டிசம்பர் 16 2004
தராசு
கட்டுரை
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
திரைவிமர்சனம்
கட்டுரை
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : இந்த வாரம்
  - பாஸ்டன் பாலாஜி
  | Printable version |

  * அமெரிக்காவின் 'பாரத ரத்னா'விற்கு ஈடான 'ஜனாதிபதியின் சுதந்திர பதக்க'ங்களை, ஈராக் போரின் சூத்திரதாரிகள் பெறுகிறார்கள். ஈராக்கிடம் உலகை அழிக்கவல்ல மாபெரும் அணுகுண்டுகள் இருப்பதாக சொன்ன சிஐஏ தலைவர் ஜார்ஜ் டெனட் (George Tenet); படையெடுப்புக்கு கால்கோளிட்ட டாமி ·ப்ராங்க்ஸ் (Tommy Franks); ஆக்கிரமிப்பைக் கையாண்ட பால் ப்ரெம்மர் (Paul Bremer) பெறுகிறார்கள்.

  * பாலஸ்தீன தேர்தல் களத்தின் முக்கிய வேட்பாளர் மர்வான் பர்கௌதி (Marwan Barghouti) போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இனி, இஸ்ரேலின் ஆசி நிறைந்த மஹ்மூத் அப்பாஸ் (Mahmoud Abbas) ஜெயிப்பதை தடுப்பது கடினம்.

  * அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெர்னார்ட் கெரிக். பல்வேறு தகிடுதத்தங்களில் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருப்பதால் பெர்னார்ட் கெரிக் (Bernard Kerik) தன்னுடைய பதவியை ஏற்றுக் கொள்ள மறுக்குமாறு கட்டளையிடப் பட்டிருக்கிறது. இரண்டு மனைவிகள், தாதியின் குடியுரிமை பிரச்சினை என்று பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

  David Blunkett* இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் டேவிட் ப்ளன்கெட் (David Blunkett) ராஜினாமா செய்துள்ளார். மணமான ஒருத்தியுடன் வைத்துக் கொண்ட முறைதவறிய உறவு முதற்காரணம். இங்கும் தாதி விவகாரம்தான். தோழியின் செவிலித்தாயின் விசாவை விரைவுபடுத்தியது, டேவிடின் வேலைக்கே வேட்டு வைத்திருக்கிறது.

  * ஆப்பிரிக்காவின் சுதான் (Sudan) நாட்டின் டார்·பர் போராளிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர். பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டுமானால், அரசு அவர்களைத் தாக்குவதை நிறுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வாக்கு கொடுத்திருந்தாலும், சென்ற பல தடவைகள் போல், இந்த முறையும் மீறுவார்கள் என்று அச்சம் நிலவுகிறது.

  * அடுத்த வருடம் முதல் சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் திருப்பூர் முதலாளிகளுக்கு கொண்டாட்டம். ஜனவரி ஒன்றாம் தேதி முதல் டெக்ஸ்டைல் ஒதுக்கீடுகள் அகற்றப்படுகிறது. தென் அமெரிக்க நாடுகள், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் பாதிக்கப்படலாம். இந்தியாவின் பொருளாதார கொள்கையினால் வங்கிக் கடன்களும் நெசவுத்துறையில் எளிதாகக் கிடைக்கிறது. சீனா உள்ளூரில் வரி விதிப்பதன் மூலம் தங்களின் ஏற்றுமதியை கட்டுப்பாடுக்குள் வைத்து, உலக சமன்பாட்டை காப்பதாக சொல்லி வருகிறது.

  * அமெரிக்காவில் வெகுவிரைவில் விமானத்தில் பறக்கும்போதும் இனி எளிதாக இணையம் சுற்றலாம். செல்பேசியும் அனுமதிக்கப் போகிறார்கள். (நடு சீட்டில் ஒருவர் அமர்ந்திருக்க, இடப்பக்கம் செல்பேசி பேச்சும், வலப்பக்கம் லொட்டு லொட்டென்ற கீபோர்ட் தட்டும் சிறுகதை சத்தமும், இந்தியா செல்ல எடுக்கும் இருபது மணி நேரமும் கேட்டால் எப்படி இருக்கும்?)

  * கூகிள் மேலும் சில முன்னேற்றங்களை அறிவித்தது. வார்த்தைகளை பாதி அடிக்கும்போதே, தேட நினைப்பதை கணிக்கும் வசதி கிடைக்கிறது. தேட வெண்டிய பெரிய சொற்றொடரை, இரண்டு எழுத்துக்களின் மூலமே கொண்டு வருவதன் மூலம் தட்டச்சும் நேரமும் குறையும். தேட நினைக்காத வேறு சிலவற்றையும் தேடி அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். உலகத்தின் பல்வேறு பெரிய பல்கலைகளான ஹார்வார்ட், ஆக்ஸ்·போர்ட் போன்றவற்றின் புத்தகங்களை இலவசமாக விரல் நுனியில் கொண்டு வருவது இரண்டாவது நிகழ்வு.

  * ஸ்பெயினின் பிரதம மந்திரி ஓஸே லுயி ரோட்ரிக்ஸ் ஸபாடெரோ (Josளூ Luis Rodrங்guez Zapatero) முன்னாள் பிரதமரை குற்றஞ்சாட்டியுள்ளார். மார்ச் பதினொன்று நிகழ்ந்த மத்ரீத் (Madrid) குண்டு வெடிப்பு சம்பந்தமான எல்லா ஆவணங்களும் நீக்கப்பட்டிருக்கின்றது. ஒரு பேப்பர், ஒரு சிறிய கணினி ஆவணம் கூட இல்லாமல் துப்புரவாக சுத்தம் செய்திருக்கிறார் ஓஸே மரையா அஸ்னார் (Josளூ Marங்a Aznar). ரயில் குண்டு வெடிப்புக்கு பின் மூன்றே நாள்தான் ஆட்சியில் இருந்தார் மரையா அஸ்னார். குண்டு வெடித்தவுடன் பாஸ்க் (Basque) பிரிவினைவாதிகள்தான் காரணம் என்று சொல்லியும் வந்தார். பின், அல்-க்வெய்தா என்று கண்டுபிடிக்கப்பட்டது. எட்டாண்டு கால அரசில் இருந்து ஒரு ரெகார்ட் கூட இல்லாமல் கழற்றியிருக்கிறது முன்னாள் அரசு.

  * அமெரிக்காவில் வங்கிகளுக்குள் நிலவும் வட்டி விகிதம் 2.25% ஆக உயர்த்தப்பட்டது. கால் கால் விகிதமாக ஏற்றி வருகிறார் ஆலன் க்ரீன்ஸ்பான். எனினும், அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 56 பில்லியன் டாலரை எட்டுகிறது. புஷ் வர்த்தக, பட்ஜெட் பற்றாக்குறைகளையும் குறைத்து, யூரோவுக்கு எதிராக சரியும் டாலரையும் நிலைநிறுத்த திட்டங்கள் கொடுக்கப் போகிறார்.

  * ஈராக் போரை டோனால்ட் ரம்ஸ்·பீல்ட் (Donald Rumsfeld) சரிவர செயல்படுத்தவில்லை என்று பலரும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்து ஆளுங்கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகும் வாய்ப்புள்ள ஜான் மெக்கேன் (John McCain) 'நம்பிக்கையில்லை' என்று அறிவித்துள்ளார். ரம்ஸ்·பீல்டீன் ராஜினாமா¨ கோறுகிறார். அமெரிக்கப் படைகளை ஈராக்கில் மேலும் குவிக்கவும் அறைகூவியுள்ளார்.

  * இங்கிலாந்தில் செப்டெம்பர் 11-க்குப் பிறகு தீவிரவாதிகள் என்று சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவர்கள் நிறைய பேர். மூன்று வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு நீதிவிசாரணை கிடைக்கவில்லை. வழக்குப் போடாமல் வெளிநாட்டவர்களை சிறையில் அடைப்பது நீதிக்குப் புறம்பானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இவர்களில் சிலர் நாடுகடத்தப்பட்டால், சொந்த நாட்டில் தூக்கு தண்டனைக்கு உள்ளாவார்கள். இங்கிலாந்தில் மரணதண்டனை கிடைக்கும் என்று அறிந்தே ஒருவரை நாடுகடத்துவதும் அநீதியாகும்.

  * பிரான்ஸ் நாட்டில் வெகு பிரும்மாண்டமான, பள்ளத்தாக்கின் இயற்கையோடு ஒட்டி உறவாடி நிற்கும் அழகிய மிலாவ் வயடக்ட் (Millau viaduct) என்னும் பாலம் திறக்கப்பட்டது. ஈ·பில் கோபுரத்தை விட சில இடங்களில் உயரமாகவும், மிலாவ் பள்ளத்தாக்கின் இயற்கையை ரசிக்க வைப்பதாகவும் இது இருக்கிறது.

  * காலங்கடந்து நீதி வழங்கப்பட்டாலும், அகஸ்டோ பினோஷேவிற்கு (Augusto Pinochet) சிலி நாட்டு நீதிமன்றம் வழக்குத் தொடுக்க அனுமதி கொடுத்துள்ளது. மனித உரிமை மீற்ல்களுக்காகவும் தன்னுடைய எதிரிகளைக் கொன்றதற்காகவும் முன்பு தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடியாகி விட்டது. தொண்ணூறை நெருங்கும் பினோஷே வீட்டுக் காவலில் வைக்கப்படுவார். அவர் பதுக்கி வைத்திருக்கும் எட்டு மில்லியன் டாலர்களின் தோற்றுவாய் குறித்து இன்னும் விசாரணை நடந்துவருகிறது.

  * 1970-களில் பதின்மூன்று ஜப்பானியர்களை கடத்தியதை வட கொரியா முன்பு ஒப்புக் கொண்டது. அவர்களில் இருவரின் மிச்சம் மீதியைக் கொடுத்ததில் பிரச்சினை புகைய ஆரம்பித்திருக்கிறது. கொடுத்த இருவரின் உடலுமே தேடப்பட்டு வரும் ஜப்பானியர்கள் அல்லர். கடத்தியவர்களில் ஐவரை உயிருடன் ஜப்பானிடம் ஒப்படைத்து மன்னிப்பும் கேட்டிருந்தது வட கொரியா. அதற்கு பிரதியாக 250,000 டன்கள் உணவுப் பொருட்களும், பத்து மில்லியன் டாலர் உதவியும் வழங்கியது ஜப்பான். இப்பொழுது இருவரின் உடலை ஒப்படைப்பதில் மீண்டும் பொறி பறக்க ஆரம்பித்திருக்கிறது.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |