டிசம்பர் 09 2004
தராசு
கார்ட்டூன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
சமையல்
கட்டுரை
கவிதை
கட்டுரை
சிறுவர் பகுதி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : சோனியா ஏன் பிரதமர் பதவியை ஏற்கவில்லை ?
  - திருமலை ராஜன்
  | Printable version |

  மே 16ம் தேதி வரை சோனியாதான் பிரதமர் என்று தண்டோரா போட்டு அறிவிக்காத குறையாகக் கொண்டாடியது காங்கிரஸ். ஆனால் மே 17ம்தேதி, தான் பிரதமர் பதவியேற்கப் போவதில்லை என்று அறிவித்து விட்டு மாபெரும் தியாகி பட்டம் பெற்று விடுகிறார் சோனியா. இடையில் நடந்தது என்ன? விளக்குகிறார் சு.சுவாமி.
   
  மே 15ம் தேதி ஒரு முக்கியமான கடிதத்தை சு.சுவாமி குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அனுப்புகிறார். கடிதத்தின் நகலை கீழே காணலாம். அதில் அவர் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார். சோனியா, இந்தியாவில் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, பதிவு செய்து கொண்டு குடியிரிமை பெற்றவர். இந்தியாவில் இந்தியப் பெற்றோர்களுக்குப் பிறந்த இயற்கையாகவே குடியியுரிமை பெற்றவர் அல்லர். அவ்வாறு விண்ணப்பித்து குடியுரிமை பெறுபவர்களுக்கு, இந்தியாவின் உள்துறை அமைச்சகம், இந்தியக் குடியுரிமைச் சட்டம் (1955) செக்ஷன் 5ன் படி  ஒரு சில நிபந்தனைகள் விதிக்கின்றது. அந்த நிபந்தனைகளின் கீழ் வின்ணபித்துக் குடியுரிமை பெற முயலும் ஒரு வெளிநாட்டவருக்கு, அவர் குடிமகனாக இருக்கும் நாட்டில் ஒரு இந்தியருக்கு என்ன உரிமைகள் உண்டோ, அதே உரிமைகள் மட்டுமே, இந்தியாவில் அந்த குடியேறிக்கும் அளிக்கப்படும்.

  அமெரிக்காவிலும், இத்தாலியிலும், இன்னும் பல தேசங்களிலும், அந்தந்த நாட்டில் பிறந்தவர்கள் மட்டுமே அந்நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ இன்னும் பல உயர் பதவிகளுக்கோ செல்ல முடியும். அமெரிக்காவிலாவது அமெரிக்காவில் பிறக்காமல் குடியேறி குடிமக்களாக மாறியவர்கள் கவர்னர் பதவியிலிருந்து, செனட்டர், செயலாளர் பதவிகள் வரை வகிக்க முடியும், கலி·போரினியா மாநிலத்தின் தற்போதைய கவர்னராகிய ஆர்னால்ட் ஸ்வாஷ்னேகர் ஆஸ்த்திரியா நாட்டைச் சேர்ந்தவர். பெரும்பாலான இந்தியர்கள் போலவே அவரும் விசாவில் முதலில் வந்து பின்னர் குடியுரிமை பெற்றவர். அவர் கவர்னராகலாம் ஆனால் ஜனாதிபதியாக முடியாது. இத்தாலியில் நிலமை இன்னும் மோசம், இத்தாலியில் பிறக்காதவர்கள், ஒரு சாதாராண வார்டு கவுன்சிலர் பதவிக்குக் கூட போட்டியிட முடியாது. இந்தியாவிலிருந்து சென்று இத்தாலியக் குடியுரிமை பெற்ற ஒரு வங்காளப் பெண்மனி, அவ்வாறு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட முயன்ற பொழுது, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது. ஒரு நாட்டிலிருந்து சென்று இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற்று வேலையோ, வியாபாரமோ செய்வது வேறு, அந்த நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைய முயற்சி செய்வது வேறு.

  ஆக, ஒர் இந்தியர் இத்தாலியக் குடியுரிமை பெற்ற போதிலும், அவருக்கு ஒரு இத்தாலியருக்குண்டான அனைத்து உரிமைகளும் இத்தாலியில் வழங்கப் படுவது இல்லை. அது போல ஒரு இத்தாலியர் இந்திய பிரஜையாகும் பொழுது, அவர் நாட்டில் ஒரு இந்தியருக்கு என்ன உரிமைகள் வழங்கப்படுமோ அந்த உரிமைகள் மட்டுமே வழங்கப் படும் என்று ப்ரஸ்பர உரிமை வழங்கும் சட்டம் தெளிபாகக் கூறுகிறது. அந்தச் சட்டத்தின் படி, சோனியாவுக்கு இந்தியாவில் பிரதமர் பதவி வகிக்கும் உரிமை வழங்கப் படக்கூடாது என்பது சு.சுவாமி ஜனாதிபதிக்கு மே 15 அன்று கடிதம் எழுதியிருக்கிறார். கடிதத்தைப் படித்த குடியரசுத் தலைவரும், மே 17 அன்று சுவாமியை தன்னை வந்து சந்தித்து சுவாமியின் நிலையை நேரில் விளக்குமாறு கோருகிறார். அதன்படி, மே 17 அன்று 12.45 மணிக்கு, சுவாமி குடியரசுத்தலைவரைச் சந்தித்து, சோனியா பிரதமர் பதவியேற்பதில் உள்ள சட்டச் சிக்கலை விளக்குகிறார். சோனியா பிரதமர் பதவியேற்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும், அவ்வாறு அவரை பிரதமர் பதவியேற்குமாறு குடியரசுத் தலைவர் அழைக்கும் பட்சத்தில், தான் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்குமெனவும் குடியரசுத்தலைவரிடம் தெளிவாக சுவாமி விளக்கியிருக்கிறார். இது சம்பந்தமாக 1962ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பையும் சுட்டிக் காட்டியுள்ளார். அந்தத் தீர்ப்பின்படி 1955 குடியுரிமைச் சட்டம் செக்ஷன் 5 சட்டப்படி செல்லும் எனவும், அது குடியுரிமை பெறுபவர்களைக் கட்டுப் படுத்தும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பான்மை இருப்பதனால் மட்டுமே ஒருவரை பிரதமராகவோ, முதல்வராகவோ அழைப்பதற்கு ஜனாதிபதிக்கோ, ஆளுனருக்கோ உரிமை இல்லை என்னும் தீர்ப்பையும் சுவாமி எடுத்து வைத்துள்ளார். டான்ஸி வழக்கில், கீழ்க்கோர்ட்டில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்ட நிலையில், ஜெயலலிதாவை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைத்த முடிவு செல்லாது என்று இதே சுவாமி ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கின் தீர்ப்பில், பெரும்பான்மை பலம் இருந்த போதிலும், குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப் பட்ட ஒருவரை பதவியேற்க அனுமதித்தது தவறு என்று தீர்ப்பு வழங்கப் பட்டு ஜெயலலிதா பதவி விலக நேர்ந்த விபரத்தையும் குடியரசுத் தலைவரிடம் கூறி, அதே தீர்ப்பின்படி, சோனியாவுக்கு பெரும்பான்மை இருக்கும் போதிலும் கூட, குடியுரிமை சட்டத்தில் உள்ள நிபந்தனைகளின்படி அவரை பதவியேற்க அழைப்பது முறையானதாக இருக்காது என்றும் வாதாடியிருக்கிறார்.

  சுவாமியின் விவாதங்களைக் கேட்டுக் கொண்ட குடியரசுத்தலைவர், சோனியாவையும், மன்மோகன் சிங்கையும் பதவியேற்பது குறித்து விவாதிப்பதற்காக, சுவாமியை சந்தித்து முடிந்த அன்று மதியமே அழைக்கிறார். இதுவே காங்கிரஸ் கட்சிக்காரர்களால் பதவியேற்க அழைக்கப் பட்டதாகத் திரிக்கப் படுகிறது. உண்மையில் சோனியா பதவியேற்பதில் உள்ள சட்டச் சிக்கல்களைப் பற்றி பேசுவதற்காக மட்டுமே குடியரசுத்தலைவர் அழைத்துள்ளார்.  அப்பொழுது சோனியாவிடம், சுவாமியும், பிறரும் எடுத்து வைத்துள்ள சட்ட சிக்கல்களை எடுத்து விளக்கியதாக கூறப்படுகிறது. அவ்வாறு சோனியாவை பிரதமராக ஏற்க அழைக்கும் படி தன்னை நிர்ப்பந்திக்கும் பட்சத்தில், தான் உச்ச நீதிமன்ரத்திடம் சுவாமி குறிப்பிட்ட சட்ட சிக்கல் குறித்து விளக்கம் கேட்க வேண்டி வரும் எனவும், மேலும் சுவாமி போன்றவர்கள் உச்ச நீதிமன்றத்தை குடியுரிமைச் சட்டத்தைக் காட்டி அணுகும் பட்சத்தில், சோனியா பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்பதையும் எடுத்துக் கூறி அறிவுரைத்ததாக நம்பப் படுகிறது. அதன் பின்னால்தான் சோனியா, பதவி ஏற்பதில்லை என்ற முடிவு எடுக்கப் படுகிறது. சுவாமி போன்றோர் கிளப்பிய சட்டச் சிக்கல்களின்பால் மட்டுமே, சோனியா பதவியேற்க இயலாமல் போனதன்றி, அவர் தியாக மனப்பான்மையி எதையும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதை சுவாமி தெளிவுபட விள்க்கினார்.

  குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் எடுத்த அந்த உன்னதமான முடிவிற்காக  தன்மானம் உள்ள ஒவ்வொரு இந்தியனும் அவருக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாக சுவாமி கூறினார்.

  சுவாமி, எடுத்து வைத்த அடுத்த குற்றசாட்டு, சோனியா எப்படி தனது கல்வித் தகுதியை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கும் பொழுது போலியாகப் படிப்பைக் கூறி ஏமாற்றியுள்ளார் என்பதாகும். அதற்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்திலிருந்தே தகுந்த அறிவிப்பையும் பெற்று ஆதாரமாக வைத்து வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அந்தக் குற்றசாட்டுக் குறித்தும் அது தொடர்பாக அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் குறித்தும் அடுத்த வாரம் பார்க்கலாம்.

  ஜனாதிபதிக்கு சுவாமி எழுதிய கடிதம் (pdf கோப்பாக) right click save target as

  (இதைப் படிக்க Adobe Acrobat தேவை)

  (தொடரும்.......)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |