டிசம்பர் 16 2004
தராசு
கட்டுரை
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
திரைவிமர்சனம்
கட்டுரை
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  காந்தீய விழுமியங்கள் : இந்து- முஸ்லீம் பிரச்னைகள் - II
  - ஜெ. ரஜினி ராம்கி
  | Printable version |

  காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து கிளம்பி இந்தியாவுக்கு வந்து தங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த போதுதான் இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையே யுத்தம் ஆரம்பித்தது. துருக்கி யார் பக்கம் என்பது பற்றிய உலகாளவிய பிரச்னை பல நாடுகளிலும் விவாதிக்கப்பட்டிருந்த நேரம் அது. துருக்கி எந்த முடிவு எடுத்தாலும் அது இந்தியாவிலிருக்கும் முஸ்லீம்களை வெகுவாகவே பாதிக்கும் என்பதை அறிந்து கொண்ட காந்திஜி, தென்னாப்பிரிக்காவிலேயே ஹிந்து - முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி பேசவும் எழுதவும் ஆரம்பித்தார். அது இந்தியாவில் படித்தவர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது. இந்தியாவுக்கு வந்ததும் முதல் காரியமாக முஸ்லீம் மத தலைவர்களுடன் இப்பிரச்னை குறித்து விவாதித்தார். காந்திஜியின் வாழ்நாளில் மட்டுமல்ல இந்திய தேசத்தின் வரலாற்றிலேயே முக்கியமான நாளாக 1999 அக்டோபர் 17ஆம் தேதியை சொல்லலாம். அன்றுதான் இந்து-முஸ்லீம் ஓற்றுமையை வலியுறுத்தி முதல் முறையாக வெற்றிகரகமாக நாடெங்கும் சாத்வீக முறையில் உண்ணாவிரதம், போராட்டங்கள் நடைபெற்றன. இதையே கிலாபத் நாள் என்று பெருமையாக குறிப்பிடுகிறார்கள் காந்திஜியின் அகிம்சா வழி வந்தவர்கள். மத ஒற்றுமையை வலியுறுத்தி காந்திஜியால் அழைப்பு விடப்பட்டிருந்த இந்த புதுமையான போராட்டம்தான் சுதந்திர போராட்டத்திற்கு தூண்டுகோலாக இருந்தது.

  முதல் உலகப்போருக்கு பின்னர் துருக்கிக்கு நேர்ந்த கதி, இந்திய சமூகத்தை புரட்டி போட்டு ஒற்றுமைக்கு உலைவைத்தது. கொடுத்த வார்த்தையை காப்பாற்றாத இங்கிலாந்துக்கு எதிரான போராட்டத்தில் முஸ்லீம் மக்களோடு இந்துக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டியது தங்களது கடமை என்றார் காந்திஜி. கிலாபத் பிரச்னை என்பது கடினமான பிரச்னை. முஸ்லீம்களிடமிருந்து விலகி நிற்கும் இந்துக்களின் மெளனம் எதிர்கால இந்தியாவை அமைதியில்லாத தேசமாக்கிவிடும் என்கிற தொலைநோக்கு பார்வை ஆச்சரியமான ஒன்று.

  'இப்பிரச்னை இங்கிலாந்தின் கெளரவத்தையே பாதிக்கிறது. பிரத மந்திரி தானே வாக்குறுதி கொடுத்திருந்தார். கொளரவத்திற்கு களங்கம் வந்துவிட்டால், படைபலம், புகழ் என்றெல்லாம் இருந்து என்ன பயன்? நல்ல புத்தி வந்து முஸ்லீம்களுக்கு நியாயம் வழங்கப்படுமென்று நான் நினைக்கிறேன். எதிர்பாராத விஷயங்கள் நடக்குமெனில் அரசுடன் ஒத்துழைக்க மறுக்கும்படி முஸ்லீம்களுக்கு நான் யோசனை சொல்கிறேன்'  (யங் இந்தியா, 3.12.1919)

  இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அரசுக்கான வைஸ்ராய், பதினான்கு அம்ச திட்டங்களை கொண்டுவந்து இந்திய முஸ்லீம்களை திருப்திப்படுத்த முயற்சித்தது முடியவில்லை. எப்படியாவது பிரிட்டன் துருக்கியுடன் சமாதான உடன்படிக்கை மேற்கொண்டு பழைய நிலைக்கு வருவதுதான் காந்திஜியின் விருப்பமாக இருந்தாலும் அதற்கு பிரிட்டனும் முன்வரவில்லை. துருக்கி சம்பந்தமாக பிரிட்டிஷ் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலே போனது.  துருக்கியில் தொடர்ந்து கொண்டிருந்த சுல்தான்களின் ஆட்சியும் முடிவுக்கு வந்து 1923ஆம் வருஷம் அக்டோபர் 23ம் தேதி துருக்கி தன்னை ஒரு குடியரசாக பிரகடனம் செய்து கொண்டது தனி கதை.

  கிலாபத் இயக்கமாக நடைபெற்ற காலத்திலேயே பரபரப்பாக பேசப்பட்ட இன்னொரு விஷயம் மாட்டிறைச்சி. பக்ரீத் பண்டிகையின் போது மாட்டிறைச்சிக்காக முஸ்லீம்கள் பசுமாடுகளை கொல்வதும் அவற்றை ஹிந்துக்கள் தடுத்து பசுக்களை காப்பாற்ற முனைவதும் நாடு முழுவதும் பல பிரச்னைகளுக்கு இட்டுச் சென்றது. காந்திஜி இதற்கு சொன்ன தீர்வு, இந்தியர்கள் மத வேறுபாடின்றி புலால் உணவை நீக்கவேண்டும் என்பதுதான். பசுக்களை வழிபடுவது என்பது ஹிந்து மதத்தில் ஒரு முக்கியமான நம்பிக்கையாகவும் இஸ்லாமில் மாட்டிறைச்சிக்காக பசுக்களை கொல்வது ஒரு சடங்காகவும் அமைந்து போனதால் எழுந்த பிரச்னை இன்றும் கூட நீடிக்கிறது.

  'இந்து - முஸ்லீம்களுக்கிடையே இன்னும் பரஸ்பர அவநம்பிக்கை அதிகம் இருக்கிறது. முஸ்லீம்களின் நேர்மையை இந்துக்கள் சந்தேகிக்கின்றனர். இந்திய முஸ்லீம்கள் வெளியிலுள்ள முஸ்லீம் அரசுகளுக்கு இந்தியாவில் இன்னொரு முஸ்லீம் சாம்ராஜ்யத்தை உருவாக்க உறுதுணையாக இருப்பார்கள் என்பது இந்துக்களின் வாதம். இந்துக்கள் பெரும்பான்மையானவர்களாக இருப்பதால் தங்களை நசுக்கிவிடுவார்களோ என்று முஸ்லீம்கள் பயப்படுகின்றனர். இருதரப்பினரும் சக்தியற்றவர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.

  ...பிரித்து தூரத்தில் வைப்பதற்கு இருபிரிவினரிடையும் ஒன்றுமில்லை. பசுவை விட்டால் இந்துக்களுடக்கு முஸ்லீம்களிடம் சண்டையிட வேறு காரணம் எதுவுமில்லை. முஸ்லீம்கள் பசுவை கொன்றுதான் ஆகவேண்டும் என்கிற மதக்கட்டுப்பாடும் கிடையாது. உண்மை என்னவென்றால் இதற்கு முன்னர் நமது பிரச்னைகளை தீர்த்துக்கொண்டு ஓரே நாட்டு மக்களாக வாழ நாம் முயற்சி செய்ததில்லை. இப்பொழுதுதான் வாய்ப்ப்பு கிடைத்துள்ளது. (யங் இந்தியா, 11.5.1921)

  இந்து, முஸ்லீம்கள் என்கிற மத ரீதியிலான அமைப்புகள் இன்னும் எத்தனை காலத்திற்கு இருக்கப்போகின்றன?  இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த மனங்களை இணைக்க முடியுமா? அதற்கு கலப்பு மணம் உதவுமா? இந்து பையனும் முஸ்லீம் பொண்ணும் காதலிப்பதை சிலிர்க்க வைக்கும்படி சினிமாவில் சொல்ல முடியும். நிஜ வாழ்க்கையில் அது இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு உதவுமா?  காந்திஜி என்ன சொல்கிறார்? பார்க்கலாம்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |