சுரப்பதை தடுக்க மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகி விடும்.

இருமலுக்கு பொதுவான காரணங்கள் கிடையாது. தொண்டையில் மாட்டி கொண்ட ஒரு தூசியை வெளியேற்ற இருமல் ஒரு உபகாரணி. அதேபோல, உடலில் பிராணவாயுவின் தேவை அதிகமாகும் போது இருமுவதும், அதேபோல உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருளை உட்கொண்டால் அதை வெளியேற்றும் ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருமல் வருகிறது.

இதய துடிப்பை சீராக்க சில சமயம் இதயநோயாளிகளுக்கு இருமல் காரணமாகிறது.

இருமும் போது வெளியேறும் காற்றில் ஏதேனும் நுண்ணுயிரிகள் இருந்தால் அவை பரவி ஒரு நோய் பரவ இருமல் காரணமாக இருக்கிறது.

தொடர்ந்து இருமும் போது விலா எலும்புகள், மார்ப்பு கூட்டில் வலி திகம் இருக்கும் என்பதாலும், முன்பே சொன்னபடி கஷ்டத்தை அடுத்தவர் உணரமுடியும் என்பதாலும் இது ஒரு பரிதாபநிலைக்கு ஆளாகிறது.

இருமலுக்கு நிறைய மருந்துகள் மருத்துவர் உதவியின்றியே கிடைக்கும் என்றாலும் பொதுவாக எல்லா இருமல் மருந்துகளிலும் மூன்று வேதிப்பொருட்கள் இருக்கும்.

தூக்கத்தை வரவழைக்கும் ஒன்று, இருமலை தடுக்கும் ஒன்று, மற்றொன்று இருமலை அதிகரிக்கும் தன்மை உடையது (Expetorant). சளி இருந்து வரும் இருமலுக்கு  இந்த வேதிப்பொருள் அவசியம். இது இருமலை அதிகரித்து, நுரையீரல், மூச்சு குழாய்களில் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

சளியில்லாமல் ஒவ்வாமையால் வரும் இருமலுக்கு பல மருந்துகள் தந்தாலும் மூன்றுவாரங்களுக்கு மேல் போனால் மருத்துவர்கள் prednisone என்ற ஸ்டிராய்டு மருந்தை தருகின்றனர். இது வீரியம் அதிகம் உள்ளது என்றாலும் பலவித பக்க விளைவுகள் உடையது.

அடிக்கடி சூடான தண்ணீர் குடித்து கொண்டு வந்தால் தொண்டையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் எனவே இருமல் குறையும்.

குழந்தைகளுக்கு சளி அதிகம் இருந்தால், விக்ஸ் தடவி விட்டு, குளியலறையில் நல்ல நீராவி வர தண்ணீரை பிடித்து அருகே உட்கார்த்தி வைத்தால் சளி வெளியேறி இருமலும் நிற்கும்.

அதேபோல பாலில் மஞ்சள் பொடி சேர்த்து சற்றே சூடாக்கி குடிப்பதும் இய ற்கையாக உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்ல பழங்கள் உண்ணுவதும் குமம் தரும்.

அதேபோல சில மிட்டாய்கள் (விக்ச், செபகால்) நாவின் அடியில் அடக்கி கொள்வதும் ஈரப்பசையை அதிகரித்து இருமலை குறைக்கும்.

இருமலுக்கு சித்தரத்தை போன்ற  மூலிகைகள் கொண்டு கஷாயம் தயாரித்து குடிப்பதும் நல்ல மருந்து. ஆனாலும் 3 வாரங்களுக்கு மேல் இருமல் இருக்குமானால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்ளுங்கள். அதிகமாக குளிரில் நடுங்காமல் கூடுமானவரை பாதுகாத்து கொள்வது அவசியம். ஒரே கனத்த கம்பளி ஆடை அணிவதை காட்டிலும் இரண்டு மூன்று ஆடைகளாக அணிவதால் சூடான் காற்று இரண்டு சட்டைகளுக்கு இடையில் சுழன்று இன்னும் அதிக பாதுகாப்பு தரும். தேவைக்கேற்ற மாதிரி ஒரு ஆடையை எடுத்துவிடுவதும் சுலபமாகும்.

oooOooo
பத்மா அர்விந்த் அவர்களின் இதர படைப்புகள்.   மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |