டிசம்பர் 09 2004
தராசு
கார்ட்டூன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
சமையல்
கட்டுரை
கவிதை
கட்டுரை
சிறுவர் பகுதி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : இந்து- முஸ்லீம் பிரச்னைகள் - 1
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  இந்தியா எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகளாக மக்கட்தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, வறுமை என்று நிறைய சங்கதிகளை சொன்னாலும் வெளியே சொல்லிக் கொள்ளமுடியாத பெரிய அவஸ்தையான பிரச்னையாக இந்து சமூகத்திற்கும் முஸ்லீம் சமூகத்திற்கும் இடையே இப்போதும் எழுந்து வரும் பிரச்னைகளை சொல்லலாம். இந்தியா பிளவுபட்டு பாகிஸ்தான் உருவானதுதான் இரு சமூகத்திற்கும் உள்ள இடைவெளியை பட்டவர்த்தனமாக்கிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை தொடரும் இப்பிரச்னையை காந்திஜி போன்றவர்களாலேயே தீர்க்க முடியாமைக்கு காரணம் எல்லோரும் உணர்வுப்பூர்வமாக பிரச்னையை அணுகுமுறைதான்.

  'இந்து முஸ்லீம் பிரச்னையில் என் தோல்வியை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இன்று நான் சொல்வதெல்லாம் அடர்ந்த காட்டில் நின்றுகொண்டு கூக்குரலிடுவதுபோல்தான் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். ஆனாலும், நான் சொல்வது ஒன்றுதான் சாத்தியமுள்ள தீர்வு என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சில பேர் வன்முறையில் இறங்கியதன் காரணத்தால் ஒட்டுமொத்த சமூகத்தையே கண்டித்து வெறுத்து ஒதுக்கிவிடவேண்டும் என்கிற கருத்தை நான் ஒப்புக்கொள்ளவே முடியாது. இன்று அகிம்சை ஒன்றுக்கும் உதவாதது, நடக்காத காரியம் என்றெல்லாம் விமர்சிக்கப்படுகிறது. ஏளனம் செய்யப்படுகிறது'  (ஹரிஜன், 6.10.1946)

  காந்திஜி என்னதான் இரு தரப்பினருக்கும் பொதுவான நபராக நடந்து கொண்டாலும் இந்த பிரச்னையை பொறுத்த வரையில் அவரது வாய்ஸ் எடுபடாமல் போனதற்கு காரணம் இரு தரப்பினருமே இப்பிரச்னையில் அவரை ஒதுக்கி வைத்ததுதான்.

  பாகிஸ்தான் உருவாக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முஸ்லீம் லீக் களத்திலிறங்கியதுதான் பிரச்னையை ஒரு புது திசைக்கு எடுத்துச் சென்றது. காந்திஜியால் முஸ்லீம் லீகிற்கும், முஸ்லீம்களுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடிந்தது. இந்திய மக்களில் அப்போதே நான்கில் ஒரு பங்காக இருந்த முஸ்லீம்கள் தங்களுக்கென ஒரு நாடு இல்லாவிட்டால் ஜீவித்திருக்கவே முடியாது என்ற முஸ்லீம் லீகின் பிரச்சாரம் உச்சத்திலிருந்த நேரம். காந்திஜி எழுதினார்...

  'பாகிஸ்தான் உருவானால் இஸ்லாத்திற்கு நன்மை கிடைக்கும் என்பது உண்மையானால் அத்தகைய கோரிக்கைக்கு உடன்பட்டுவிட நான் தயங்கவே மாட்டேன். ஆனால் முஸ்லீம் லீக் கேட்கும் வகையிலான பாகிஸ்தான் இஸ்லாமுக்கே விரோமானது என்பதை நான் நிச்சயமாகஅறிகிறேன். எனவே, அது பாவமானது என்று செல்வதற்கு நான் தயங்கவில்லை.'
   
  இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் காந்திஜியை குறை சொல்வது இருபதுகளிலேயே ஆரம்பித்துவிட்டது.  இருபதுகளில்தான் இந்து முஸ்லீம் பிரச்னைகள் பெரிய அளவில் எழுந்தன என்றும் சொல்லலாம். 1921 ஆகஸ்டு மாதம் 19ஆம் தேதி கேரளாவில் மாப்பிள்ளைமார் (முஸ்லீம்கள்) கலகம் ஏற்பட்டது. காரணம் கிலாபத் பிரச்னை! மாப்பிள்ளைமார் கலகம் பற்றி பார்ப்பதற்கு முன்னர் கிலாபத் பிரச்னை பற்றி கொஞ்சம் விரிவாக பார்த்துவிடலாம்.

  முதல் உலகப்போர் சமயத்தில் அதாவது 1914 - 1918 ஆண்டுகளில் நடந்த யுத்தத்தில் இங்கிலாந்துக்கும் துருக்கிக்கும் போர் மூண்டது. இந்தியாவோ பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காலனி நாடு. துருக்கியோ முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடு. நடந்த போரில் எந்த தரப்பை ஆதரிப்பது என்பது பற்றி இந்தியாவில் முஸ்லீம்களுக்கிடையே பயங்கர குழப்பம். அப்போது துருக்கியை ஆண்டு கொண்டிருந்த சுல்தான் கலிபா மீது உலகம் முழுவதும் மஸ்லீம்கள் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய முஸ்லீம்களை அமைதிப்படுத்துவதற்காக சமாதான உடன்படிக்கை என்ற பெயரில் ஒரு திட்டத்தை தயார் செய்தது. அதிலிருந்த முக்கியமான அம்சம், இஸ்லாமிய ஸ்தலங்கள் முஸ்லீம்களின் நேரடி நிர்வாகத்தின்  கீழ் வைக்கப்படும். நிர்வாகத்தில் அரசு எந்த நேரத்திலும் தலையிடாது என்பதுதான்.

  கிட்டதட்ட முஸ்லீம் மத ஸ்தலங்களுக்கு சுதந்திரம் கொடுத்த அரசின் சமாதான உடன்படிக்கை, இந்தியா முஸ்லீம்களை பெரிதும் திருப்திப்படுத்தியது. அதனால் இங்கிலாந்து - துருக்கி போரில் பிரிட்டிஷாரையே ஆதரிப்பது என்கிற முடிவுக்கு அவர்களும் வந்துவிட்டார்கள். இந்திய வைஸ்ராயும், அப்போது பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்த லாயிட்ஸ் ஜார்ஜ் போன்றவர்கள் கொடுத்த உறுதிமொழிகளின் அடிப்படையிலேயே முஸ்லீம்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். போரின் போது அரேபியா, மெக்கா, மதீனா, ஜெட்டா முதலான இடங்களிலிருக்கும் புனித ஸ்தலங்கள் பாதிக்கப்பட மாட்டாது என்ற பிரிட்டிஷாரின் உறுதிமொழியும் இந்திய முஸ்லீம்களை கவர்ந்துவிட்டது. இதனால் போரின்போது இந்திய முஸ்லீம்களின் பரிபூரண ஒத்துழைப்பு
  பிரிட்டிஷாருக்கு கிடைத்தது. இதெல்லாமே யுத்தம் ஒரு முடிவுக்கு வரும் வரையில்தான். யுத்தம் முடிந்து துருக்கியில் பிரிட்டிஷார்களின் கை ஓங்கியதும் தங்களுக்கே உரிய வேலையை காட்ட ஆரம்பித்தனர்.

  யுத்தம் முடிந்த பின்னர் தான் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாதது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு கடுமையான நிபந்தனைளையும் விதித்தது 'பெரியண்ணன்' பிரிட்டன். ஆசியாவிலிருந்து துருக்கியின் மிச்சம் மீதி காலனி பகுதிகளையெல்லாம் பிரிட்டனும் பிரான்சும் பங்கு போட்டுக்கொண்டன. இதைக் கண்டு இந்திய முஸ்லீம்கள் வெகுண்டு எழுந்தனர். இந்தியாவில் எங்கு பார்த்தாலும் முஸ்லீம்கள் அமைப்பின் சார்பில் போராட்டம், ஆர்ப்பாட்டம்தான். போராட்டம் ஆரம்பித்த சில நாட்களிலேயே முஸ்லீம்களுக்கு ஆதரவாக இந்துக்களும் களத்தில் குதித்தனர். அதுதான் கொஞ்சம் பிரச்னையாகிவிட்டது!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |