டிசம்பர் 08 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : கறுத்தம்மா ஏன் என்னை .....
- சத்தி சக்திதாசன் [sathnel.sakthithasan@bt.com]
| Printable version | URL |

 


காற்றோடு கலந்து வந்த சுகந்தம்
  கனவோடு மிதந்து வந்த வசந்தம்
நேற்றோடு மறைந்து விட்ட ஏகாந்தம்
  நினைவுகளில் மலர்ந்த மகரந்தம்

கறுத்த விழியழகி என்னவளே கறுத்தம்மா
  களவாடிச் சென்றதென்ன என் கருத்தம்மா
பெருத்த சுமை கொடுத்தாய் நிறுத்தம்மா
  பொறுமை யிழந்தேன் ஏனுனக்கு செருக்கம்மா

தனிமை போதுமென்ற வாழ்க்கை நேற்றுவரை
  தவிப்புத் தணியவில்லை உந்நினைவு அடங்கும்வரை
பார்வையால் நீ கொடுத்த சுகம்வாழும் சாகும்வரை
  பார்க்குமிடமெல்லாம் நீதான் என்விழிகள் மூடும்வரை

கொடுமை இறைவன் படைப்பில் இந்தக் காதலடி
  கோதை உன்னால் என்னுடலில் கூதலடி
கண்டவுடன் நம்மிதயங்கள் கொண்டதொரு மோதலடி
  கன்னி நீ இல்லையென்றால் இன்பம் சாதலடி

 

oooOooo
சத்தி சக்திதாசன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |