Tamiloviam
டிசம்பர் 13 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : மனிதாபிமானம் எங்கே போனது?
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

வெளிநாடுகளில் எல்லாம் எப்படியோ தெரியாது ஆனால் இந்தியாவில் கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் நினைப்பது மருத்துவர்களை.  ஆனால் சமீபகாலமாக மருத்துவத்துறையின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மாறாக மனவருத்தத்தை மட்டுமே தந்துவருகிறது.

ஐதராபாத் நீலோபர் அரசு மகப்பேறு மருத்துவ மனையில் அடிக்கடி குழந்தைகள் மரணிப்பது வழக்கமாம். இதைக் கண்டிக்கும்விதமாக பழைய ஐதராபாத் தொகுதி எம்.எல்.ஏ. அப்சர்கான் அந்த மருத்துவமனைக்குப்போய் அதைத் தட்டிக்கேட்க அப்போது அவருக்கும், டாக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் வலுத்திருக்கிறது. உடனே இளம் டாக்டர் ஒருவரை எம்.எல்.ஏ.வும், அவருடன் வந்த மஜ்லிஸ் கட்சித் தொண்டர்களும் தாக்கி விட்டதாகக் கூறி மருத்துவர்கள் உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளனர். இந்த உண்ணாவிரதம் தொடங்கிய மூன்று நாட்களில் அங்கு மருத்துவகவனிப்பு இல்லாமல் பதினைந்து குழந்தைகள் இறந்துள்ளன.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற அங்கு சென்ற விஜயசாந்தியின் கண்முன்னாலேயே இரண்டு குழந்தைகள் இறந்துவிட - வெகுண்ட அவர் மருத்துவமனை கண்காணிப்பாளர் நரசிம்மராவை விசாரித்த போத் நரசிம்மராவை விஜயசாந்தி அடித்துவிட்டார் என்ற வதந்தி கிளம்பியிருக்கிறது. இதனால் இன்னும் தீவிரமாகியிருக்கிறது அந்த மருத்துவர்களின் போராட்டம். ஆந்திர முதல்வரே அழைத்துப் பேசியும் பிரச்சனை ஓயவில்லை. தினம் தினம் குழந்தைகள் இறக்கும் அவலம் அங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் நாம்? மனிதாபிமானம் உண்மையில் மறித்துவிட்டதா? பதினைந்து குழந்தைகள் கண்முன்னாலேயே - தாங்கள் வைத்தியம் செய்யாததால் இறப்பதை பார்த்துக்கொண்டிருக்க அந்த மருத்துவர்களுக்கு எப்படி மனம் வந்தது? சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ. உண்மையிலேயே அடித்திருந்தால் அதை அரசின் கவனத்துக்குக் கொண்டு போக வேண்டும். அதை விட்டுவிட்டு உயிரைக் காக்க வேண்டிய டாக்டர்கள் உப்பு சப்பில்லாத பிரச்சனைக்காக இப்படிப்பட்ட போராட்டம் நடத்தி பல குழந்தைகள் இறக்கக் காரணமாகியிருக்கிறார்கள்.

பிரச்சனைத் தீர சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ மன்னிப்புக் கேட்டால் உண்ணாவிரதத்தைக் கைவிடுவோம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். சரி.. சம்மந்தப்பட்டவர் மன்னிப்புக்கேட்டால் இவர்கள் போராட்டத்தைக் கைவிடலாம். ஆனால் இவர்கள் போராட்டத்தால் இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு யார் என்ன சொல்வது?

அமெரிக்கா உள்ளிட்ட மேல் நாடுகளில் மெடிக்கல் மால்பிராக்டீஸ் என்னும் மருத்துவர்களின் கவனக்குறைவு - கவனிக்காத குறைவு சட்டம் மிகக் கடுமையாக அமலாக்கப்பட்டிருக்கிறது. இம்மாதிரியான நிகழ்வுகள் நடப்பது மிக அரிது. மீறி நடந்தால் சம்மந்தப்பட்ட மருத்துவரின் கதி அதோகதியாகிவிடும். அந்த அளவிற்கு சட்டம் இரும்புக்கரம் கொண்டு அந்நாட்டு மக்களைக் காக்கிறது. ஆனால் 110 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டிலோ 10ஆம் வகுப்பு மாணவன் சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்யும் கொடுமைதான் நடக்கிறது.

அமெரிக்கா அளவிற்கு இல்லாவிட்டாலும் ஓரளவிற்காவது அத்தகைய சட்டம் நம் நாட்டிலும் கொண்டுவரப்படவேண்டும். இயற்றப்பட்ட சட்டம் மிகக்கடுமையாக பின்பற்றப்படவேண்டும். சம்மந்தப்பட்ட மாநில அரசு மருத்துவர்கள் செய்யும் போராட்டங்களில் உள்ள நியாய அநியாயாங்களை உடனே உணர்ந்து அதை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தால் இனி யாரும் உயிரை இழக்கும் அவலத்திற்கு ஆட்படக்கூடாது என்பதே நமது விருப்பம். மனித உயிரின் மகத்துவத்தை மருத்துவர்களும் ஆள்வோரும் எப்போது உணர்வார்கள் ?

| |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |