டிசம்பர் 09 2004
தராசு
கார்ட்டூன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
சமையல்
கட்டுரை
கவிதை
கட்டுரை
சிறுவர் பகுதி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  தராசு : அயல்நாட்டு தூதரகங்களின் ஆடம்பரச் செலவு
  - மீனா
  | Printable version |

  வெளிநாடுகளில் இருக்கும் இந்தியத் தூதர்களின் வீடுகளில் தேவைக்கு அதிகமான அளவு ஆடம்பரச் செலவு செய்துவருவதற்கு வெளியுறவுத் துறைக்கு வி.கே.மல்கோத்ரா தலைமையிலான பார்லிமெண்டு குழு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசு தானே செலவு செய்கிறது என்ற மெத்தனமான எண்ணத்தில் தூதரக அதிகாரிகள் தங்கள் மனம் போன போக்கில் செலவு செய்துவருவதை வன்மையாக கண்டித்துள்ள இக்குழு, இனிமேல் இப்படிப்பட்ட தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து நிதிக்கட்டுப்பாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டிப்புடன் கடைபிடிக்கவேண்டும் என்று இக்குழு பரிந்துரை செய்துள்ளது வரவேற்கத் தக்க ஒன்றாகும்.

  மக்களின் வரிப்பணம் இப்படி அநியாயமாகச் செலவு செய்யப்படுவதை எதிர்த்து இவர்கள் குரல் கொடுத்தது நல்ல விஷயம் என்றாலும் உள்ளூரில் நடக்கும் அனாவசியச் செலவுகளை யார் எடுத்துச் சொல்லப்போகிறார்கள்? பாராளுமன்றத்திற்குச் செல்லும் ஒவ்வொரு எம்.பி.யும் ஏகப்பட்ட சலுகைகளைப் பெறுகிறார்கள். இலவச விமானப் பயணம், தொலைபேசி வசதி, வீட்டு வாடகை, மாதச் சம்பளம், பயணப்படி என்று பலவிதங்களில் நமது எம்.பிக்கள் சுகத்தை அனுபவித்து வருகிறார்கள். இத்தனைக்கும் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பிக்களில் பலரும் கோடீஸ்வரர்கள். ஒருநாள் நாடாளுமன்றம் நடக்க ஆகும் செலவுகளே பலகோடி ரூபாய் என்று சமீபத்தில் ஒரு பத்திரிக்கை கணக்கு காட்டியிருந்தது. இந்தச் செலவுகள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் செய்யப்படுகின்றன.

  ஆனால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பிக்கள், நாடாளுமன்றத்தில் செய்யும் வேலைகளைத் தொலைக்காட்சியில் பார்த்து உள்ளம் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் வரி கட்டிய நமது அப்பாவி ஜனங்கள். உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை முடக்குவதைத் தவிர எதிர்கட்சி வரிசையில் உட்கார்ந்துகொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் வேறு எதுவும் உருப்படியாகச் செய்வதில்லை ( எந்தக் கட்சி எதிர்கட்சியாக இருந்தாலும் இது ஒன்றை மட்டும் மாறாமல் செய்துவிடுவார்கள்). டெல்லி சென்று கொட்டமடிக்கும் எம்.பிக்களும் அவர்களது படை பரிவாரங்களும் பார்லிமெண்ட் உணவகத்தில் மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு, கதை அடிப்பது ஒன்றையே நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் பிரதான வேலையாக பாவிக்கிறார்கள். சிலபல பிரபலத் தலைவர்களும், சினிமா மற்றும் தொழில் துறை பிரமுகர்களும் நாடாளுமன்றத்திற்குச் செல்வதையே தங்கள் சொந்த  வேலையைக் காரணம் காட்டி தவிர்த்து வருகிறார்கள். ஓட்டுப் போட்ட மக்களுக்கு இவர்கள் என்ன நன்மைச் செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி இங்கே எழவே கூடாது.

  வெளிநாட்டுத் தூதரகங்களைத் திருத்துவதற்கு முன்பாக கொஞ்சம் உள்நாட்டு நாடாளுமன்ற நிலைமையையும் யாராவது கவனித்தால் புண்ணியமாய் போகும். ஒவ்வொரு எம்.பி.களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளில் பலவற்றைக் குறைக்க அரசு முன்வரவேண்டும். ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் நாடாளுமன்றம் குறைந்தபட்சமாக இத்தனை மணி நேரமாவது அமைதியாக, அனைத்துக் கட்சிகளின் பூரண ஒத்துழைப்போடு நடக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற முன்வரவேண்டும். சட்டத்தை மதித்து நடக்க அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும். தூதரகங்கங்களில் செலவுகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் பாதியாவது உள்நாட்டில் மத்திய அமைச்சர்களுக்கு ஆகும் செலவில் குறைக்க அரசு ஆவன செய்யவேண்டும்.

  மேற்கூறிய விஷயங்கள் நடக்க முடியாத விஷயமல்ல. ஆனால் இதை நடத்திக் காட்ட எந்த அரசு முன்வரப்போகிறது என்பதுதான் கேள்வி. நம் கேள்விக்கு எப்போது யாரால் பதில் கிடைக்கப்போகிறது??

   

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |