டிசம்பர் 16 2004
தராசு
கட்டுரை
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
திரைவிமர்சனம்
கட்டுரை
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  தராசு : தொடரும் அலங்கோலங்கள்
  - மீனா
  | Printable version |

  டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வந்த ஒரு மாணவனும் மாணவியும் வகுப்பறையிலேயே உடல் உறவில் ஈடுபட்டுள்ளனர். இதை அந்த மாணவன் கேமரா செல்போன் மூலம் படம் பிடித்து, அந்தப் படத்தை நல்ல விலைக்கு விற்கவும் செய்திருக்கிறான். இந்த அசிங்கத்தை சி.டியாகத் தயாரித்து விற்றதாக ஒரு இணையதள நிர்வாகியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளார்கள். சில நாட்களுக்கு முன்புதான் பிரபல நடிகை ஒருவருடைய குளியல் காட்சிகள் இணையத்தில் உலவிக்கொண்டிருந்தது. சம்மந்தப்பட்ட காட்சியில் தோன்றியவர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நடிகையே இல்லை என்று அவரது தரப்பிலிருந்து பலமாகச் சொல்லப்பட்டு வந்தாலும் போலீஸ் தரப்பில் உண்மையைக் கண்டறிய முழு முயற்சியும் எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை தலைவர் கூறியுள்ளார்.

  இந்தியாவில் தற்போது சைபர் கிரைம் எனப்படும் இணையம் சார்ந்த குற்றங்கள் பெருமளவு பெருகியுள்ளன. பணமோசடி விவகாரங்கள் தொடங்கி, முகம் சுளிக்க வைக்கும் ஆபாசக் காட்சிகள் வரை பலதரப்பட்ட குற்றங்கள் பெருகிவந்தாலும் அவற்றைத் தடுப்பதற்குறிய முறையான சட்ட நடைமுறைகள் நம்மிடம் இல்லாததே சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் சுலபமாக தப்ப காரணமாக அமைகிறது. சைபர் கிரைம் டிப்பார்ட்மெண்ட் என்று தனியாக ஒரு துறை காவல் துறையில் செயல்பட்டு வந்தாலும், இந்தக் குற்றத்திற்கு இது தான் தண்டனை என்று நமது நீதிபதிகளால் திட்டவட்டமாக கூற இயலவில்லை.

  இந்நிலை மாற - கேமரா செல்போனகள் மற்றும் இணையத்தின் மூலமாக பரவிவரும் பாலியல் வக்கிரங்களைத் தடுக்க நமது அரசாங்கம் சிறப்புச் சட்டங்களை வெகுவிரைவில் கொண்டுவரவேண்டும். மேலும் இன்றைய இளைஞர்கள் - இளைஞிகள் மத்தியில் பெருகிவரும் சைபர் செக்ஸ் தொடர்பான நிகழ்சிகளைத் தடுக்க பெற்றோர்களது முறையான ஆலோசனையும் கண்காணிப்பும் நிச்சயம் தேவை.  மேற்கூறிய பள்ளி மாணவன் ஒரு பெரிய தொழிலதிபரின் மகன் என்றும் அவனைக் கண்காணிக்க யாரும் இல்லாததாலேயே இத்தகைய செயல்களில் அவன் ஈடுபட்டதாகவும் டெல்லி துணைக் கமிஷனர் கூறியுள்ளார்.

  தேவை இருக்கிறதோ இல்லையோ, தங்கள் நலனிற்காக பலதரப்பட்ட சட்டங்களைப் போட்டு மக்களை ஆட்டிப்படைக்கும் நம் அரசியல்வாதிகள் இந்த சைபர் கிரைம் விஷயத்தில் தேவையான சட்டங்களை இயற்ற உடனடியாக முன்வரவேண்டும். நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று அழைக்கப்படும் இளம் மாணவச்சமுதாயத்தைச் சீரழியாமல் விடாமல் காப்பாற்றவேண்டிய கடமை இன்றைய அரசாங்கத்தினுடையது. காப்பாற்றுவார்களா?

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |