டிசம்பர் 14 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : நான் பூத்த வலைப்பூக்கள்
- கோ. இராகவன் [gragavan@gmail.com]
| | Printable version | URL |

வலைப்பூவில் நுழைந்தது தற்செயலாகத்தான். ஆனால் இன்று வலைப்பூ இல்லாமல் ஒரு நாளும் இருக்க முடிவதில்லை. எப்பொழுது நான் வலைப்பூ தொடங்கினேன் என்றும் எத்தனை வலைப்பதிவுகள் எழுதினேன் என்றும் நினைவு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. என் எழுத்துப் பிள்ளைகளில் அனைத்தும் எனக்கு ஒன்றே. ஆகையால்தான் ஐம்பது நூறு என்று எண்ணிக்கைகள் கூடிய பொழுது கூட அவைகளைச் சிறப்புப் பதிவாக எழுத எண்ணம் கூடவில்லை. அப்படியிருக்கையில் எப்படி ஒரு சில பதிவுகளை மட்டும் எடுத்துச் சொல்ல முடியும்? அது சரியா என்று நினைத்துப் பார்த்தேன். தேர்ந்தெடுப்பது மிகக் கடினம். பிறகு? கண்ணை மூடிக் கொண்டு விரலைத் தொடும் கதைதான். :-) ஆனால் ஒரு பதிவை நான் கண்டிப்பாக இட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். அதை அந்தப் பதிவிற்கான அறிமுகத்திலேயே சொல்கிறேன். இப்பொழுது பதிவிற்குப் போகலாமா?

பெண்ணைப் பெற்றவன்

இதுதான் நான் வலைப்பூவில் இட்ட முதற் கதை. ஆனால் எழுதிய முதற் கதையல்ல. இந்தக் கதை எனக்குக் கனவில் வந்தது. ஆம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கனவில் வந்து சொன்ன கதை இது. அந்தக் கதையை நினைவிருந்த வரையில் எழுதியதுதான் இது. தமிழை ஆண்டாளே...அன்றொரு ஆண்டாளே! அவளை வைத்து எழுதிய கதை. ஆனால் கதையின் நாயகன் அவளது தகப்பன். அவளைப் பெற்றதையும்..எங்கே பெற்றான்? தோட்டத்திலே கண்டு உற்றான். அப்படி உற்றதையும்...பின்னாளில் அவளாலேயே உலகபாசம் அற்றதையும் கதையில் சொல்லும் முயற்சி. அவ்வளவே!

பாண்டி பஜாரில் விஜய டி.ராஜேந்தர்

இது ஒரு நகைச்சுவை பதிவாகி விட்டது. ஏனென்றால் அவரைச் சந்தித்த பொழுது நடந்தது அப்படி. :-) நீங்களே படித்துப் பாருங்களேன்.


என் கொங்கை நின் அன்பர்

ஆகா! இதுவும் கதைதான். தலைப்பில் கொங்கை என்று வருகிறதே! அதனால் என்ன? இதுதான் பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்று கருதி வைத்த தலைப்பு. நகைச்சுவையைக் கொண்டு அறுசுவை உணவு சமைத்த காளமேகத்தின் சுவையான வரலாற்றைச் சிறுகதையாகச் சொல்லியது. இதை இன்று படித்தாலும் என் முகத்தில் புன்னகை அரும்பும்.


பன்னீர் இலையில்

திருச்செந்தூர் சென்றிருந்த பொழுது நடந்த நிகழ்ச்சி. நம்பிக் கேட்டால் நம்பியின் மருமகன் தருவான் என்பது போன்ற நிகழ்ச்சி. உடனே மக்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பியது மனம். பகிர்ந்து கொண்டேன்.

பெங்களூரில் ஒரு பெர்ஷியா

நான் நாகாக்காதவன். ஆமாம். உணவு விஷயத்தில்தான். அப்படி ஒரு பெர்ஷியன் ஓட்டலில் ரசித்து ருசித்து சாப்பிட்ட கதைதான் இந்தப் பதிவு.

2006லாவது இலங்கைக்குப் போவோம்

இந்தப் பதிவைத்தான் நான் கண்டிப்பாக எடுத்துச் சொல்ல நினைத்தது. 2006ன் தொடக்கத்தில் இட்ட முதல் பதிவு. இலங்கைக்குப் போகும் ஆசையையும் அங்கு தமிழர் படும் துயரங்களையும் இந்திய அரசின் நிலையையும் வைத்து எழுதப்பட்ட பதிவு. ஓராண்டு ஆகப் போகிறது. ஆனால் ஆசை இன்னும் நிறைவேறவில்லை. அன்றிருந்ததை விட இன்று நிலமை இன்னமும் மோசமாக இருக்கிறது. ஆனாலும் நிலமை மாறும் என்ற நம்பிக்கை மட்டும் மாறவில்லை. நான் நிறைய பின்னூட்டங்களை வாங்கிய முதல் பதிவு இது. ஆனால் இந்தப் பதிவில் நான் பின்னூட்டமே இடவில்லை. என்னுடைய கருத்தை நான் பதிவிலேயே சொல்லி விட்டேன் என்று கருதியால் அப்படிச் செய்தேன்.

பரபரப்புப் புத்தகமும் பக்குவமற்ற கொள்கையும்

டாவின்சி கோடு திரைப்படம் தமிழகத்தில் தடை செய்யப் பட்ட பொழுது அதை எதிர்த்து எழுதியது. தமிழக அரசின் அந்தச் செயல்பாடு நியாயமானதாகத் தோன்றாமையால் எழுதிய பதிவு இது.

அறுவர் தந்த இசையாறுகள்

எனக்குப் பிடித்த பாடல்கள் எக்கச்சக்கம். ஆனால் மிகவும் பிடித்த பாடகர்கள் குறைவு. அப்படிப் பிடித்த ஆறு பாடகர்களின் ஆறு பாடல்களை ஆறு காய்ச்சல் வலைப்பூக்களைப் பிடித்திருந்த பொழுது எழுதியது. நீங்களும் படித்துப் பாருங்கள். பெரும்பாலான பாடல்கள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்த பாடல்களாகத்தான் இருக்கும்.

| |
oooOooo
                         
 
கோ. இராகவன் அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |