டிசம்பர் 14 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : கோசணி (சமையல் ரெசிபி)
- கோ. இராகவன் [gragavan@gmail.com]
| | Printable version | URL |

தலைப்பைப் பார்த்து பயப்பட இது மனைவியின் சேலையல்ல. நல்லதொரு உணவு. கோழியும் பூசணியும் கலந்த உணவு. சற்றே மாறுபட்ட உணவு வகை. சோற்றுக்கும் நன்றாக இருக்கும். சப்பாத்தி, பூரி, இட்டிலி, தோசை, ஆப்பம் முதலான சிற்றுண்டிகளுக்கும் நன்றாக இருக்கும். செய்து பாருங்கள். இது முழுக்க முழுக்க என்னுடைய மண்டையில் உதித்தது. செய்தும் உண்டது. நண்பர்களிடம் பாராட்டும் வாங்கியது.

தேவையான பொருட்கள்

கோழி - துண்டாக்கிக் கழுவியது

பூசணிக்காய் - கோழியின் எடைக்கு ஐந்திற்கு ஒரு பாகம். அரைக்கிலோ கோழிக்கு 100 கிராம் பூசணிக்காய்.
பூசணிக்காய் என்றால் மஞ்சள் பூசணி. சிலர் தடியங்காயை வெள்ளைப் பூசணி என்று கூறுவார்கள். தமிழில் பூசணி என்றாலே மஞ்சள் பூசணிதான்.

தயிர் - தேவையான அளவு

குழம்புப் பொடி - தேவையான அளவு (குழம்புப் பொடி இல்லாதவர்கள் மிளகாய்ப் பொடியையும் கொத்துமல்லிப் பொடியையும் கலந்து பயன்படுத்தலாம்).

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - தேவையான அளவு

தக்காளி - நன்கு பழுத்தது

இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு

நல்லெண்ணெய் அல்லது ரீஃபைன்டு எண்ணெய் - தேவையான அளவு

கொத்துமல்லித் தழை - சிறிதாக நறுக்கியது (இறுதியில் தூவ)

கரம் மசாலா - சிறிதளவு


செய்முறை

1. கோழியைத் துண்டுகளாக்கிக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.

2. பூசணிக்காயை விதை நீக்கி துருவிக்கொள்ளவும். (மிகவும் பழுத்த பூசணி துருவலுக்காகாது. அரைப் பழுத்த பதத்தில் வாங்கவும்).

3. துருவிய பூசணிக்காயை கோழித் துண்டுகளோடு சேர்த்து கலக்கவும். தயிரையும் அதோடு கொட்டி கலக்கவும். இந்தக் கலவையை அரை மணி முதல் முக்கால் மணி நேரம் ஊற விடவும்.

4. வாணலியில் எண்ணெய் காய வைத்து, கடுகு உளுந்தப் பருப்பு போடவும். வெடித்தவுடன் இஞ்சி பூண்டு விழுதினை போட்டு வதக்கவும்.

5. வாடை போனதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

6. தக்காளி லேசாக வதங்கியதும், குழம்புப் பொடியைச் சேர்க்கவும். (வழக்கத்தை விட கூடவே சேர்த்துக் கொள்ளலாம்.). கரம் மசாலாவையும் உப்பையும் சேர்த்து கலக்கவும்.

7. இந்தக்கலவையில் ஊறவைத்த கலவையைச் சேர்த்து வேகவிடவும்.

8. மிதமான தீயில் கோழி நன்றாக வேகும் வரை வைத்திருக்கவும். (குக்கரில் இதைச் செய்ய வேண்டாம். முடிந்தவரை வாணலியைப் பயன் படுத்தவும்.)

9. கோழி நன்றாக வெந்ததும், கொத்துமல்லி தழை தூவி பரிமாறவும்.

செய்ய மிகவும் எளிது. சுவையும் மிக புதிது. அசைவர்களை மிகவும் கவரும். இது செய்து பார்த்து பிடித்திருந்தால் சொல்லுங்கள்.

| |
oooOooo
                         
 
கோ. இராகவன் அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |