டிசம்பர் 14 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : பிரபஞ்சத்தின் தோற்றமும், பெருவெடிப்பும் - 1
- சீனு
| | Printable version | URL |

அறிவியலில் இறங்கினால் நாம் நாத்திகன் ஆகிவிடுவோம். ஆழ்ந்து இறங்கினால் மீண்டும் ஆத்திகன் ஆகிவிடுவோம்.

பிரபஞ்சத்தின் தோற்றமும் பெரு வெடிப்பும் ஒரு விஞ்ஞானி சொன்னது "அறிவியலில் இறங்கினால் நாம் நாத்திகன் ஆகிவிடுவோம். ஆழ்ந்து இறங்கினால் மீண்டும் ஆத்திகன் ஆகிவிடுவோம்."

UniverseCreationஅண்டத்தின் தோற்றம் பற்றி காலம் காலமாக பலவாறு ஊகிக்கப்பட்டு வந்திருக்கிறாது. இந்த ஊகம் பல நிலைகளைக் கடந்து வந்துள்ளது. இந்த நம்பிக்கை பெரும்பாலும் மதம் சம்பந்தப்பட்டதாகவும் இருந்திருக்கிறது. 'பெரு வெடிப்பு' - ஆங்கிலத்தில் 'ஃபிக் பேங்' (Big Bang) - என்பது ஒரு சித்தாந்தம் (அ) கோட்பாடு. தமிழ்ல 'தியரி'. இது இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றின ஒரு பரவலாக  ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு. ஆதியில் இந்த அண்டம் எப்படி உருவாகியிருக்கலாம் என்ற ஒரு கணிப்பே இந்த பெரு வெடிப்பு என்னும் கோட்பாடு. முக்கியமான நிலைகள் இரண்டு.

1) முற்கால ஐதிகப்படியும், பின் வந்த யூத, கிருத்துவ, இஸ்லாமிய மதப்படியும் இந்த அண்டம் வெகு சில காலத்துக்கு முன் தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று
அனுமானிக்கப்படடுள்ளது. உதா, கி.மு.4000). அண்டத்தின் தோற்றம் குறித்த கருத்துக்கள் சண்டையிலும் முடிந்திருக்கிறது.

2) இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு சிலர் இந்த  அண்டத்திற்கு தொடக்கமே இல்லை என்று கூறியுள்ளனர். கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் உட்பட பலர், இந்த அண்டத்திற்கு தொடக்க காலம் குறிக்கப்படுவதை விரும்பாதவர்கள்.  இவ்வாறு குறிப்பது தெய்வீகத்துக்கான குருக்கீடாகவும் நினைத்தனர். அவர்கள் கூற்றுப்படி, "இந்த அண்டம் 'இருந்தது', அதாவது 'உருவாக்கப்படவில்லை'. அதே போல இந்த அண்டம்  முடிவில்லாமல் என்றும் இருக்கும்." என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்கு, இயற்கை சீற்றங்கள் மனித இனத்தை மீண்டும் ஆரம்ப புள்ளிக்கே கொண்டு செல்வதை வலுசேர்க்கும்  விதமாக பதில் கொடுத்தனர். மேற்படியான இரண்டு வெவ்வேறு கருத்துகளும் கூறுவது ஒன்றைத்தான். அந்த ஒன்று, இந்த அண்டம் எப்பொழுதும் மாறாது இருக்கிறது என்பது. இரண்டும்  வெவ்வேறு எதிர்மறை கருத்துக்கள் தானே. பின் எப்படி இரண்டும் ஒரே கருத்தை பிரதிபலிக்கும்? ...க்கும். கொஞ்சம் அவுட் ஆப் சிலபஸ்ஸில் போகலாம். ஒரு சிறு உதாரணம் கொடுக்கலாம்.

ஒரு கம்பியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கம்பியின் இரண்டு முனைகளும் இரு வேறு திசைகளை நோக்கி இருந்தாலும், அந்த இரண்டு முனைகளையும் இணைக்கும் பொழுது வட்டம் ஒன்று  உருவாகும். அந்த வட்டத்தில் இரு கருத்துக்களும் அடங்கும். இன்னும் சிம்பிளா சொல்லனும்னா, கடவுளே இல்லை என்பதும், கடவுள் எங்கும் இருக்கிறான் என்பதும் ஒன்று தான். ஆக,  இந்த அண்டம் என்றும் மாறாமல் இருக்கிறது. ஒன்று அண்டமானது இப்பொழுது இருப்பதைப் போல தான் உருவாக்கப்பட்டது. அல்லது, என்றுமே இப்பொழுது இருப்பதைப் போல தான் இருக்கிறது. 1781-ல் இம்மானுவேல் கன்ட் என்னும் தத்துவஞானியும் இதே கருத்தை வலியுருத்தினார். பின், 19வது நூற்றாண்டில், இந்த பூமியும் அண்டமும் மாறுகிறது (மாறிலி இல்லை)  என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்படத் துவங்கின. இதற்கு முக்கிய காரணம், அகழ்வாராய்ச்சியாளர்கள். அவர்களின் ஆராய்ச்சியின் படி பாறைகளும் படிமங்களும் உருவாக ஆயிரம் மில்லியன் ஆண்டுகள் பிடிக்கும் என்று உணர்ந்தார்கள். அப்படியானால் இந்த அண்டம் கி.மு.4000-ல் உருவாகியிருக்கமுடியாது அல்லவா? பிற்பாடு ஜெர்மன் இயற்பியல் விஞ்ஞானியான லுட்விக் போல்ஸ்மேன் (Ludwig Boltzmann) என்பவர் கொடுத்த ஆதாரங்களும் இதையே உறுதிப்படுத்தியது. சர் ஐசக் நியூட்டனின் 'ஈர்ப்பியல் விதி' (Law
of Gravity) படி, இந்த அண்டத்தில் இருக்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் மற்றொரு நட்சத்திரத்தை கட்டாயம் ஈர்க்கும். அப்படி இரு(ஈர்)க்கும் பொழுது இந்த அண்டம் எப்படி நிலையானதாக இருக்கும்? அப்படி இருந்தால் அவை ஒன்றோடு ஒன்று முட்டி collapse ஆகிவிடும் அல்லவா? ஆனால், அதுவே எண்ணிக்கையில் அடங்காத நட்சத்திரக் கூட்டமாக இருந்தால் அவை நிலையாக இருக்காது. மேலும் இந்த அண்டத்தின் ஏதாவது ஒரு  நிலையை கண்டுபிடித்தால், அதை வைத்து அதன் தோற்றத்தை கணிக்க முடியும் என்றும் நம்பினார்கள். நியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை கணிக்க தவறியது, இந்த அண்டம் விரிவடையலாம்  அல்லது சுருங்கலாம் என்பது. இதை ஐன்ஸ்டீன் கணித்திருந்தாலும், தன்னுடைய கண்டுபிடிப்பான சார்பு நிலைத் தத்துவத்தில்(Theory of Relativity), சில மாற்றங்களைச் செய்து இந்த பிரபஞ்சம் நிலையானது என்று மாற்றி வெளியிட்டார்.

(தொடரும்..)

|
oooOooo
                         
 
சீனு அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |